அத்தியாயம்: 5, பாடம்: 05, ஹதீஸ் எண்: 829

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏مَحْمُودِ بْنِ لَبِيدٍ

‏أَنَّ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏أَرَادَ بِنَاءَ الْمَسْجِدِ فَكَرِهَ النَّاسُ ذَلِكَ فَأَحَبُّوا أَنْ يَدَعَهُ عَلَى هَيْئَتِهِ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ بَنَى اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ ‏

உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி) அவர்கள் (தம் ஆட்சியின்போது) மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலை(விரிவு படுத்தி)க் கட்டத் திட்டமிட்டபோது அதை மக்கள் வெறுத்தனர்; இருக்கும் அமைப்பிலேயே விட்டுவிட வேண்டும் என்று விரும்பினர். அப்போது உஸ்மான் (ரலி), “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக மஹ்மூது பின் லபீத் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 05, ஹதீஸ் எண்: 828

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏بُكَيْرًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عُبَيْدَ اللَّهِ الْخَوْلَانِيَّ ‏

‏يَذْكُرُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى ‏ ‏مَسْجِدَ الرَّسُولِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّكُمْ قَدْ أَكْثَرْتُمْ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ تَعَالَى ‏ ‏قَالَ ‏ ‏بُكَيْرٌ ‏ ‏حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ ‏ ‏بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ‏

‏ابْنُ عِيسَى ‏ ‏فِي رِوَايَتِهِ مِثْلَهُ فِي الْجَنَّةِ

உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி) அவர்கள் (தம் ஆட்சியின்போது) மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலை(விரிவு படுத்தி)க் கட்டத் திட்டமிட்டபோது அதற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்துப் பலவாறு பேசினர். அப்போது அம்மக்களிடம் உஸ்மான் (ரலி), “நீங்கள் அதிகம் பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வுக்காக – அல்லாஹ்வின் உவப்பைநாடி – பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுபவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் அல்ஹவ்லானீ (ரஹ்)

குறிப்பு :

அஹ்மத் பின் ஈஸா (ரஹ்) வழி அறிவிப்பில், “… அதைப் போன்ற ஒன்றை, சொர்க்கத்தில் அல்லாஹ் அவருக்காகக் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.