அத்தியாயம்: 5, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1073

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ‏ ‏غَدَا ‏ ‏إِلَى الْمَسْجِدِ أَوْ ‏ ‏رَاحَ ‏ ‏أَعَدَّ اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ ‏ ‏نُزُلًا ‏ ‏كُلَّمَا ‏ ‏غَدَا ‏ ‏أَوْ ‏ ‏رَاحَ

“ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வரும்போதெல்லாம் காலையிலோ மாலையிலோ அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1072

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ كَمَثَلِ نَهْرٍ جَارٍ ‏ ‏غَمْرٍ ‏ ‏عَلَى بَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ ‏

قَالَ قَالَ ‏ ‏الْحَسَنُ ‏ ‏وَمَا يُبْقِي ذَلِكَ مِنْ ‏ ‏الدَّرَنِ

“ஐவேளைத் தொழுகையின் உவமையானது, உங்களுள் ஒருவரது வீட்டு வாசலில் ஓடும் ஆழமான ஆற்றில் அவர் நாள்தோறும் ஐந்து முறை குளிப்பதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

குறிப்பு :

“(ஐவேளைக் குளியல்) அவரது உடலில் அழுக்கை மிச்சம் வைக்குமா?” என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) கேட்டதாக இமாம் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

அத்தியாயம்: 5, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1071

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏وَقَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ يَعْنِي ابْنَ مُضَرَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَفِي حَدِيثِ ‏ ‏بَكْرٍ ‏

أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ هَلْ يَبْقَى مِنْ ‏ ‏دَرَنِهِ ‏ ‏شَيْءٌ قَالُوا لَا يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ قَالَ فَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهِنَّ الْخَطَايَا

“உங்களில் ஒருவருடைய (வீட்டு) வாசலில் ஓர் ஆறு (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் நாள்தோறும் ஐந்து முறை குளித்தால் அவரது உடலில் அழுக்கேதும் இருக்குமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அதற்கு மக்கள் “அவரது உடலில் அழுக்கேதும் இருக்காது” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஐவேளைத் தொழுகைகளின் உவமை அதுவாகும். அ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் தவறுகளை அழிக்கிறான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1070

حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ يَعْنِي ابْنَ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللَّهِ كَانَتْ خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً وَالْأُخْرَى تَرْفَعُ دَرَجَةً

“தமது வீட்டில் உளூச் செய்துவிட்டு அல்லாஹ்வுக்கான கடமை(களுள் ஒன்றான தொழுகை)யை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களுள் ஒன்றுக்கு நடந்து செல்பவரின் இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)