حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا شَدَّادٌ، حَدَّثَنَا أَبُو أُمَامَةَ قَالَ :
بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ وَنَحْنُ قُعُودٌ مَعَهُ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ . فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ أَعَادَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ . فَسَكَتَ عَنْهُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَلَمَّا انْصَرَفَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَبُو أُمَامَةَ فَاتَّبَعَ الرَّجُلُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ انْصَرَفَ وَاتَّبَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْظُرُ مَا يَرُدُّ عَلَى الرَّجُلِ فَلَحِقَ الرَّجُلُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ – قَالَ أَبُو أُمَامَةَ – فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” أَرَأَيْتَ حِينَ خَرَجْتَ مِنْ بَيْتِكَ أَلَيْسَ قَدْ تَوَضَّأْتَ فَأَحْسَنْتَ الْوُضُوءَ ” . قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ ” ثُمَّ شَهِدْتَ الصَّلاَةَ مَعَنَا ” . فَقَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ . قَالَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” فَإِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ حَدَّكَ – أَوْ قَالَ – ذَنْبَكَ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கேட்டார். அவருக்குப் பதிலளிக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமைதியாக இருந்தார்கள்.
பிறகு (மீண்டும்) அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. தொழுகையும் முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிச் சென்றபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ன பதிலளிக்கின்றார்கள் என்பதை அறிவதற்காக அவர்களை நான் பின்தொடர்ந்தேன். அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குரிய தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்று கேட்டார்.
அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் உமது வீட்டிலிருந்து புறப்படும்போது அழகிய உளூச் செய்தீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம் (செய்தேன்); அல்லாஹ்வின் தூதரே!” என்றார். “பிறகு நம்முடன் சேர்ந்து நீர் தொழுதீரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள்.
அவர் “ஆம் (தொழுதேன்); அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் உமக்குரிய தண்டனையை / உமது பாவத்தை மன்னித்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)