அத்தியாயம்: 52, பாடம்: 18, ஹதீஸ் எண்: 5021

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى قَامَ حَتَّى تَفَطَّرَ رِجْلاَهُ قَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ أَتَصْنَعُ هَذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ ‏ “‏ يَا عَائِشَةُ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழும்போது தம் கால்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்குத் தொழுவார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்படிச் செய்கின்றீர்களே! உங்களின் முந்தைய, பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்டனவே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா ஆயிஷா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

அத்தியாயம்: 52, பாடம்: 18, ஹதீஸ் எண்: 5020

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، سَمِعَ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ :‏

قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى وَرِمَتْ قَدَمَاهُ قَالُوا قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ‏.‏ قَالَ ‏ “‏ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ‏”‏ ‏

நபி (ஸல்) தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுதார்கள். மக்கள், “உங்களின் முந்தைய, பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவுக்குச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 52, பாடம்: 18, ஹதீஸ் எண்: 5019

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى حَتَّى انْتَفَخَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ أَتَكَلَّفُ هَذَا وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ ‏ “‏ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ‏”‏

நபி (ஸல்) தம் பாதங்கள் புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். அவர்களிடம், “இந்த அளவுக்கு நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? உங்களின் முந்தைய, பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்கவேண்டாமா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)