அத்தியாயம்: 52, பாடம்:9, ஹதீஸ் எண்: 4991

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَأَبُو أُسَامَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ أَحَدَ أَصْبَرُ عَلَى أَذًى يَسْمَعُهُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ إِنَّهُ يُشْرَكُ بِهِ وَيُجْعَلُ لَهُ الْوَلَدُ ثُمَّ هُوَ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ ‏”‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ إِلاَّ قَوْلَهُ ‏”‏ وَيُجْعَلُ لَهُ الْوَلَدُ ‏”‏ ‏.‏ فَإِنَّهُ لَمْ يَذْكُرْهُ ‏

“தன் கட்டளைக்கு மாறு செய்தாலும் (உடனே தண்டிக்காமல்) மிகவும் பொறுமை காப்பவன் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. (மனிதர்களால்) அவனுக்கு இணை கற்பிக்கப்படுகின்றது; அவனுக்குக் குழந்தை இருப்பதாகவும் கற்பிக்கப்படுகின்றது. அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் வாழ்வாதாரத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில்  “அவனுக்குக் குழந்தை இருப்பதாகவும் கற்பிக்கப்படுகின்றது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 52, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4992

وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ قَيْسٍ قَالَ :‏

رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَا أَحَدٌ أَصْبَرَ عَلَى أَذًى يَسْمَعُهُ مِنَ اللَّهِ تَعَالَى إِنَّهُمْ يَجْعَلُونَ لَهُ نِدًّا وَيَجْعَلُونَ لَهُ وَلَدًا وَهُوَ مَعَ ذَلِكَ يَرْزُقُهُمْ وَيُعَافِيهِمْ وَيُعْطِيهِمْ ‏”‏ ‏

“தன் கட்டளைக்கு மாறு செய்தாலும் (உடனே தண்டிக்காமல்) மிகவும் பொறுமை காப்பதற்கு உயர்ந்தோன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணை உண்டென்றும் அவனுக்குக் குழந்தை உண்டென்றும் அவதூறு கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (அப்துல்லாஹ் பின் கைஸ்) அல்அஷ்அரீ (ரலி)