وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ الْفَضْلِ، الْحُدَّانِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ قَالَتْ :
عَبِثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَنَامِهِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ صَنَعْتَ شَيْئًا فِي مَنَامِكَ لَمْ تَكُنْ تَفْعَلُهُ . فَقَالَ ” الْعَجَبُ إِنَّ نَاسًا مِنْ أُمَّتِي يَؤُمُّونَ بِالْبَيْتِ بِرَجُلٍ مِنْ قُرَيْشٍ قَدْ لَجَأَ بِالْبَيْتِ حَتَّى إِذَا كَانُوا بِالْبَيْدَاءِ خُسِفَ بِهِمْ ” . فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ الطَّرِيقَ قَدْ يَجْمَعُ النَّاسَ . قَالَ ” نَعَمْ فِيهِمُ الْمُسْتَبْصِرُ وَالْمَجْبُورُ وَابْنُ السَّبِيلِ يَهْلِكُونَ مَهْلَكًا وَاحِدًا وَيَصْدُرُونَ مَصَادِرَ شَتَّى يَبْعَثُهُمُ اللَّهُ عَلَى نِيَّاتِهِمْ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உறங்கும்போது வழக்கத்துக்கு மாறாக நடந்துகொண்டீர்கள். இவ்வாறு நீங்கள் ஒருபோதும் நடந்துகொண்டதில்லையே!” என்று கேட்டோம். அதற்கு, “ஓர் ஆச்சரியமான செய்தி(யினால் நான் அவ்வாறு செய்துகொண்டிருந்தேன்). என் சமுதாயத்தாரிலே சிலர், இறையில்லம் கஅபாவில் தஞ்சம் புகுந்துள்ள குறைஷியர் ஒருவருக்காக இறையில்லத்தை நோக்கி(ப் படையெடுத்து) வருவார்கள். அவர்கள் (பைதா எனும்) சமவெளியில் இருக்கும்போது பூமிக்குள் புதைந்துபோவார்கள்” என்று கூறினார்கள்.
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! சாலையில் பல்வேறு மக்களும் திரண்டிருப்பார்களே (அவர்கள் அனைவரும் புதைந்துபோவார்களே)?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்; அவர்களில் பார்வையாளர்கள், வலுக்கட்டாயமாக அழைத்துவரப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோரும் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள். பிறகு பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாய் அவர்கள் எழுப்பப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப அவர்களை அல்லாஹ் (மறுமை நாளில்) எழுப்புவான்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)