حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ :
دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى وَهْوَ فِي بَيْتِ بِنْتِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ فَعَطَسْتُ فَلَمْ يُشَمِّتْنِي وَعَطَسَتْ فَشَمَّتَهَا فَرَجَعْتُ إِلَى أُمِّي فَأَخْبَرْتُهَا فَلَمَّا جَاءَهَا قَالَتْ عَطَسَ عِنْدَكَ ابْنِي فَلَمْ تُشَمِّتْهُ وَعَطَسَتْ فَشَمَّتَّهَا . فَقَالَ إِنَّ ابْنَكِ عَطَسَ فَلَمْ يَحْمَدِ اللَّهَ فَلَمْ أُشَمِّتْهُ وَعَطَسَتْ فَحَمِدَتِ اللَّهَ فَشَمَّتُّهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللَّهَ فَشَمِّتُوهُ فَإِنْ لَمْ يَحْمَدِ اللَّهَ فَلاَ تُشَمِّتُوهُ ”
(என் தந்தை) அபூமூஸா (ரலி), ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் மகளும் தம் மனைவியுமான உம்மு குல்ஸூம் அவர்களது) இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நான் தும்மினேன். ஆனால், என் தந்தை எனக்கு மறுமொழி கூறவில்லை. அவர்களின் மனைவி தும்மியபோது மறுமொழி கூறினார்கள்.
நான் என் தாயாரிடம் திரும்பிவந்து, நடந்ததை அவரிடம் தெரிவித்தேன். என் தாயாரிடம் அபூமூஸா (ரலி) வந்தபோது, “உங்களுக்கு அருகில் என் பிள்ளை தும்மியபோது நீங்கள் மறுமொழி கூறவில்லை; அவள் தும்மியபோது மட்டும் மறுமொழி கூறியிருக்கின்றீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு (என் தந்தை) அபூமூஸா (ரலி), “உன் பிள்ளை தும்மியவுடன் ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறவில்லை. எனவேதான், நான் அவருக்கு மறுமொழி பகரவில்லை. ஆனால், அவள் தும்மியவுடன் ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறினாள். எனவேதான், அவளுக்கு நான் மறுமொழி பகர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) , ’உங்களில் ஒருவர் தும்மியவுடன், ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு நீங்கள் மறுமொழி கூறுங்கள். அவர் ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறாவிட்டால், அவருக்கு நீங்கள் மறுமொழி கூறாதீர்கள்’ என்று கூற நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) வழியாக அன்னாரின் மகன் அபூபுர்தா பின் அபீமூஸா (ரஹ்)