அத்தியாயம்: 6, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1236

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏السَّائِبِ بْنِ يَزِيدَ ‏ ‏وَعُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَاهُ عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏يَقُولُ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ نَامَ عَنْ حِزْبِهِ أَوْ عَنْ شَيْءٍ مِنْهُ فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الظُّهْرِ كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنْ اللَّيْلِ

“ஒருவர் இரவில் வாடிக்கையாக ஓதி வருபவற்றை, அல்லது அதில் ஒரு பகுதியை ஓதாமல் உறங்கிவிட்டால் அதை அவர் ஃபஜ்ருத் தொழுகைக்கும் லுஹ்ருத் தொழுகைக்கும் இடையே ஓதினால் இரவில் ஓதியதைப் போன்றே அவருக்கு (நன்மை) எழுதப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : உமர் பின் அல்கத்தாப் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1235

و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى وَهُوَ ابْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ هِشَامٍ الْأَنْصَارِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا عَمِلَ عَمَلًا ‏ ‏أَثْبَتَهُ ‏ ‏وَكَانَ إِذَا نَامَ مِنْ اللَّيْلِ أَوْ مَرِضَ صَلَّى مِنْ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً قَالَتْ وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ لَيْلَةً حَتَّى الصَّبَاحِ وَمَا صَامَ شَهْرًا مُتَتَابِعًا إِلَّا رَمَضَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு நற்செயலைச் செய்தால் அதை வழக்கமாகச் செய்வார்கள். அவர்கள் இரவில் உறங்கி விட்டாலோ, அல்லது நேய்வாய்ப்பட்டுவிட்டாலோ பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் (இரவுத் தொழுகையை) ஸுப்ஹுவரை நின்று தொழுததை நான் கண்டதில்லை; ரமளானைத் தவிர ஒரு மாதம் முழுக்கத் தொடர்ச்சியாக அவர்கள் நோன்பு நோற்றதில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1234

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا فَاتَتْهُ الصَّلَاةُ مِنْ اللَّيْلِ مِنْ وَجَعٍ أَوْ غَيْرِهِ صَلَّى مِنْ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் போன்றவற்றால் இரவுத் தொழுகை தவறிவிட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1233

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ ‏ ‏أَنَّ ‏ ‏سَعْدَ بْنَ هِشَامِ بْنِ عَامِرٍ ‏ ‏أَرَادَ أَنْ يَغْزُوَ فِي سَبِيلِ اللَّهِ فَقَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَأَرَادَ أَنْ يَبِيعَ عَقَارًا لَهُ بِهَا فَيَجْعَلَهُ فِي السِّلَاحِ ‏ ‏وَالْكُرَاعِ ‏ ‏وَيُجَاهِدَ ‏ ‏الرُّومَ ‏ ‏حَتَّى يَمُوتَ ‏فَلَمَّا قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏لَقِيَ أُنَاسًا مِنْ أَهْلِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَنَهَوْهُ عَنْ ذَلِكَ وَأَخْبَرُوهُ أَنَّ ‏ ‏رَهْطًا ‏ ‏سِتَّةً أَرَادُوا ذَلِكَ فِي حَيَاةِ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنَهَاهُمْ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ أَلَيْسَ لَكُمْ فِيَّ أُسْوَةٌ فَلَمَّا حَدَّثُوهُ بِذَلِكَ رَاجَعَ امْرَأَتَهُ وَقَدْ كَانَ طَلَّقَهَا وَأَشْهَدَ عَلَى رَجْعَتِهَا فَأَتَى ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَسَأَلَهُ عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ :‏ ‏

أَلَا أَدُلُّكَ عَلَى أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ بِوِتْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ مَنْ قَالَ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَأْتِهَا فَاسْأَلْهَا ثُمَّ ائْتِنِي فَأَخْبِرْنِي بِرَدِّهَا عَلَيْكَ فَانْطَلَقْتُ إِلَيْهَا فَأَتَيْتُ عَلَى ‏ ‏حَكِيمِ بْنِ أَفْلَحَ ‏ ‏فَاسْتَلْحَقْتُهُ إِلَيْهَا فَقَالَ مَا أَنَا بِقَارِبِهَا لِأَنِّي نَهَيْتُهَا أَنْ تَقُولَ فِي هَاتَيْنِ ‏ ‏الشِّيعَتَيْنِ ‏ ‏شَيْئًا فَأَبَتْ فِيهِمَا إِلَّا مُضِيًّا قَالَ فَأَقْسَمْتُ عَلَيْهِ فَجَاءَ فَانْطَلَقْنَا إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَاسْتَأْذَنَّا عَلَيْهَا فَأَذِنَتْ لَنَا فَدَخَلْنَا عَلَيْهَا فَقَالَتْ ‏ ‏أَحَكِيمٌ ‏ ‏فَعَرَفَتْهُ فَقَالَ نَعَمْ فَقَالَتْ مَنْ مَعَكَ قَالَ ‏ ‏سَعْدُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَتْ مَنْ ‏ ‏هِشَامٌ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَامِرٍ ‏ ‏فَتَرَحَّمَتْ عَلَيْهِ وَقَالَتْ خَيْرًا

قَالَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَكَانَ أُصِيبَ يَوْمَ ‏ ‏أُحُدٍ

فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَنْبِئِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏ ‏أَلَسْتَ تَقْرَأُ الْقُرْآنَ قُلْتُ بَلَى قَالَتْ فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ الْقُرْآنَ قَالَ ‏ ‏فَهَمَمْتُ ‏ ‏أَنْ أَقُومَ وَلَا أَسْأَلَ أَحَدًا عَنْ شَيْءٍ حَتَّى أَمُوتَ ثُمَّ بَدَا لِي فَقُلْتُ أَنْبِئِينِي عَنْ قِيَامِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ أَلَسْتَ تَقْرَأُ ‏ ‏يَا أَيُّهَا الْمُزَّمِّلُ ‏ ‏قُلْتُ بَلَى قَالَتْ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ افْتَرَضَ قِيَامَ اللَّيْلِ فِي أَوَّلِ هَذِهِ السُّورَةِ فَقَامَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ ‏ ‏حَوْلًا ‏ ‏وَأَمْسَكَ اللَّهُ خَاتِمَتَهَا اثْنَيْ عَشَرَ شَهْرًا فِي السَّمَاءِ حَتَّى أَنْزَلَ اللَّهُ فِي آخِرِ هَذِهِ السُّورَةِ التَّخْفِيفَ فَصَارَ قِيَامُ اللَّيْلِ تَطَوُّعًا بَعْدَ فَرِيضَةٍ

قَالَ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَنْبِئِينِي عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ كُنَّا نُعِدُّ لَهُ سِوَاكَهُ وَطَهُورَهُ ‏ ‏فَيَبْعَثُهُ ‏ ‏اللَّهُ مَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنْ اللَّيْلِ فَيَتَسَوَّكُ وَيَتَوَضَّأُ ‏ ‏وَيُصَلِّي تِسْعَ رَكَعَاتٍ لَا يَجْلِسُ فِيهَا إِلَّا فِي الثَّامِنَةِ فَيَذْكُرُ اللَّهَ وَيَحْمَدُهُ وَيَدْعُوهُ ثُمَّ يَنْهَضُ وَلَا يُسَلِّمُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّ التَّاسِعَةَ ثُمَّ يَقْعُدُ فَيَذْكُرُ اللَّهَ وَيَحْمَدُهُ وَيَدْعُوهُ ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمًا يُسْمِعُنَا ثُمَّ ‏ ‏يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ مَا يُسَلِّمُ وَهُوَ قَاعِدٌ وَتِلْكَ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يَا بُنَيَّ فَلَمَّا ‏ ‏سَنَّ ‏ ‏نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَخَذَهُ اللَّحْمُ ‏ ‏أَوْتَرَ بِسَبْعٍ وَصَنَعَ فِي الرَّكْعَتَيْنِ مِثْلَ صَنِيعِهِ الْأَوَّلِ فَتِلْكَ تِسْعٌ يَا بُنَيَّ وَكَانَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا صَلَّى صَلَاةً أَحَبَّ أَنْ يُدَاوِمَ عَلَيْهَا وَكَانَ إِذَا غَلَبَهُ نَوْمٌ أَوْ وَجَعٌ عَنْ قِيَامِ اللَّيْلِ صَلَّى مِنْ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً وَلَا أَعْلَمُ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَرَأَ الْقُرْآنَ كُلَّهُ فِي لَيْلَةٍ وَلَا صَلَّى لَيْلَةً إِلَى الصُّبْحِ وَلَا صَامَ شَهْرًا كَامِلًا غَيْرَ رَمَضَانَ قَالَ فَانْطَلَقْتُ إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏فَحَدَّثْتُهُ بِحَدِيثِهَا فَقَالَ صَدَقَتْ لَوْ كُنْتُ أَقْرَبُهَا أَوْ أَدْخُلُ عَلَيْهَا لَأَتَيْتُهَا حَتَّى ‏ ‏تُشَافِهَنِي ‏ ‏بِهِ قَالَ قُلْتُ لَوْ عَلِمْتُ أَنَّكَ لَا تَدْخُلُ عَلَيْهَا مَا حَدَّثْتُكَ حَدِيثَهَا ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ هِشَامٍ ‏ ‏أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ ثُمَّ انْطَلَقَ إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏لِيَبِيعَ عَقَارَهُ ‏ ‏فَذَكَرَ نَحْوَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ هِشَامٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏انْطَلَقْتُ إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ الْوِتْرِ وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَقَالَ فِيهِ قَالَتْ مَنْ ‏ ‏هِشَامٌ ‏ ‏قُلْتُ ‏ ‏ابْنُ عَامِرٍ ‏ ‏قَالَتْ نِعْمَ الْمَرْءُ كَانَ ‏ ‏عَامِرٌ ‏ ‏أُصِيبَ يَوْمَ ‏ ‏أُحُدٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏أَنَّ ‏ ‏سَعْدَ بْنَ هِشَامٍ ‏ ‏كَانَ جَارًا لَهُ فَأَخْبَرَهُ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَفِيهِ قَالَتْ مَنْ ‏ ‏هِشَامٌ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَامِرٍ ‏ ‏قَالَتْ نِعْمَ الْمَرْءُ كَانَ أُصِيبَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ ‏ ‏أُحُدٍ ‏ ‏وَفِيهِ فَقَالَ ‏ ‏حَكِيمُ بْنُ أَفْلَحَ ‏ ‏أَمَا إِنِّي لَوْ عَلِمْتُ أَنَّكَ لَا تَدْخُلُ عَلَيْهَا مَا أَنْبَأْتُكَ بِحَدِيثِهَا

ஸஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர் (ரஹ்) (தம் பாட்டனாரைப்போல்) அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய விரும்பினார். எனவே, மதீனாவிலிருந்த தம் அசையாச் சொத்துகளை விற்று, அ(ந்தப் பணத்)தை (போருக்குத் தேவையான) ஆயுதங்கள், குதிரைகள் ஆகியன வாங்கி ரோம பைஸாந்தியர்களுடன் இறக்கும்வரை போரிட விரும்பினார். அதற்காக அவர் மதீனா வந்த போது, மதீனாவாசிகளில் சிலரைச் சந்தித்தார். அவர்கள், நபி (ஸல்) உயிருடனிருந்த காலத்தில் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவினர் இவ்வாறு (இறைவழியில் உயிர்த் தியாகம்) செய்வதில் முனைப்புக் காட்டி(அனைத்தையும் ஒதுக்கிவாழ விரும்பி)யபோது, அவர்களை அவ்வாறு செய்யக் கூடாது என நபி (ஸல்) தடை செய்ததோடு, “என்னிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்றும் நபியவர்கள் கேட்டார்கள் என்று கூறினர். மக்கள் இவ்வாறு கூறியதும் ஸஅத் (ரஹ்) மணவிலக்குச் செய்துவிட்டிருந்த தம் மனைவியை மீட்டுக்கொண்டார். மனைவியை மீட்டுக்கொண்டதற்கு (சிலரை)ச் சாட்சியாக்கினார்.

பிறகு ஸஅத் பின் ஹிஷாம் (ரஹ்), இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரு தொழுகை குறித்து வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “நான் உமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ருத் தொழுகையைப் பற்றி பூமியிலுள்ளவர்களிலேயே நன்கு அறிந்த ஒருவரைச் சொல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் (ரஹ்), “அவர் யார்?” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அவர், ஆயிஷா (ரலி) ஆவார்; அவரிடம் நீர் சென்று இது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு, பிறகு அவர் கூறும் பதிலை என்னிடம் வந்து தெரிவிப்பீராக!” என்றார்கள்.

ஸஅத் பின் ஹிஷாம் (ரஹ்) கூறுகின்றார்:

நான் ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லம் நோக்கி நடந்தேன். (அதற்கு முன்) ஹகீம் பின் அஃப்லஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று, ஆயிஷா (ரலி) அவர்களிடம் செல்ல என்னோடு வருமாறு அவரை அழைத்தேன். அதற்கு ஹகீம் பின் அஃப்லஹ் (ரஹ்), “மக்கள் (அரசியல் குழப்பங்களால்) இரு குழுவினராகப் பிரிந்துள்ளனர். இரு குழுவினருள் எவர் பக்கமும் நீங்கள் பேசவேண்டாம் என நான் ஆயிஷா (ரலி) அவர்களைத் தடுத்திருந்தேன்; அவர்கள் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் ஆயிஷா (ரலி) அவர்களை நான் சந்திப்பது சரியாயிருக்காது” எனத் தயக்கம் தெரிவித்தார்.

நான் ஹகீம் (ரஹ்) அவர்களை அறுதியிட்டு அழைத்தேன்; (அரை மனத்தோடு) அவர் என்னுடன் வந்தார். நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லம் நோக்கி நடந்து சென்று, அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டோம். அவர்கள் அனுமதியளித்தவுடன் நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) ஹகீம் பின் அஃப்லஹ் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு, “ஹகீம்தானே?” என்று கேட்டார்கள். ஹகீம், “ஆம்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனக் கேட்டார்கள். அதற்கு ஹகீம், “ஹிஷாமின் மகன் ஸஅத்” என்று பதிலளித்தார்கள். “எந்த ஹிஷாம்?” என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். “ஆமிர் (ரலி) அவர்களின் மகன்” என்றார் ஹகீம். உடனே ஆயிஷா (ரலி), “ஆமிருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக” எனப் பிரார்த்தித்துவிட்டு, அவர் குறித்து நல்லவற்றைக் கூறினார்கள்.

நான், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “நீ குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (ஓதியிருக்கி றேன்)” என்றேன். “நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்துவிடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும்வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன்.

பின்னர் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிக் கூறுங்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, “நீ யா அய்யுஹல் முஸ்ஸம்மில்… (எனத் தொடங்கும் 73ஆவது) அத்தியாயத்தை ஓதியதில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (ஓதியிருக்கிறேன்)” என்றேன். “வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், இந்த அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களின் மூலம் இரவுத் தொழுகையைக் கடமையாக்கினான். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஓராண்டுக் காலம் (இரவுத் தொழுகையை) நின்று தொழுதனர். அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரை அல்லாஹ் பன்னிரண்டு மாதங்கள் வானிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டான். பின்னர் அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரில் அல்லாஹ் சலுகையை அறிவித்தான். எனவே, கடமையாக இருந்த இரவுத் தொழுகை பின்னர் நஃபில் தொழுகையாக மாறிற்று” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

நான், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரு தொழுகை பற்றிக் கூறுங்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்துவைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் நாடிய நேரத்தில் அவர்கள் எழுந்து பல் துலக்கி, உளூச் செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தி(ன் இறுதியி)ல்தான் அவர்கள் அமர்வார்கள். பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு ஸலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள். (ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் தொனியில் ஸலாம் கொடுப்பார்கள். ஸலாம் கொடுத்த பின் உட்கார்ந்தவாறே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அருமை மகனே! ஆக, இவை பதினோரு ரக்அத்கள் ஆகும். பிற்பாடு நபி (ஸல்) அவர்கள் முதுமையடைந்து, அவர்களுக்குச் சதை போட்ட பின்னர் ஒற்றைப்படையாக ஏழு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்களில் முன்பு செய்ததைப் போன்றே செய்வார்கள். அருமை மகனே! இவை ஒன்பது ரக்அத்கள் ஆகும்.”

“(பொதுவாக) நபி (ஸல்) ஒரு தொழுகையைத் தொழுதால் அதை நிரந்தரமாகக் கடைப்பிடிப்பதையே விரும்புவார்கள். இரவுத் தொழுகைக்கு எழ முடியாதபடி உறக்கமோ நோயோ மிகைத்துவிட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழு(து அதை ஈடு செய்)வார்கள். நபி (ஸல்) முழுக் குர்ஆனையும் ஒரே இரவில் ஓதியதாகவோ, விடியும்வரை இரவு முழுக்கத் தொழுததாகவோ, ரமளான் அல்லாத மாதங்களில் எதிலும் ஒரு முழு மாதமும் நோன்பு நோற்றதாகவோ நான் அறியேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) கூறியதை அவர்களிடம் அறிவித்தேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “ஆயிஷா (ரலி) கூறியது உண்மையே. நான் அவர்களை அண்மிக்கக்கூடியவனாக / அவர்களிடம் செல்லும் சூழ்நிலையில் இருப்பின் அவர்களிடம் சென்று இந்த ஹதீஸை நேரடியாக அவர்களிடமே கேட்டிருப்பேன்” என்றார்கள். நான், “நீங்கள் அவர்களிடம் போகமாட்டீர்கள் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் அவர்கள் கூறியதை உங்களிடம் அறிவித்திருக்கமாட்டேன்” என்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸஅத் பின் ஹிஷாம் (ரஹ்)


குறிப்புகள் :

மேற்காணும் நிகழ்வு, மதீனாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின்போது நடைபெற்றதாகும்.

முஆத் பின் ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஸஅத் பின் ஹிஷாம் (ரஹ்) தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டுப் பிறகு தம் அசையாச் சொத்துகளை விற்பதற்காக மதீனாவுக்கு வந்தார் …” எனத் தொடங்குகிறது.

ஸயீத் பின் அபீஅரூபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, வித்ரு தொழுகை பற்றி வினவினேன் …” என்று ஸஅத் பின் ஹிஷாம் (ரஹ்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும், “எந்த ஹிஷாம்?” என ஆயிஷா (ரலி) கேட்டார்கள். நான், “ஆமிரின் மகன்” என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி), “ஆமிர் ஒரு நல்ல மனிதராய்த் திகழ்ந்தார்; உஹதுப் போரில் உயிர் நீத்தார்” என்று குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது.

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸஅத் பின் ஹிஷாம் (ரஹ்) என் அண்டை வீட்டாராய் இருந்தார். அவர் தம் மனைவியை மணவிலக்குச் செய்து விட்டிருந்தார்” என்றும் “ஆயிஷா (ரலி), ‘எந்த ஹிஷாம்’ என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் (ரஹ்), ‘ஆமிர் (ரலி) அவர்களின் மகன்’ என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ‘அவர் நல்ல மனிதராய்த் திகழ்ந்தார்; உஹதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பங்கேற்றுக் கொல்லப்பட்டார்’ என்று கூறினார்கள்; ஹகீம் பின் அஃப்லஹ் (ரஹ்) ‘நீங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் செல்லமாட்டீர்கள் என நான் அறிந்திருந்தால் அவர்களைப் பற்றி உங்களிடம் நான் அறிவித்திருக்கமாட்டேன்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்” என்று ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

“ஆமிர் (ரலி) அவர்கள் உஹதுப் போரில் உயிர் நீத்தவர் ஆவார்” என்று கத்தாதா (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.