அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1244

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ ‏

‏مَنْ صَلَّى مِنْ اللَّيْلِ فَلْيَجْعَلْ آخِرَ صَلَاتِهِ وِتْرًا فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَأْمُرُ بِذَلِكَ

இரவில் தொழுபவர், வித்ரை இறுதித் தொழுகையாக ஆக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்டுவந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1243

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَسُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَاصِمٌ الْأَحْوَلُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بَادِرُوا ‏ ‏الصُّبْحَ بِالْوِتْرِ

“சுப்ஹுக்கு முன் விரைந்து வித்ரைத் தொழுதுவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1242

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏وَبُدَيْلٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏

‏أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا بَيْنَهُ وَبَيْنَ السَّائِلِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ صَلَاةُ اللَّيْلِ قَالَ ‏ ‏مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَصَلِّ رَكْعَةً وَاجْعَلْ آخِرَ صَلَاتِكَ وِتْرًا ثُمَّ سَأَلَهُ رَجُلٌ عَلَى رَأْسِ الْحَوْلِ وَأَنَا بِذَلِكَ الْمَكَانِ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَا أَدْرِي هُوَ ذَلِكَ الرَّجُلُ أَوْ رَجُلٌ آخَرُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏وَبُدَيْلٌ ‏ ‏وَعِمْرَانُ بْنُ حُدَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏وَالزُّبَيْرُ بْنُ الْخِرِّيتِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلَ رَجُلٌ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَا بِمِثْلِهِ وَلَيْسَ فِي حَدِيثِهِمَا ثُمَّ سَأَلَهُ رَجُلٌ عَلَى رَأْسِ الْحَوْلِ وَمَا بَعْدَهُ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எப்படித் தொழ வேண்டும்?” என்று கேட்டார். அப்போது நான் நபியவர்களுக்கும் கேள்வி கேட்டவருக்கும் இடையே இருந்தேன். அதற்கு நபி (ஸல்), “(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ருத்) தொழுது கொள்வீராக! உமது தொழுகையின் இறுதியாக வித்ரை அமைத்துக்கொள்வீராக!” என்று விடையளித்தார்கள். (இந்நிகழ்விற்குப் பிறகு) ஓராண்டு கழிந்து நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் (அதே கேள்வியைக்) கேட்டார். அப்போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடுத்து அதே இடத்தில் (அவ்விருக்குமிடையே) இருந்தேன். இ(ப்போது கேள்வி கேட்ட)வர் முன்பு கேள்வி கேட்டவர்தாமா, அல்லது வேறு மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை. அவரிடமும் நபி (ஸல்) அவர்கள் முன்னர் கூறியதைப் போன்றே பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்பு:

முஹம்மது பின் உபைத் அல்-உபரீ (ரஹ்) வழி அறிவிப்பில், ஓராண்டுக்குப் பின்னர் ஒருவர் வந்து அதே கேள்வியைக் கேட்டது பற்றிய விபரம் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1241

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏وَحُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏حَدَّثَاهُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ صَلَاةُ اللَّيْلِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ

ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எப்படித் தொழ வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ருத்) தொழுதுகொள்ளுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1240

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

‏أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ صَلَاةِ اللَّيْلِ فَقَالَ ‏ ‏مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِرَكْعَةٍ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை குறித்துக் கேட்டார். அதற்கு, “(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ருத்) தொழுதுகொள்ளுங்கள்!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அவரின் மகன் ஸாலிம் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1239

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

‏أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ صَلَاةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيَ أَحَدُكُمْ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். ஆனால், உங்களில் ஒருவர் சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் (வித்ருத்) தொழட்டும்! அது, அவர் (அதற்குமுன்) தொழுதவற்றை ஒற்றையாக ஆக்கிவிடும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)