حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ وَأَبُو كَامِلٍ قَالَا حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ :
سَأَلْتُ ابْنَ عُمَرَ قُلْتُ أَرَأَيْتَ الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْغَدَاةِ أَؤُطِيلُ فِيهِمَا الْقِرَاءَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنْ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَيُوتِرُ بِرَكْعَةٍ قَالَ قُلْتُ إِنِّي لَسْتُ عَنْ هَذَا أَسْأَلُكَ قَالَ إِنَّكَ لَضَخْمٌ أَلَا تَدَعُنِي أَسْتَقْرِئُ لَكَ الْحَدِيثَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنْ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَيُوتِرُ بِرَكْعَةٍ وَيُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ كَأَنَّ الْأَذَانَ بِأُذُنَيْهِ
قَالَ خَلَفٌ أَرَأَيْتَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ وَلَمْ يَذْكُرْ صَلَاةِ و حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ بِمِثْلِهِ وَزَادَ وَيُوتِرُ بِرَكْعَةٍ مِنْ آخِرِ اللَّيْلِ وَفِيهِ فَقَالَ بَهْ بَهْ إِنَّكَ لَضَخْمٌ
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “காலைத் தொழுகை(சுப்ஹு)க்கு முன்னுள்ள (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் நீண்ட அத்தியாயங்களை ஓதலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள்; ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள்” என்று கூறினார்கள். நான் (இடைமறித்து), “இதைப் பற்றி உங்களிடம் நான் கேட்கவில்லை” என்றேன். அதற்கு அவர்கள், “நீர் ஒரு விளங்காத மனிதராக இருக்கின்றீரே! என்னை முழு ஹதீஸையும் சொல்ல விடமாட்டீரா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள். காலைத் தொழுகை(ஸுப்ஹு)க்கு முன்(சுன்னத்) இரண்டு ரக்அத்களை, (ஸுபுஹின்) இகாமத் அவர்களின் செவிகளில் விழுந்துவிடுவதைப் போன்று (சுருக்கமாகத்) தொழுவார்கள்”
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அனஸ் பின் ஸீரீன் (ரஹ்)
குறிப்புகள் :
கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘காலைத் தொழுகை(ஸுப்ஹு)க்கு முன்’ என்றில்லாமல் ‘காலைக்கு முன்’ என்று இடம்பெற்றுள்ளது.
ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவின் இறுதிப் பகுதியில் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள்” என்றும், “போதும்! போதும் (நிறுத்து!) நீர் ஒரு விளங்காத மனிதர்” என்று இப்னு உமர் (ரலி) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.