அத்தியாயம்: 6, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1338

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ مُهَاجِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏النَّوَّاسَ بْنَ سَمْعَانَ الْكِلَابِيَّ ‏ ‏يَقُولُا ‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يُؤْتَى بِالْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ وَأَهْلِهِ الَّذِينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ تَقْدُمُهُ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏وَآلُ ‏ ‏عِمْرَانَ ‏ ‏وَضَرَبَ لَهُمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثَةَ أَمْثَالٍ مَا نَسِيتُهُنَّ بَعْدُ قَالَ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ ‏ ‏ظُلَّتَانِ ‏ ‏سَوْدَاوَانِ بَيْنَهُمَا ‏ ‏شَرْقٌ ‏ ‏أَوْ كَأَنَّهُمَا ‏ ‏حِزْقَانِ ‏ ‏مِنْ ‏ ‏طَيْرٍ صَوَافَّ ‏ ‏تُحَاجَّانِ ‏ ‏عَنْ صَاحِبِهِمَا

“மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவர். அப்போது அல்பகரா அத்தியாயமும் ஆலு இம்ரான் அத்தியாயமும் முன்னே வரும்” என்று நபி (ஸல்) கூறிவிட்டு, அதற்கான மூன்று உவமைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. “அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று, அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று, அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று வந்து தம்முடைய தோழர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல் கிலாபீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1337

حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو تَوْبَةَ وَهُوَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ ‏ ‏الْبَقَرَةَ ‏ ‏وَسُورَةَ ‏ ‏آلِ ‏ ‏عِمْرَانَ ‏ ‏فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا ‏ ‏فِرْقَانِ ‏ ‏مِنْ ‏ ‏طَيْرٍ صَوَافَّ ‏ ‏تُحَاجَّانِ ‏ ‏عَنْ أَصْحَابِهِمَا اقْرَءُوا سُورَةَ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ وَتَرْكَهَا حَسْرَةٌ وَلَا تَسْتَطِيعُهَا ‏ ‏الْبَطَلَةُ ‏

‏قَالَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ السَّحَرَةُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَكَأَنَّهُمَا فِي كِلَيْهِمَا وَلَمْ يَذْكُرْ قَوْلَ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏بَلَغَنِي

“குர்ஆனை ஓதுங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான ‘அல்பகரா, ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம் தோழர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைப் பற்றிக்கொள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இந்த அத்தியாயத்தை(த் தோழமை) கொண்டோரைச் சூனியக்காரர்கள் எதுவும் செய்யவியலாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

குறிப்பு :

“அல் பத்தலா எனும் (அரபுச்) சொல்லுக்கு சூனியக்காரர்கள் என்று பொருள்” எனக் கேள்விப்பட்டுள்ளதாக முஆவியா பின் ஸல்லாம் (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

யஹ்யா இப்னு ஹஸ்ஸான் (ரஹ்) வழி அறிவிப்பில் “… அவை மேகங்களைப் போன்றும் பறவைக் கூட்டங்களைப் போன்றும் வந்து வாதாடும்” என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஆவியா பின் ஸல்லாம் (ரஹ்) கேள்விப்பட்டதாகக் கூறுவது இடம்பெறவில்லை.