அத்தியாயம்: 7, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1456

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ فِي الصُّبْحِ يَوْمَ الْجُمُعَةِ بِ ‏ ‏الم تَنْزِيلُ ‏ ‏فِي الرَّكْعَةِ الْأُولَى وَفِي الثَّانِيَةِ ‏ ‏هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنْ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا

நபி (ஸல்), வெள்ளிக்கிழமை சுப்ஹுத் தொழுகையின் முதல் ரக்அத்தில் ’அலிஃப் லாம் மீம் தன்ஸீல்’ (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ‘ஹல் அத்தா அலல் இன்ஸானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷைஅம் மத்கூரா’ எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 7, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1455

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ ‏ ‏يَقْرَأُ فِي الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ ‏ ‏الم تَنْزِيلُ ‏ ‏وَهَلْ أَتَى

நபி (ஸல்), வெள்ளிக்கிழமை ஃபஜ்ருத் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் தன்ஸீல்’ எனும் (32ஆவது) அத்தியாயத்தையும் ‘ஹல் அத்தா அலல் இன்ஸான்’ எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 7, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1454

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُخَوَّلِ بْنِ رَاشِدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ الْبَطِينِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ فِي صَلَاةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ ‏ ‏الم تَنْزِيلُ السَّجْدَةِ ‏ ‏وَهَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنْ الدَّهْرِ ‏ ‏وَأَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقْرَأُ فِي صَلَاةِ الْجُمُعَةِ سُورَةَ ‏ ‏الْجُمُعَةِ ‏ ‏وَالْمُنَافِقِينَ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُخَوَّلٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ فِي الصَّلَاتَيْنِ كِلْتَيْهِمَا كَمَا قَالَ ‏ ‏سُفْيَانُ

நபி (ஸல்), வெள்ளிக்கிழமை ஃபஜ்ருத் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் தன்ஸீல்’ (எனத் தொடங்கும்) ‘அஸ்ஸஜ்தா’ எனும் (32ஆவது) அத்தியாயத்தையும் ‘ஹல் அத்தா அலல் இன்ஸானி ஹீனும் மினத் தஹ்ர்’ எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். மேலும், நபி (ஸல்) ஜும்ஆத் தொழுகையில் ‘அல்ஜும்ஆ’ எனும் (62ஆவது) அத்தியாயத்தையும் ‘அல்முனாஃபிகூன்’ எனும் (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).