அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1462

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ

நபி (ஸல்), ஜும்ஆத் தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (ஸுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1461

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ ‏

‏وَصَفَ تَطَوُّعَ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَكَانَ لَا ‏ ‏يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّي رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ ‏
‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَظُنُّنِي قَرَأْتُ فَيُصَلِّي أَوْ ‏ ‏أَلْبَتَّةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுதுவந்த கூடுதலான தொழுகைகள் குறித்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குறிப்பிடும்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜும்ஆத் தொழுதபின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லும்வரை (பள்ளியில்) தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (ஸுன்னத்) தொழுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1460

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏
‏أَنَّهُ كَانَ ‏ ‏إِذَا صَلَّى الْجُمُعَةَ انْصَرَفَ فَسَجَدَ سَجْدَتَيْنِ فِي بَيْتِهِ ثُمَّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ ذَلِكَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஜும்ஆத் தொழுதுவிட்டு தமது இல்லத்திற்குச் சென்று, அங்கு இரண்டு ரக்அத்கள் (ஸுன்னத்) தொழுவார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு செய்துவந்தார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்).

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1459

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا ‏

‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏مِنْكُمْ

“உங்களில் எவரேனும் ஜும்ஆவுக்குப் பின் (ஸுன்னத்) தொழுவதாயின் நான்கு ரக்அத்கள் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு: ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) வழி அறிவிப்பில் “உங்களில்” எனும் தொடக்கச் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1458

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا صَلَّيْتُمْ بَعْدَ الْجُمُعَةِ فَصَلُّوا أَرْبَعًا ‏

‏زَادَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏قَالَ ‏ ‏سُهَيْلٌ ‏ ‏فَإِنْ ‏ ‏عَجِلَ ‏ ‏بِكَ شَيْءٌ فَصَلِّ رَكْعَتَيْنِ فِي الْمَسْجِدِ وَرَكْعَتَيْنِ إِذَا رَجَعْتَ

“ஜும்ஆவுக்குப் பின் நீங்கள் (ஸுன்னத்) தொழுவதானால் நான்கு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு : இந்த ஹதீஸின் அம்ரு முஹம்மத் (ரஹ்) வழி அறிவிப்பில், “உமக்கு ஏதேனும் அவசரம் எனில், பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள். (வீட்டுக்குத்) திரும்பியதும் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள் என்று சுஹைல் பின் அபீசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1457

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا صَلَّى أَحَدُكُمْ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا

“உங்களில் ஒருவர் ஜும்ஆத் தொழுத பின் நான்கு ரக்அத்கள் (ஸுன்னத்) தொழட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)