அத்தியாயம்: 7, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1415

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَعَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَا ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَضَلَّ اللَّهُ عَنْ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا فَكَانَ ‏ ‏لِلْيَهُودِ ‏ ‏يَوْمُ السَّبْتِ وَكَانَ ‏ ‏لِلنَّصَارَى ‏ ‏يَوْمُ الْأَحَدِ فَجَاءَ اللَّهُ بِنَا فَهَدَانَا اللَّهُ لِيَوْمِ الْجُمُعَةِ فَجَعَلَ الْجُمُعَةَ وَالسَّبْتَ وَالْأَحَدَ وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏الْمَقْضِيُّ ‏ ‏لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏وَاصِلٍ ‏ ‏الْمَقْضِيُّ بَيْنَهُمْ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رِبْعِيُّ بْنُ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هُدِينَا إِلَى الْجُمُعَةِ وَأَضَلَّ اللَّهُ عَنْهَا مَنْ كَانَ قَبْلَنَا ‏ ‏فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ فُضَيْلٍ

“அல்லாஹ், நமக்கு முந்தைய (யூத-கிறித்தவ) சமுதாயத்தாரை (சிறப்பு வழிபாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழிபிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையும் கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (சிறப்பு வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைச் சிறப்பித்து, நமக்கென வெள்ளிக்கிழமையை அருளினான். வெள்ளி, சனி, ஞாயிறு என (நாள்களின் வரிசை) அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நமக்குப் பின்வருபவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாம் (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கின்றோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன்னர் தீர்ப்பு அளிக்கப்படுபவர்களாகவும் இருப்போம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா (ரலி) & ஹுதைஃபா (ரலி)


குறிப்பு :

ஸஅதிப்னு தாரிக் (ரஹ்) வழி அறிவிப்பு, “நமக்கு வெள்ளிக்கிழமை (சிறப்பு வழிபாட்டு நாளாக) அருளப்பெற்றது. நமக்கு முன்னிருந்தவர்களை அதிலிருந்து அல்லாஹ் வழி பிறழ விட்டுவிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 7, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1414

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏أَخِي ‏ ‏وَهْبِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏:‏

‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏بَيْدَ ‏ ‏أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ وَهَذَا يَوْمُهُمْ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ فَهَدَانَا اللَّهُ لَهُ فَهُمْ لَنَا فِيهِ تَبَعٌ ‏ ‏فَالْيَهُودُ ‏ ‏غَدًا ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏بَعْدَ غَدٍ

“நாம் (காலத்தால்) பிந்தியவர்கள். என்றாலும், மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாக இருப்போம். பிறர், நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்பே நமக்கு வேதம் வழங்கப்பெற்றது. இந்த (ஜும்ஆ) நாள்தான் அவர்களுக்கும் (சிறப்பு வழிபாட்டு நாளாகக்) கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் (ஜும்ஆ நாளை) நமக்கென அருளினான். (சிறப்பு வழிபாட்டு நாளில்) அவர்கள் நம்மைப் பின் தொடர்பவர்களே ஆவர். யூதர்களுக்கு நாளை(சனிக்கிழமை)யும் கிறித்தவர்களுக்கு மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

”இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 7, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1413

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ وَنَحْنُ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏بَيْدَ ‏ ‏أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ فَاخْتَلَفُوا فَهَدَانَا اللَّهُ لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنْ الْحَقِّ فَهَذَا يَوْمُهُمْ الَّذِي اخْتَلَفُوا فِيهِ هَدَانَا اللَّهُ لَهُ قَالَ يَوْمُ الْجُمُعَةِ فَالْيَوْمَ لَنَا وَغَدًا ‏ ‏لِلْيَهُودِ ‏ ‏وَبَعْدَ غَدٍ ‏ ‏لِلنَّصَارَى

“நாம் (காலத்தால்) பிந்தியவர்கள். என்றாலும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாக இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், நமக்கு முன்பே பிறர் வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்கு சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜும்ஆ) நாளை (சிறப்பு வழிபாட்டு நாளாக) ஏற்காமல் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு இந்த நாளை அருளித் தந்தான். இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (சிறப்பு வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1412

و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْنُ الْآخِرُونَ وَنَحْنُ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏بَيْدَ ‏ ‏أَنَّ كُلَّ أُمَّةٍ أُوتِيَتْ الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ ثُمَّ هَذَا الْيَوْمُ الَّذِي كَتَبَهُ اللَّهُ عَلَيْنَا هَدَانَا اللَّهُ لَهُ فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ ‏ ‏الْيَهُودُ ‏ ‏غَدًا ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏بَعْدَ غَدٍ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْنُ الْآخِرُونَ وَنَحْنُ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏بِمِثْلِهِ

“நாம் (காலத்தால்) பிந்தியவர்கள். என்றாலும், மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாக இருப்போம். (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்கான (சிறப்பு வழிபாட்டு) நாளாக அருளினான். பிறர் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (நமது சிறப்பு வழிபாட்டு நாளின்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களின் நாளாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).


குறிப்பு :

தாவூஸ் (ரஹ்) அறிவிப்பு, “நாம் (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களுமாவோம் …” என்று தொடங்குகிறது.