அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1893

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ حَيَّانَ الدِّمَشْقِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الدَّرْدَاءِ ‏ ‏قَالَتْ :‏

‏قَالَ ‏ ‏أَبُو الدَّرْدَاءِ ‏ ‏لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَعْضِ أَسْفَارِهِ فِي يَوْمٍ شَدِيدِ الْحَرِّ حَتَّى إِنَّ الرَّجُلَ لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا مِنَّا أَحَدٌ صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மேற்கொண்ட பயணமொன்றில் கடுமையான வெப்பமுள்ள நாளில் அவர்களுடன் நாங்களும் இருந்தோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்துக்கொண்டனர். அப்(பயணத்தின்)போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை” என்று (என் கணவர்) அபுத்தர்தா கூறினார்.

அறிவிப்பாளர் : உம்முத்தர்தா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1892

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الدَّرْدَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي شَهْرِ رَمَضَانَ فِي حَرٍّ شَدِيدٍ حَتَّى إِنْ كَانَ أَحَدُنَا لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا فِينَا صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் கடுமையான வெப்பத்தில் (பயணம்) புறப்பட்டோம். கடும் வெப்பம் காரணமாக எங்களில் சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்துக்கொண்டனர். அப்(பயணத்தின்)போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1891

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُرَاوِحٍ ‏ ‏عَنْ ‏ ‏حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ :‏

‏أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَجِدُ بِي قُوَّةً عَلَى الصِّيَامِ فِي السَّفَرِ فَهَلْ عَلَيَّ جُنَاحٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هِيَ رُخْصَةٌ مِنْ اللَّهِ فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلَا جُنَاحَ عَلَيْهِ ‏


‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏فِي حَدِيثِهِ هِيَ رُخْصَةٌ وَلَمْ يَذْكُرْ مِنْ اللَّهِ

நான், “அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உண்டு என உணர்கிறேன். (பயணத்தில் நான் நோன்பு நோற்பது) என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டேன். அதற்கு, “இது அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) சலுகையாகும். யார் அதைப் பயன்படுத்திக்கொள்கிறாரோ அது நல்லதே. (பயணத்தில்) நோன்பு நோற்க விரும்புகின்றவர் மீதும் குற்றம் இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹம்ஸா பின் அம்ரு அல்அஸ்லமீ (ரலி)


குறிப்பு :

ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இது சலுகையாகும்” என்றே இடம்பெற்றுள்ளது. “அல்லாஹ்விடமிருந்து’ எனும் குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1890

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا : ‏

‏أَنَّ ‏ ‏حَمْزَةَ بْنَ عَمْرٍو الْأَسْلَمِيَّ ‏ ‏سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ ‏ ‏أَسْرُدُ الصَّوْمَ ‏ ‏أَفَأَصُومُ فِي السَّفَرِ قَالَ ‏ ‏صُمْ إِنْ شِئْتَ وَأَفْطِرْ إِنْ شِئْتَ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏إِنِّي رَجُلٌ ‏ ‏أَسْرُدُ الصَّوْمَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَنَّ ‏ ‏حَمْزَةَ ‏ ‏قَالَ إِنِّي رَجُلٌ أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ

ஹம்ஸா பின் அம்ரு அல்அஸ்லமீ (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் அடுத்தடுத்து நோன்பு நோற்பவன் ஆவேன். பயணத்திலும் நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு, “நாடினால் நோன்பு நோற்பீராக! நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பு,“நான் அடுத்தடுத்து நோன்பு நோற்பவன் ஆவேன். பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா? …” என்று ஹம்ஸா பின் அம்ரு (ரலி) கேட்டார்கள் எனத் தொடங்குகின்றது.

அத்தியாயம்: 13, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1889

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ : ‏

‏سَأَلَ ‏ ‏حَمْزَةُ بْنُ عَمْرٍو الْأَسْلَمِيُّ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الصِّيَامِ فِي السَّفَرِ فَقَالَ ‏ ‏إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ

ஹம்ஸா பின் அம்ரு அல்அஸ்லமீ (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் நாடினால் நோன்பு நோற்கலாம்; நாடினால் நோன்பை விட்டுவிடலாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1888

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏قَزَعَةُ ‏ ‏قَالَ : ‏

‏أَتَيْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَهُوَ ‏ ‏مَكْثُورٌ عَلَيْهِ ‏ ‏فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ عَنْهُ قُلْتُ إِنِّي لَا أَسْأَلُكَ عَمَّا يَسْأَلُكَ هَؤُلَاءِ عَنْهُ سَأَلْتُهُ عَنْ الصَّوْمِ فِي السَّفَرِ فَقَالَ سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏وَنَحْنُ صِيَامٌ قَالَ فَنَزَلْنَا مَنْزِلًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّكُمْ قَدْ دَنَوْتُمْ مِنْ عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ فَكَانَتْ رُخْصَةً فَمِنَّا مَنْ صَامَ وَمِنَّا مَنْ أَفْطَرَ ثُمَّ نَزَلْنَا مَنْزِلًا آخَرَ فَقَالَ إِنَّكُمْ مُصَبِّحُو عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ فَأَفْطِرُوا وَكَانَتْ عَزْمَةً فَأَفْطَرْنَا ثُمَّ قَالَ لَقَدْ رَأَيْتُنَا نَصُومُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدَ ذَلِكَ فِي السَّفَرِ

நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களைச் சுற்றி அதிகமானோர் குழுமியிருந்தனர். மக்கள் கலைந்துசென்றதும் நான், “அவர்கள் கேட்ட கேள்விகளையெல்லாம் உங்களிடம் நான் கேட்க மாட்டேன்” என்று கூறிவிட்டு, பயணத்தில் நோன்பு நோற்பது பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) மக்காவுக்குப் பயணம் செய்தோம். அப்போது நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம். (வழியில்) ஓரிடத்தில் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் உங்கள் எதிரிகளை நெருங்கிவிட்டீர்கள். இந்நிலையில் நீங்கள் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுச் சேர்க்கும்” என்று கூறினார்கள். இது ஒரு சலுகையாகவே இருந்தது. எனவே, எங்களில் சிலர் நோன்பு நோற்றனர்; வேறுசிலர் நோன்பை விட்டனர். பிறகு மற்றோர் இடத்தில் நாங்கள் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது நபி (ஸல்), “நீங்கள் (நாளைக்) காலையில் எதிரிகளைச் சந்திக்கப்போகின்றீர்கள்கள். இந்நிலையில் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுச் சேர்க்கும். எனவே, நோன்பை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். இது ஒரு கட்டளையாகவே இருந்தது. ஆகவே, நாங்கள் நோன்பை விட்டுவிட்டோம். அதற்குப் பின்னர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் நோன்பு நோற்பவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக கஸஆ பின் யஹ்யா (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1887

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏مُوَرِّقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ : ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَصَامَ بَعْضٌ وَأَفْطَرَ بَعْضٌ فَتَحَزَّمَ الْمُفْطِرُونَ وَعَمِلُوا وَضَعُفَ الصُّوَّامُ عَنْ بَعْضِ الْعَمَلِ قَالَ فَقَالَ فِي ذَلِكَ ‏ ‏ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது (அவர்களுடனிருந்த) சிலர் நோன்பு நோற்றனர்; வேறுசிலர் நோன்பு நோற்கவில்லை. நோன்பு நோற்காதவர்கள் மும்முரமாகப் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். நோன்பு நோற்றிருந்தவர்கள் ஒரு சில வேலைகளை(க் கூட)ச் செய்ய முடியாமல் பலவீனமடைந்திருந்தனர். இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மைகளைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1886

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوَرِّقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏كُنَّا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي السَّفَرِ فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ قَالَ فَنَزَلْنَا مَنْزِلًا فِي يَوْمٍ حَارٍّ أَكْثَرُنَا ظِلًّا صَاحِبُ الْكِسَاءِ وَمِنَّا مَنْ يَتَّقِي الشَّمْسَ بِيَدِهِ قَالَ فَسَقَطَ الصُّوَّامُ وَقَامَ الْمُفْطِرُونَ فَضَرَبُوا الْأَبْنِيَةِ وَسَقَوْا ‏ ‏الرِّكَابَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஒரு) பயணத்திலிருந்தோம். அப்போது எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். அப்போது வெப்பமிக்க ஒரு நாளில் ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் மேல்துண்டு வைத்திருந்தவரே (அன்று) அதிகமாக நிழலைப் பெற்றார். தமது கரத்தால் வெயிலை மறைத்துக் கொண்டோரும் எங்களில் இருந்தனர். நோன்பு நோற்றிருந்தவர்கள் செயலற்றுப்போயினர். நோன்பு நோற்காதவர்கள் எழுந்து (செயல்படத் தொடங்கினர்.) கூடாரங்களை நிறுவினர்; வாகன(ஒட்டக)ங்களுக்கு நீர் புகட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1885

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏خَرَجْتُ فَصُمْتُ فَقَالُوا لِي أَعِدْ قَالَ فَقُلْتُ إِنَّ ‏ ‏أَنَسًا ‏ ‏أَخْبَرَنِي : ‏

‏أَنَّ ‏ ‏أَصْحَابَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانُوا ‏ ‏يُسَافِرُونَ فَلَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ ‏

‏فَلَقِيتُ ‏ ‏ابْنَ أَبِي مُلَيْكَةَ ‏ ‏فَأَخْبَرَنِي عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏بِمِثْلِهِ

நான் நோன்பு நோற்றிருந்த நிலையில் (பயணம்) புறப்பட்டேன். அப்போது மக்கள் என்னிடம், “(பயணத்தில் நோன்பு நோற்காதீர்) பின்னர் (ஊர் திரும்பிய பின்) நோற்றுக்கொள்ளுங்கள்!” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பயணம் செய்யும்போது (சிலர் நோன்பு நோற்பர். சிலர் நோற்பதில்லை. அப்போது) நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறமாட்டார்” என என்னிடம் அனஸ் (ரலி) கூறினார்கள் என்றேன்.

பின்னர் நான் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது “மேற்கண்டவாறுதான் ஆயிஷா (ரலி) என்னிடம் அறிவித்தார்கள்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1884

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ : ‏

‏سُئِلَ ‏ ‏أَنَسٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ صَوْمِ رَمَضَانَ فِي السَّفَرِ فَقَالَ ‏ ‏سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَمَضَانَ فَلَمْ يَعِبْ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِم

அனஸ் (ரலி) அவர்களிடம், ரமளானில் பயணத்தின்போது நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளானில் பயணம் செய்தோம். அப்போது. நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறியதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்)