அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1373

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُلَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ ‏ ‏يَقُولُ :‏‏

‏ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ ‏ ‏تَضَيَّفُ ‏ ‏الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்திருந்தார்கள். அவையாவன:

1- சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,
2- ஒருவர் (வெயிலில்) நிற்கும்போது நிழல் விழாத நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கில்) சரியும்வரை.
3- சூரியன் மறையத் தொடங்கியதிலிருந்து நன்கு மறையும்வரை.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1372

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏خَيْرِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ هُبَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ ‏ ‏قَالَ ‏:‏

‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَصْرَ ‏ ‏بِالْمُخَمَّصِ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ هَذِهِ الصَّلَاةَ عُرِضَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَضَيَّعُوهَا فَمَنْ حَافَظَ عَلَيْهَا كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ وَلَا صَلَاةَ بَعْدَهَا حَتَّى يَطْلُعَ الشَّاهِدُ ‏ ‏وَالشَّاهِدُ النَّجْمُ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ إِسْحَقَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏خَيْرِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ السَّبَائِيِّ ‏ ‏وَكَانَ ثِقَةً ‏ ‏عَنْ ‏ ‏أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَصْرَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு பயணத்தின்போது) ‘அல்முகம்மஸ்’ எனுமிடத்தில் எங்களுக்கு அஸ்ருத் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு “இந்தத் தொழுகையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன்வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் அதைப் பாழாக்கிவிட்டார்கள். எனவே, யார் இத் தொழுகையைப் பேணித் தொழுதுவருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. அஸ்ருக்குப் பிறகு (சூரியன் மறைந்து,) ஷாஹித் (நட்சத்திரம்) தோன்றும்வரை எந்தத் தொழுகையும் இல்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி)


குறிப்பு :

மேற்கண்ட ஹதீஸ் அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி) வழியாக அபூஹபீப் (ரஹ்) அறிவிப்பாகவும் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1371

اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَابْنُ بِشْرٍ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا بَدَا ‏ ‏حَاجِبُ ‏ ‏الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَبْرُزَ وَإِذَا غَابَ ‏ ‏حَاجِبُ ‏ ‏الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ

சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும் போது (தொழாதீர்கள்); அது முழுமையாக வெளிப்படும்வரை தொழுவதைத் தாமதப் படுத்துங்கள். சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரை தொழுகையைத் தாமதப்பபடுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1370

اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا فَإِنَّهَا تَطْلُعُ بِقَرْنَيْ شَيْطَانٍ

சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள் தொழுவதற்காகத் தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1369

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا ‏ ‏يَتَحَرَّى ‏ ‏أَحَدُكُمْ فَيُصَلِّيَ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَلَا عِنْدَ غُرُوبِهَا

உங்களில் ஒருவர் சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் (சரியாகச்) தேர்ந்தெடுத்துத் தொழ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1368

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَلَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ

அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு சூரியன் மறையும்வரை எந்தத் தொழுகையும் இல்லை. ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு சூரியன் உதிக்கும்வரை எந்தத் தொழுகையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1367

و حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏وَإِسْمَعِيلُ بْنُ سَالِمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏قَالَ ‏ ‏دَاوُدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْعَالِيَةِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏‏

‏سَمِعْتُ غَيْرَ وَاحِدٍ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْهُمْ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏وَكَانَ أَحَبَّهُمْ إِلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ الصَّلَاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَهِشَامٍ ‏ ‏بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஃபஜ்ருக்குப் பின் சூரியன் உதயமாகும் வரையும் அஸ்ருக்குப் பின் சூரியன் மறையும் வரையும் தொழ வேண்டாமெனத் தடை செய்தார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் பலர் கூறக்கேட்டுள்ளேன். அவர்களுள் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஆவார்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ஸயீத் (ரஹ்), ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் (“சூரியன் உதயமாகும் வரை” என்பதைச் சுட்ட “ஹத்தா தத்லுஅஷ் ஷம்ஸு” எனும் சொற்றொடருக்கு பதிலாக) “ஹத்தா தஷ்ருகஷ் ஷம்ஸு” எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1366

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَعَنْ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ”அஸ்ருக்குப் பின் சூரியன் மறையும்வரை தொழ வேண்டாம்” எனவும், “ஸுப்ஹுக்குப் பின் சூரியன் உதயமாகும்வரை தொழ வேண்டாம்” எனவும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1365

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ  قال:‏

لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِمَّنْ أَنْتَ قُلْتُ مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالَ مِنْ أَيِّهِمْ قُلْتُ مِنْ أَهْلِ الْكُوفَةِ قَالَ هَلْ تَقْرَأُ عَلَى قِرَاءَةِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَاقْرَأْ وَاللَّيْلِ إِذَا يَغْشَى قَالَ فَقَرَأْتُ : وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَالنَّهَارِ إِذَا تَجَلَّى وَالذَّكَرِ وَالْأُنْثَى قَالَ فَضَحِكَ ثُمَّ قَالَ هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهَا


و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنِي عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا دَاوُدُ عَنْ عَامِرٍ عَنْ عَلْقَمَةَ قَالَ أَتَيْتُ الشَّامَ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ

நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் “நீங்கள் எந்த நாட்டவர்?” என்று கேட்க, “இராக்கியர்” என்று பதிலளித்தேன். “இராக்கியரில் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?” என்று அன்னார் வினவ, “கூஃபாவாசி” என நான் விடையளித்தேன். “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஓதிய முறையில் நீங்கள் ஓதுவீர்களா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால், வல்லைலி இதா யக்க்ஷா எனும் (92ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுங்கள்” என்றார்கள். நான் “வல்லைலி இதா யக்க்ஷா என ஓதத் தொடங்கி “வத்தகரி வல்உன்ஸா” என ஓதினேன். உடனே அபுத்தர்தா (ரலி) சிரித்துவிட்டு “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் செவியேற்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்)


குறிப்பு :

ஆமிர் (ரஹ்) வழி அறிவிப்பு,
“நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன்” என்று அல்கமா (ரஹ்) கூறியதாகத் தொடங்குகின்றது.

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1364

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَدِمْنَا ‏ ‏الشَّامَ ‏ ‏فَأَتَانَا ‏ ‏أَبُو الدَّرْدَاءِ ‏ ‏فَقَالَ أَفِيكُمْ أَحَدٌ يَقْرَأُ عَلَى قِرَاءَةِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقُلْتُ نَعَمْ أَنَا قَالَ فَكَيْفَ سَمِعْتَ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏يَقْرَأُ هَذِهِ الْآيَةَ” وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ” ‏ قَالَ سَمِعْتُهُ يَقْرَأُ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ‏ ‏وَالذَّكَرِ وَالْأُنْثَى قَالَ وَأَنَا وَاللَّهِ هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَؤُهَا وَلَكِنْ هَؤُلَاءِ يُرِيدُونَ أَنْ أَقْرَأَ وَمَا خَلَقَ فَلَا أُتَابِعُهُمْ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ أَتَى ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏الشَّامَ ‏ ‏فَدَخَلَ مَسْجِدًا فَصَلَّى فِيهِ ثُمَّ قَامَ إِلَى حَلْقَةٍ فَجَلَسَ فِيهَا ‏ ‏قَالَ ‏ ‏فَجَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏فَعَرَفْتُ فِيهِ ‏ ‏تَحَوُّشَ ‏ ‏الْقَوْمِ وَهَيْئَتَهُمْ قَالَ فَجَلَسَ إِلَى جَنْبِي ثُمَّ قَالَ أَتَحْفَظُ كَمَا كَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏يَقْرَأُ فَذَكَرَ بِمِثْلِهِ

(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்களான) நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தோம். (செய்தியறிந்து) எங்களிடம் அபுத்தர்தா (ரலி) வந்து, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி ஓதத் தெரிந்தவர் எவரேனும் உங்களிடையே உண்டா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்; நான் (இருக்கின்றேன்)” என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி), “வல்லைலி இஃதா யக்க்ஷா” எனும் இந்த (92:3ஆவது) வசனத்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) எவ்வாறு ஓத செவியுற்றீர்கள்?” என்று வினவினார்கள். நான் “வல்லைலி இஃதா யக்க்ஷா, வன்னஹாரி இஃதா ஜல்லா, வத்தகரி வல் உன்ஸா” என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் செவியுற்றுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) “வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா” என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால், இவர்களை நான் பின்பற்றமாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்)


குறிப்புகள் :

இபுராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில்,
அல்கமா (ரஹ்) கூறியிருப்பதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்குப் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதேன். பின்னர் எழுந்து ஒரு சபைக்குச் சென்று அதில் அமர்ந்தேன். அப்போது ஒருவர் (அபுத்தர்தா-ரலி) வந்து என் அருகே அமர்ந்தார். அவரிடம் (அக்கால) மக்களின் எளிமையையும் தோற்றத்தையும் கண்டேன். அவர் (என்னிடம்), “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஓதுகின்ற முறையை நீங்கள் மனனமிட்டுள்ளீர்களா?” என்று வினவினார். என்று இடம்பெற்றுள்ளது.

“வமா ஃகலக்க தகர வல் உன்ஸா“ என்று நாம் தற்போது ஓதுகின்ற (92:3) வசனம் தொடக்கத்தில் “வத்தகரி வல் உன்ஸா” என்று அருளப்பட்டிருந்ததாகக் குறிப்புகள் உள்ளன.