அத்தியாயம்: 1, பாடம்: 1.16, ஹதீஸ் எண்: 63

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِين

“உங்களில் ஒருவருக்கு, அவருடைய பிள்ளைகள், பெற்றோர், மற்ற மக்கள் அனைவரையும்விட அதிகம் அன்புக்குரியவனாக, நான் ஆகாதவரை அவர் இறைநம்பிக்கையாளராக ஆகமாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.16, ஹதீஸ் எண்: 62

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُؤْمِنُ عَبْدٌ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏الرَّجُلُ ‏ ‏حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ أَهْلِهِ وَمَالِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

“ஒருவருக்குத் தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மனிதர்கள் அனைவைரையும்விட நான் அன்புக்குரியவனாக ஆகாதவரை, எந்த அடியாரும் / எந்த மனிதரும் இறைநம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.15, ஹதீஸ் எண்: 61

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ ‏ ‏طَعْمَ ‏ ‏الْإِيمَانِ مَنْ كَانَ يُحِبُّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَمَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَمَنْ كَانَ أَنْ ‏ ‏يُلْقَى فِي النَّارِ أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ فِي الْكُفْرِ بَعْدَ أَنْ أَنْقَذَهُ اللَّهُ مِنْهُ ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَنْبَأَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏أَنْبَأَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ غَيْرَ أَنَّهُ قَالَ مِنْ أَنْ يَرْجِعَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا

“ஒருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிக்கின்ற, எல்லாரையும்-எல்லாவற்றையும்விட அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பேரன்புக்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்ட, இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின்னர் அதன்பால் மீள்வதைத் தாம் தீயில் வீசப்படுவதைப் போன்று வெறுக்கின்ற மூன்று தன்மைகளைத் தம்மிடம் கொண்டவர் இறைநம்பிக்கையின் சுவையை அடைந்து கொண்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

ஹம்மாது (ரலி) வழி அறிவிப்பில் “இறைமறுப்பின்பால் மீள்வதை …” என்பதற்குப் பகரமாக, “யூதனாகவோ கிருத்துவனாகவோ மீள்வதை …” என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.

அத்தியாயம்: 1, பாடம்: 1.15, ஹதீஸ் எண்: 60

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ بِهِنَّ حَلَاوَةَ الْإِيمَانِ مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ أَنْ أَنْقَذَهُ اللَّهُ مِنْهُ كَمَا يَكْرَهُ أَنْ ‏ ‏يُقْذَفَ ‏ ‏فِي النَّارِ

“எல்லாரையும் எல்லாவற்றையும்விட அல்லாஹ்வையும் அவன் தூதரையும் பேரன்புக்குரிய இருவராக வரித்துக் கொண்ட, அல்லாஹ்வுக்காகவே ஒருவரை நேசிக்கின்ற, இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின்னர் அதன்பால் மீள்வதை, தாம் தீயில் வீசப்படுவதைப் போன்று வெறுக்கின்ற மூன்று தன்மைகளைத் தம்மிடம் கொண்டவர் இறைநம்பிக்கையின் இனிமையை சுவைத்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.14, ஹதீஸ் எண்: 59

و حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ :‏

قُلْتُ ‏يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ ‏ ‏مَنْ ‏ ‏سَلِمَ ‏ ‏الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّ الْمُسْلِمِينَ أَفْضَلُ ‏ ‏فَذَكَرَ مِثْلَهُ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவருடைய பண்பே சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்-அஷ்அரீ(ரலி)


குறிப்பு :

யஸீத் பின் அப்துல்லாஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று கேட்கப்பட்டது …” என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.14, ஹதீஸ் எண்: 58

حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَاصِمٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَنْبَأَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا الزُّبَيْرِ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏جَابِرًا ‏ ‏يَقُولُا :‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

“எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.14, ஹதீஸ் எண்: 57

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ الْمِصْرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏يَقُولُا ‏:‏

‏إِنَّ ‏ ‏رَجُلًا ‏ ‏سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ قَالَ ‏ ‏مَنْ ‏ ‏سَلِمَ ‏ ‏الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக அபுல் கைர் (ரஹ்).

அத்தியாயம்: 1, பாடம்: 1.14, ஹதீஸ் எண்: 56

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو :‏ ‏

‏أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ قَالَ ‏ ‏تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.13, ஹதீஸ் எண்: 55

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏:‏

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏غَيْرَكَ ‏ ‏قَالَ ‏ ‏قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِم

“அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குப் பிறகு (அ) உங்களைத் தவிர எவரிடமும் கேட்கத் தேவையில்லாதவாறு இஸ்லாத்தைக் குறித்து எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் என்று கூறி, அந்த நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.12, ஹதீஸ் எண்: 54

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ وَهُوَ ابْنُ سُوَيْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏حَدَّثَ قَالَ ‏:‏

كُنَّا عِنْدَ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏فِي رَهْطٍ مِنَّا وَفِينَا ‏ ‏بُشَيْرُ بْنُ كَعْبٍ ‏ ‏فَحَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ ‏ ‏يَوْمَئِذٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْحَيَاءُ خَيْرٌ كُلُّهُ قَالَ ‏ ‏أَوْ قَالَ الْحَيَاءُ كُلُّهُ خَيْرٌ ‏
‏فَقَالَ ‏ ‏بُشَيْرُ بْنُ كَعْبٍ ‏ ‏إِنَّا لَنَجِدُ فِي بَعْضِ الْكُتُبِ ‏ ‏أَوْ الْحِكْمَةِ ‏ ‏أَنَّ مِنْهُ سَكِينَةً وَوَقَارًا لِلَّهِ وَمِنْهُ ضَعْفٌ قَالَ فَغَضِبَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏حَتَّى احْمَرَّتَا عَيْنَاهُ وَقَالَ أَلَا أَرَانِي أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتُعَارِضُ ‏ ‏فِيهِ قَالَ فَأَعَادَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏الْحَدِيثَ قَالَ فَأَعَادَ ‏ ‏بُشَيْرٌ ‏ ‏فَغَضِبَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏قَالَ فَمَا زِلْنَا نَقُولُ فِيهِ إِنَّهُ مِنَّا يَا ‏ ‏أَبَا نُجَيْدٍ ‏ ‏إِنَّهُ لَا بَأْسَ بِهِ ‏ ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏النَّضْرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نَعَامَةَ الْعَدَوِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُجَيْرَ بْنَ الرَّبِيعِ الْعَدَوِيَّ ‏ ‏يَقُولُ عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْد

நாங்கள் ஒரு குழுவாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் இருந்தோம். எங்களிடையே புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்களும் இருந்தார். அன்றைய தினம் இம்ரான் (ரலி), “நாணம், முழுக்க முழுக்க நன்மையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என எங்களுக்கு அறிவித்தார்கள்.

அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்), “நாங்கள் சில நூல்களில் அல்லது ‘தத்துவ(புத்தகத்)தில்’ அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் சில (வகை) நாணத்தில் நிம்மதியும் பெருமையும் இருக்கின்றன; பலவீனமும் உண்டு என்று (எழுதப்பட்டிருப்பதைக்) கண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

(இதைக் கேட்ட) இம்ரான் (ரலி) தம் கண்கள் சிவக்கும் அளவிற்குக் கோபமடைந்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நாணம் முழுக்க நன்மைதான் என்று) கூறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அதற்கு எதிர்கருத்துக் கூறுகின்றீர்களே?” என்று சொல்லி விட்டுத் தாம் முன்பு சொன்ன ஹதீஸையே மீண்டும் சொன்னார்கள்.

புஷைரும் முன்பு தாம் சொன்னதையே மீண்டும் கூறினார். அப்போதும் இம்ரான் (ரலி)  கோபமடைந்தார்கள். நாங்கள், “அபூநுஜைதே! அவர் நம்மைச் சார்ந்தவர்தாம். அவரிடம் (கொள்கைக்) குறைபாடு ஏதுமில்லை” என்று கூறி(இம்ரான் அவர்களை சமாதானப்படுத்தி)க் கொண்டிருந்தோம்.

அறிவிப்பாளர் : அபூ கத்தாதா (ரலி)