அத்தியாயம்: 15, பாடம்: 54, ஹதீஸ் எண்: 2291

‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ وَهُوَ ابْنُ عُبَيْدِ اللَّهِ الْجَزَرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الِاسْتِجْمَارُ ‏ ‏تَوٌّ وَرَمْيُ الْجِمَارِ تَوٌّ وَالسَّعْيُ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏تَوٌّ وَالطَّوَافُ تَوٌّ وَإِذَا ‏ ‏اسْتَجْمَرَ ‏ ‏أَحَدُكُمْ ‏ ‏فَلْيَسْتَجْمِرْ ‏ ‏بِتَوٍّ

“இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின் கற்களால் சுத்தம் செய்வது ஒற்றை எண்ணிக்கை (மூன்று) ஆகும். கற்களை (ஹஜ்ஜின்போது) எறிவதும் ஒற்றை எண்ணிக்கை (ஏழு) ஆகும். ஸஃபா-மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும் ஒற்றை எண்ணிக்கை (ஏழு) ஆகும். கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதும் ஒற்றை எண்ணிக்கை (ஏழு) ஆகும். உங்களில் ஒருவர் இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின் கற்களால் சுத்தம் செய்யும்போது ஒற்றை எண்ணிக்கையில் செய்யட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2237

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْرُوفُ بْنُ خَرَّبُوذَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الطُّفَيْلِ ‏ ‏يَقُولُ: ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَيَسْتَلِمُ ‏ ‏الرُّكْنَ ‏ ‏بِمِحْجَنٍ ‏ ‏مَعَهُ وَيُقَبِّلُ ‏ ‏الْمِحْجَنَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்தபோது ஹஜருல் அஸ்வதைத் தம்மிடமிருந்த முனை வளைந்த கைத்தடியால் தொட்டு, அந்தக் கைத்தடியை முத்தமிட்டதை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் அலீ பின் வாஸிலா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2236

حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى الْقَنْطَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعَيْبُ بْنُ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ:

طَافَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ حَوْلَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏عَلَى بَعِيرِهِ ‏ ‏يَسْتَلِمُ ‏ ‏الرُّكْنَ كَرَاهِيَةَ أَنْ يُضْرَبَ عَنْهُ النَّاسُ

நபி (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது (கூட்ட நெரிசலில்) தம்மைவிட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுவதை விரும்பவில்லையாதலால் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; அப்போது (கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2235

‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ بَكْرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ:‏

‏طَافَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏لِيَرَاهُ النَّاسُ ‏ ‏وَلِيُشْرِفَ ‏ ‏وَلِيَسْأَلُوهُ فَإِنَّ النَّاسَ ‏ ‏غَشُوهُ ‏

وَلَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏وَلِيَسْأَلُوهُ ‏ ‏فَقَطْ

நபி (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவுக்கு இடையேயும் சுற்றிவந்தார்கள். மக்கள் தம்மைப் பார்த்து, தம்மிடம் (வழிப்பாட்டு விளக்கங்கள்) கேட்க வேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இபுனு கஷ்ரம் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம்மிடம் அவர்கள் (வழிபாட்டு விளக்கங்கள்) கேட்க வேண்டும் என்பதற்காக” என்பது மட்டும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2234

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

طَافَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏يَسْتَلِمُ ‏ ‏الْحَجَرَ ‏ ‏بِمِحْجَنِهِ ‏ ‏لِأَنْ يَرَاهُ النَّاسُ ‏ ‏وَلِيُشْرِفَ ‏ ‏وَلِيَسْأَلُوهُ فَإِنَّ النَّاسَ ‏ ‏غَشُوهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லத்தைச் சுற்றிவந்தார்கள்; அப்போது அவர்கள் தமது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். மக்கள் தம்மைப் பார்த்து, தம்மிடம் (வழிபாட்டு விளக்கங்களைக்) கேட்க வேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2233

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏طَافَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ ‏ ‏يَسْتَلِمُ ‏ ‏الرُّكْنَ ‏ ‏بِمِحْجَنٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது, முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2187

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏ ‏لَا يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَاجٌّ وَلَا غَيْرُ حَاجٍّ إِلَّا حَلَّ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏مِنْ أَيْنَ يَقُولُ ذَلِكَ قَالَ مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى ” ثُمَّ مَحِلُّهَا إِلَى ‏ ‏الْبَيْتِ الْعَتِيقِ “‏‏

‏‏قَالَ قُلْتُ فَإِنَّ ذَلِكَ بَعْدَ ‏ ‏الْمُعَرَّفِ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ هُوَ بَعْدَ ‏ ‏الْمُعَرَّفِ ‏ ‏وَقَبْلَهُ ‏
‏وَكَانَ يَأْخُذُ ذَلِكَ مِنْ أَمْرِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا فِي حَجَّةِ الْوَدَاعِ

அதாஉ (ரஹ்), “ஹஜ் செய்பவரோ மற்ற(உம்ராச் செய்ப)வரோ இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுபவர்களாக இருந்தார்கள்” என்று அறிவித்தார்கள்.

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அப்படிக் கூறுகின்றார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பின்னர் அவை (பலிப் பிராணிகள் அறுப்பதற்காகச்) சென்றடையும் இடம், பழமையான அந்த ஆலயமாகும்” எனும் (22:33ஆவது) இறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது அவர்(களுடன் வந்தவர்)களுக்கு இஹ்ராமிலிருந்து விடுபடும்படி இட்ட கட்டளையை ஆதாரமாகக் கொண்டும்தான் அப்படிக் கூறினார்கள்” என்றார்கள்.

நான், “இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “அது, அரஃபாவில் தங்கியதற்குப் பின்பும் அதற்கு முன்பும் (அனுமதிக்கப்பட்டதே)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறிவந்தார்கள் என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக இபுனு ஜுரைஜ் (ரஹ்)


குறிப்பு :

தமத்துஉ ஹஜ் செய்பவர்கள், தவாஃபை நிறைவேற்றிய பின்னர், அரஃபாவுக்குச் சென்று தங்குவதற்கு முன்பு (முதல்) இஹ்ராமிலிருந்து நீங்கிவிடுவர். அதன் பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் பூண்டு, அரஃபாவுக்குச் சென்று தங்கிய பின்பு எஞ்சியிருக்கும் சில கடமைச் செயல்பாடுகளை நிறைவு செய்து (இரண்டாவது) இஹ்ராமிலிருந்து நீங்குவர்.

கிரான் ஹஜ்ஜுச் செய்பவர்கள், அரஃபாவுக்குச் சென்று தங்கியதற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சில கடமைச் செயல்பாடுகளை நிறைவு செய்து இஹ்ராமிலிருந்து நீங்குவர்.

அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2186

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامُ بْنُ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَسَّانَ ‏ ‏قَالَ ‏
‏قِيلَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏إِنَّ هَذَا الْأَمْرَ قَدْ ‏ ‏تَفَشَّغَ ‏ ‏بِالنَّاسِ مَنْ طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقَدْ حَلَّ الطَّوَافُ عُمْرَةٌ فَقَالَ ‏ ‏سُنَّةُ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَإِنْ ‏ ‏رَغَمْتُمْ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்; இறையில்லத்தைச் சுற்றி வருதலே உம்ராவாகும் எனும் கருத்து மக்களிடையே பரவலாகிவிட்டிருக்கிறது” என்று சொல்லப்பட்டது.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை அதுவேயாகும்; – உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2172

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْنَا ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏عَنْ رَجُلٍ قَدِمَ بِعُمْرَةٍ فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَلَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏أَيَأْتِي امْرَأَتَهُ ‏ ‏فَقَالَ ‏
‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏سَبْعًا وَصَلَّى خَلْفَ ‏ ‏الْمَقَامِ ‏ ‏رَكْعَتَيْنِ وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏سَبْعًا وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ‏
‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் உம்ராவிற்காக வந்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ செய்யவில்லை. இந்நிலையில், அவர் (இஹ்ராமிலிருந்து நீங்கி) தம் மனைவியுடன் உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம்.

அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கு) வந்தபோது கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று இப்னு உமர் (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக அம்ரு பின் தீனார் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2123

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّهَا أَهَلَّتْ بِعُمْرَةٍ فَقَدِمَتْ وَلَمْ تَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى حَاضَتْ ‏ ‏فَنَسَكَتْ ‏ ‏الْمَنَاسِكَ كُلَّهَا وَقَدْ أَهَلَّتْ بِالْحَجِّ فَقَالَ لَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ النَّفْرِ ‏ ‏يَسَعُكِ طَوَافُكِ لِحَجِّكِ وَعُمْرَتِكِ ‏ ‏فَأَبَتْ ‏ ‏فَبَعَثَ بِهَا مَعَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ

நான் உம்ராவிற்காக முஹ்ரிமாகி (மக்காவிற்கு) வந்தேன். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு முன்பே எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. ஆகவே, (தவாஃபைத் தவிர உம்ராவின்) அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றினேன்.

(அரஃபாவின் நாளில் தூய்மையானேன்) ஹஜ்ஜுக்காக (முஹ்ரிமாகி) ‘தல்பியா’ கூறி(ஹஜ்ஜை நிறைவேற்றி)னேன். (மினாவிலிருந்து) புறப்படும்) நஃப்ருடைய நாளில் நபி (ஸல்) என்னிடம், “நீ ஹஜ்ஜுக்கு (தவாஃப்) சுற்றியது உம்ராவிற்கும் போதுமானதாகும். (எனவே, நீ உம்ராச் செய்ய வேண்டிய தில்லை)” என்று சொன்னார்கள். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. ஆகவே, என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் ‘தன்யீமு’க்கு அனுப்பி வைத்தார்கள். நான் ஹஜ்ஜுக்குப் பின்னர் உம்ராச் செய்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)