அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2438

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يُؤْتَى بِأَوَّلِ الثَّمَرِ فَيَقُولُ ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي ‏ ‏مُدِّنَا ‏ ‏وَفِي ‏ ‏صَاعِنَا ‏ ‏بَرَكَةً مَعَ بَرَكَةٍ ثُمَّ يُعْطِيهِ أَصْغَرَ مَنْ يَحْضُرُهُ مِنْ الْوِلْدَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப்பட்டால், “இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (முகத்தல் அளவைகளான) ‘ஸாஉ’விலும் ‘முத்’துவிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2437

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏

كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي ‏ ‏صَاعِنَا ‏ ‏وَبَارِكْ لَنَا فِي ‏ ‏مُدِّنَا ‏ ‏اللَّهُمَّ إِنَّ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ ‏ ‏لِمَكَّةَ ‏ ‏وَإِنِّي أَدْعُوكَ ‏ ‏لِلْمَدِينَةِ ‏ ‏بِمِثْلِ مَا دَعَاكَ ‏ ‏لِمَكَّةَ ‏ ‏وَمِثْلِهِ مَعَهُ قَالَ ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ ‏ ‏فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ

மக்கள் (பேரீச்சங் கன்றுகளை நட்டு அதில்) முதலாவதாகப் பழுக்கும் கனியைக் காணும்போது, அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதைப் பெற்றுக்கொண்டு, “இறைவா! எங்கள் கனிகளில் எங்களுக்கு வளம் அருள்வாயாக! எங்கள் நகரத்தில் வளம் கொழிக்கச் செய்வாயாக! எங்கள் (முகத்தல் அளவைகளான) ‘ஸாஉ’விலும் ‘முத்’துவிலும் வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! இப்ராஹீம் (அலை) உன் அடியாரும் உன் உற்ற நண்பரும் உன் தூதரும் ஆவார்கள். நான் உன் அடிமையும் தூதரும் ஆவேன். இப்ராஹீம் (அலை) மக்கா நகருக்காக உன்னிடம் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவிற்காக உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். அவர்கள் மக்காவிற்காகப் பிரார்த்தித்த அளவிற்கு, அல்லது அதனுடன் மற்றொரு மடங்கும் (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கின்றேன்” என்பார்கள். பிறகு அ(ங்குக் கனியைக் கொண்டு வந்த)வரின் சிறு குழந்தையை அழைத்து, அதனிடம் அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2436

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

حَرَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا بَيْنَ ‏ ‏لَابَتَيِ الْمَدِينَةِ ‏
‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَلَوْ وَجَدْتُ الظِّبَاءَ مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏ ‏مَا ‏ ‏ذَعَرْتُهَا ‏ ‏وَجَعَلَ اثْنَيْ عَشَرَ مِيلًا حَوْلَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏حِمًى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவித்தார்கள். ஆகவே, நான் மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மான்களைக் கண்டால், அவற்றை மிரளவைக்கமாட்டேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவைச் சுற்றி பன்னிரண்டு மைல் தொலைதூரத்தைப் பாதுகாக்கப்பட்ட (புனித) எல்லையாக அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2435

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

أَنَّهُ كَانَ يَقُولُ لَوْ رَأَيْتُ الظِّبَاءَ تَرْتَعُ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏مَا ‏ ‏ذَعَرْتُهَا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏ ‏حَرَامٌ

மதீனாவில் மான்கள் மேய்ந்துகொண்டிருப்பதை நான் கண்டால் அவற்றை (விரட்டவோ பிடிக்கவோ முயன்று) மிரளவைக்கமாட்டேன். (ஏனெனில்) “மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி புனிதமானதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2434

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْمَدِينَةُ ‏ ‏حَرَمٌ فَمَنْ ‏ ‏أَحْدَثَ ‏ ‏فِيهَا ‏ ‏حَدَثًا ‏ ‏أَوْ ‏ ‏آوَى ‏ ‏مُحْدِثًا ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏عَدْلٌ ‏ ‏وَلَا ‏ ‏صَرْفٌ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَلَمْ يَقُلْ يَوْمَ الْقِيَامَةِ وَزَادَ وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ ‏ ‏يَسْعَى بِهَا أَدْنَاهُمْ فَمَنْ ‏ ‏أَخْفَرَ ‏ ‏مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏عَدْلٌ ‏ ‏وَلَا ‏ ‏صَرْفٌ

“மதீனா, புனித நகரமாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றைப் புகுத்துகின்றானோ, அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த உபரியான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையும் மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “மறுமை நாளில் …” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

மேலும், “முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது (தரத்தில்) ஒன்றேயாகும்.  அவர்களில் சாமானிய மக்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த உபரியான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று கூடுதல் தகவல்களோடு இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2433

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

خَطَبَنَا ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏فَقَالَ مَنْ زَعَمَ أَنَّ عِنْدَنَا شَيْئًا نَقْرَؤُهُ إِلَّا كِتَابَ اللَّهِ وَهَذِهِ الصَّحِيفَةَ قَالَ وَصَحِيفَةٌ مُعَلَّقَةٌ فِي ‏ ‏قِرَابِ ‏ ‏سَيْفِهِ فَقَدْ كَذَبَ فِيهَا أَسْنَانُ الْإِبِلِ وَأَشْيَاءُ مِنْ الْجِرَاحَاتِ وَفِيهَا قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةُ ‏ ‏حَرَمٌ مَا بَيْنَ ‏ ‏عَيْرٍ ‏ ‏إِلَى ‏ ‏ثَوْرٍ ‏ ‏فَمَنْ ‏ ‏أَحْدَثَ ‏ ‏فِيهَا ‏ ‏حَدَثًا ‏ ‏أَوْ ‏ ‏آوَى ‏ ‏مُحْدِثًا ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏صَرْفًا ‏ ‏وَلَا ‏ ‏عَدْلًا ‏ ‏وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ ‏ ‏يَسْعَى بِهَا أَدْنَاهُمْ وَمَنْ ‏ ‏ادَّعَى ‏ ‏إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ انْتَمَى إِلَى غَيْرِ ‏ ‏مَوَالِيهِ ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏صَرْفًا ‏ ‏وَلَا ‏ ‏عَدْلًا ‏ ‏وَانْتَهَى حَدِيثُ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَزُهَيْرٍ ‏ ‏عِنْدَ قَوْلِهِ ‏ ‏يَسْعَى بِهَا أَدْنَاهُمْ وَلَمْ يَذْكُرَا مَا بَعْدَهُ وَلَيْسَ فِي حَدِيثِهِمَا مُعَلَّقَةٌ فِي ‏ ‏قِرَابِ ‏ ‏سَيْفِهِ ‏


و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏إِلَى آخِرِهِ وَزَادَ فِي الْحَدِيثِ فَمَنْ ‏ ‏أَخْفَرَ ‏ ‏مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏صَرْفٌ ‏ ‏وَلَا ‏ ‏عَدْلٌ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِهِمَا مَنْ ‏ ‏ادَّعَى ‏ ‏إِلَى غَيْرِ أَبِيهِ وَلَيْسَ فِي رِوَايَةِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏ذِكْرُ يَوْمِ الْقِيَامَةِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏وَوَكِيعٍ ‏ ‏إِلَّا قَوْلَهُ مَنْ تَوَلَّى غَيْرَ ‏ ‏مَوَالِيهِ ‏ ‏وَذِكْرَ اللَّعْنَةِ لَهُ

அலீ பின் அபீதாலிப் (ரலி) தமது வாளின் உறையில் ஏடு ஒன்றைத் தொங்கவிட்டவர்களாக எங்களிடையே உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) “நம்மிடம் அல்லாஹ்வின் வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர நாம் ஓதுகின்ற நூலேதும் உள்ளதெனக் கூறுகின்றவர் பொய்யுரைத்துவிட்டார்” என்று கூறி(விட்டு, அதை விரித்துக் காட்டலா)னார்கள். அதில், (உயிருக்கான ஈடாகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயதைப் பற்றிய குறிப்புகளும் (அநியாயமாகப் பிறருக்குக்) காயங்கள் ஏற்படுத்தியவர்களுக்கான தண்டனை குறித்தும் எழுதப்பட்டிருந்தன. மேலும், அதில் “மதீனா நகரமானது, (அங்குள்ள) ‘அய்ரு’ மலையிலிருந்து ‘ஸவ்ரு’ (எனும் சிறிய) மலைவரை புனிதமானதாகும். அதில் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துபவருக்கு, அல்லது புதியவற்றைப் புகுத்துபவருக்கு அடைக்கலம் அளிப்பவருக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாட்டையும் உபரியான வழிபாட்டையும் மறுமை நாளில் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது (தரத்தில்) ஒன்றே. அவர்களில் சாமானியரும் அடைக்கலம் அளிக்க முன்வரலாம். தன் தந்தை அல்லாத ஒருவரைத் தன் தந்தை என வாதிடுபவனுக்கு, அல்லது தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாத ஒருவரைத் தன் உரிமையாளர் எனக் கூறுபவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் உபரியான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று நபி (ஸல்) கூறியதாகவும் எழுதப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்)


குறிப்புகள் :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) மற்றும் ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “அவர்களில் சாமானியரும் அடைக்கலம் அளிக்க முன்வரலாம்” என்பதோடு ஹதீஸ் முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை. இவ்விருவரின் அறிவிப்பில் “அந்த ஏடு அலீ (ரலி) வாளில் தொங்கவிடப்பட்டிருந்தது” எனும் குறிப்பும் காணப்படவில்லை.

“ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் உபரியான வழிபாடு எதுவுமே ஏற்கப்படாது” என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. எனினும், “தன் தந்தை அல்லாத ஒருவரை …” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில் “மறுமை நாளில் …“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

இப்னு முஸ்ஹிர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உரிமையாளர் அல்லாதவரைத் தன் காப்பாளராக ஆக்கிக்கொள்பவருக்கு…” எனும் சொற்றொடரும், சாபம் பற்றிய குறிப்பும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2432

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ السَّامِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يُونُسَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ اجْعَلْ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏ضِعْفَيْ مَا ‏ ‏بِمَكَّةَ ‏ ‏مِنْ الْبَرَكَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தைப் போன்று இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2431

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ وَبَارِكْ لَهُمْ فِي ‏ ‏صَاعِهِمْ ‏ ‏وَبَارِكْ لَهُمْ فِي ‏ ‏مُدِّهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக! (குறிப்பாக) அவர்களது (அளவைகளான) ‘ஸாஉ’விலும் ‘முத்’துவிலும் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2430

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَاصِمٌ الْأَحْوَلُ ‏ ‏قَالَ: ‏

سَأَلْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏أَحَرَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏قَالَ نَعَمْ ‏ ‏هِيَ حَرَامٌ لَا ‏ ‏يُخْتَلَى ‏ ‏خَلَاهَا ‏ ‏فَمَنْ فَعَلَ ذَلِكَ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவைப் புனித(நகர)மாக அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; அது புனித(நகர)மாகும். அதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. யார் அவ்வாறு செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஆஸிம் பின் ஸுலைமான் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2429

‏و حَدَّثَنَاه ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِأَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَحَرَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏قَالَ نَعَمْ مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا فَمَنْ ‏ ‏أَحْدَثَ ‏ ‏فِيهَا ‏ ‏حَدَثًا ‏ ‏قَالَ ثُمَّ قَالَ لِي هَذِهِ شَدِيدَةٌ ‏ ‏مَنْ ‏ ‏أَحْدَثَ ‏ ‏فِيهَا ‏ ‏حَدَثًا ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏صَرْفًا ‏ ‏وَلَا ‏ ‏عَدْلًا ‏
‏قَالَ فَقَالَ ‏ ‏ابْنُ أَنَسٍ ‏ ‏أَوْ ‏ ‏آوَى ‏ ‏مُحْدِثًا

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; இங்கிருந்து … அதுவரை (மதீனா புனிதமானது என்று அறிவித்தார்கள். மேலும் சொன்னார்கள்:) அதில் யார் (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றானோ. அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். (-இது ஒரு கடுமையான எச்சரிக்கை-) அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் உபரியான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று கூறினார்கள் என விடையளித்தார்கள்.

அப்போது மூஸா பின் அனஸ் (ரஹ்) “ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றவன், அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கின்றவன்” என்று (சேர்த்துக்கொள்ளுமாறு) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்)