و حَدَّثَنَاه ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِي قُبَاءً يَعْنِي كُلَّ سَبْتٍ كَانَ يَأْتِيهِ رَاكِبًا وَمَاشِيًا
قَالَ ابْنُ دِينَارٍ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ و حَدَّثَنِيهِ عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ ابْنِ دِينَارٍ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ كُلَّ سَبْتٍ
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒவ்வொரு சனிக்கிழமையும் வாகனத்திலும் (சிலபோது) நடந்தும் குபாவிற்குச் செல்வார்கள்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்)
குறிப்பு ;
“இவ்வாறே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் செய்துவந்தார்கள்” என்று அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.
வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், ‘ஒவ்வொரு சனிக்கிழமையும்‘ என்ற குறிப்பு இடம்பெறவில்லை.