و حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ عَنْ عَمْرَةَ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ
خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ وَلَا نَرَى إِلَّا أَنَّهُ الْحَجُّ حَتَّى إِذَا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ إِذَا طَافَ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا فَقِيلَ ذَبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ
قَالَ يَحْيَى فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ فَقَالَ أَتَتْكَ وَاللَّهِ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ أَخْبَرَتْنِي عَمْرَةُ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ح و حَدَّثَنَاه ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَحْيَى بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் துல்கஅதா மாதம் நிறைவடைய ஐந்து நாள்கள் பாக்கி இருந்தபோது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம்.
நாங்கள் மக்காவை நெருங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வந்தவர் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி முடித்தவுடன் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடவேண்டும்” என்று கட்டளையிட்டார்கள்.
பிறகு துல்ஹஜ் பத்தாவது நாள் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டு வரப்பட்டது. நான், “இது என்ன (இறைச்சி)?” என்று கேட்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக அறுத்துப் பலியிட்டது” என்று பதிலளிக்கப்பட்டது.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு : “நான் இந்த ஹதீஸை காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்) அவர்களிடம் எடுத்துக் கூறினேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஹதீஸை, உள்ளது உள்ளபடி அம்ரா உமக்கு அறிவித்துள்ளார்” என்றார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) கூறுகின்றார்.