அத்தியாயம்: 3, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1995

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ ‏ ‏تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ فَأَتَيْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَكَانَ لِي صَدِيقًا فَقُلْتُ أَلَا تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ فَخَرَجَ وَعَلَيْهِ ‏ ‏خَمِيصَةٌ ‏ ‏فَقُلْتُ لَهُ ‏
‏سَمِعْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ نَعَمْ ‏ ‏اعْتَكَفْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَشْرَ الْوُسْطَى مِنْ رَمَضَانَ فَخَرَجْنَا صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نَسِيتُهَا أَوْ أُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ كُلِّ ‏ ‏وِتْرٍ ‏ ‏وَإِنِّي أُرِيتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ فَمَنْ كَانَ ‏ ‏اعْتَكَفَ ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلْيَرْجِعْ قَالَ فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ ‏ ‏قَزَعَةً ‏ ‏قَالَ وَجَاءَتْ سَحَابَةٌ فَمُطِرْنَا حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ وَأُقِيمَتْ الصَّلَاةُ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ قَالَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَفِي حَدِيثِهِمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ انْصَرَفَ وَعَلَى جَبْهَتِهِ ‏ ‏وَأَرْنَبَتِهِ ‏ ‏أَثَرُ الطِّينِ

நாங்கள் லைலத்துல் கத்ரு இரவு பற்றி (ஒரு நாள்) பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் தோழராக இருந்தார்கள். அவர்களிடம், “நீங்கள் எங்களுடன் பேரீச்சந் தோப்பு வரை வருகிறீர்களா?” என்று கேட்டேன். உடனே புறப்பட்டார்கள்.

அப்போது அவர்கள் கறுப்புக் கம்பளி ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் “லைலத்துல் கத்ரு இரவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கின்றீர்களா?” என்று கேட்டேன்.

அவர்கள், “ஆம், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாவது நாள் காலையில் நாங்கள் (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடையே உரையாற்றினார்கள்.

‘எனக்கு லைலத்துல் கத்ரு இரவு (கனவில்) காட்டப் பட்டது. ஆனால், அதை நான் மறந்து விட்டேன். (அல்லது மறக்கடிக்கப்பட்டேன்.) எனவே, ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப் படையான ஒவ்வோர் இரவிலும் அதை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள். நான் (அந்த இரவில்) ஈரச் சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதைப் போன்று எனக்குக் காட்டப் பட்டது. அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தவர் மறுபடியும் (பள்ளிவாசலுக்கு) வரட்டும்!” என்றார்கள்.

நாங்கள் மீண்டும் சென்றோம். அப்போது வானில் மழை மேகத்தின் ஒரு துண்டைக்கூட நாங்கள் காணவில்லை. (திடீரென) ஒரு மேகம் (திரண்டு) வந்து மழை பெய்தது. பள்ளிவாசலின் கூரையிலிருந்து மழை நீர் சொட்டியது. அப்போதைய கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டு இருந்தது. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஈரச் சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ததை நான் கண்டேன். அவர்களது நெற்றியில் சேறு படிந்திருந்ததைக் கண்டேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)


குறிப்பு : அல் அவ்ஸாயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்துத் திரும்பியபோது அவர்களை நான் கண்டேன். அவர்களது நெற்றியிலும் மூக்கு நுனியிலும் சேற்றின் அடையாளம் இருந்தது” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1993

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏فِي الْعَشْرِ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ فَإِذَا كَانَ مِنْ حِينِ تَمْضِي عِشْرُونَ لَيْلَةً وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ يَرْجِعُ إِلَى مَسْكَنِهِ وَرَجَعَ مَنْ كَانَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏مَعَهُ ثُمَّ إِنَّهُ أَقَامَ فِي شَهْرٍ ‏ ‏جَاوَرَ ‏ ‏فِيهِ تِلْكَ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا فَخَطَبَ النَّاسَ فَأَمَرَهُمْ بِمَا شَاءَ اللَّهُ ثُمَّ قَالَ ‏ ‏إِنِّي كُنْتُ ‏ ‏أُجَاوِرُ ‏ ‏هَذِهِ الْعَشْرَ ثُمَّ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الْأَوَاخِرَ فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَبِتْ فِي مُعْتَكَفِهِ وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ فَأُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ ‏ ‏وِتْرٍ ‏ ‏وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏مُطِرْنَا لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ ‏ ‏فَوَكَفَ ‏ ‏الْمَسْجِدُ فِي مُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنَظَرْتُ إِلَيْهِ وَقَدْ انْصَرَفَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَوَجْهُهُ مُبْتَلٌّ طِينًا وَمَاءً ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏فِي رَمَضَانَ الْعَشْرَ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ وَقَالَ وَجَبِينُهُ مُمْتَلِئًا طِينًا وَمَاءً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த (ரமளான்) மாதத்தின் நடுப் பத்து நாட்களில் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப் வழிபாட்டில்) இருப்பார்கள். இருபதாவது இரவு முடிந்து இருபத்தொன்றாவது இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருப்பவர்களும் திரும்புவார்கள்.

இவ்வழக்கப்படி, ஒரு ரமளானில் இஃதிகாஃப் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாம் வழக்கமாக இல்லம் திரும்பும் இரவில் (பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடியவற்றை அவர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.

பின்னர் “நான் இந்த(நடு)ப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடன் இந்த(நடு)ப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தவர் அதே இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும். இந்த (லைலத்துல் கத்ரு) இரவை நான் (கனவில்) கண்டேன். பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டது. எனவே, (ரமளானின்) இறுதிப் பத்தில் ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள். நான் (லைலத்துல் கத்ரு இரவில்) ஈரச் சேற்றில் ஸஜ்தாச் செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்” என்று கூறினார்கள்.

இருபத்தொன்றாவது நாள் இரவில் எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசல் கூரையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழும் இடத்தில் மழை நீர் சொட்டியது. அன்று காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுப்ஹுத் தொழுதுவிட்டுத் திரும்பும்போது அவர்களை நான் கண்டேன். அவர்களது முகத்தில் ஈரமான சேறு படிந்திருந்தது.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)


குறிப்பு : அப்துல் அஜீஸ் அத்தராவர்தீ (ரஹ்) வழி அறிவிப்பும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள் …” என்றே தொடங்குகிறது. (ஆனால்,) “அவர்களது நெற்றியில் ஈரமான சேறு” என்று காணப்படுகிறது.