அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2316

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

‏قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ ‏ ‏بِمِنًى ‏ ‏نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ ‏ ‏بَنِي كِنَانَةَ ‏ ‏حَيْثُ ‏ ‏تَقَاسَمُوا ‏ ‏عَلَى الْكُفْرِ وَذَلِكَ إِنَّ ‏ ‏قُرَيْشًا ‏ ‏وَبَنِي كِنَانَةَ ‏ ‏تَحَالَفَتْ عَلَى ‏ ‏بَنِي هَاشِمٍ ‏ ‏وَبَنِي الْمُطَّلِبِ ‏ ‏أَنْ لَا ‏ ‏يُنَاكِحُوهُمْ وَلَا يُبَايِعُوهُمْ حَتَّى يُسْلِمُوا إِلَيْهِمْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَعْنِي بِذَلِكَ ‏ ‏الْمُحَصَّبَ

நாங்கள் மினாவில் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாளை நாம் பனூ கினானா – அதாவது அல்முஹஸ்ஸப் – பள்ளத்தாக்கில் தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் ‘நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தனர்” என்று கூறினார்கள்.

குறைஷியரும் பனூ கினானா குலத்தாரும் பனூ ஹாஷிம், பனுல் முத்தலிப் குலத்தாருக்கெதிராக (அவர்களைச் சமூக பகிஷ்காரம் செய்வதாக) உறுதிமொழி எடுத்திருந்தனர். அவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒப்படைக்காத வரை அவ்விரு குலத்தாருடன் திருமண உறவோ வணிகரீதியான கொடுக்கல் வாங்கலோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்திருந்தனர்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)