அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 187

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏الْجَعْدِ أَبِي عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ سَيِّئَةً وَاحِدَةً ‏
‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْجَعْدِ أَبِي عُثْمَانَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏وَزَادَ وَمَحَاهَا اللَّهُ وَلَا يَهْلِكُ عَلَى اللَّهِ إِلَّا هَالِكٌ ‏

“நன்மைகளையும் தீமைகளையும் அல்லாஹ் (வரையறுத்து) விதி செய்து, பின்னர் அவற்றை விளக்கி விட்டான். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து விட்டவருக்கு, அதைச் செய்யாவிட்டாலும் ஒரு முழுமையான நன்மையாக அதை அல்லாஹ் பதிவு செய்கிறான். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்தும் முடித்துவிட்டால் அதை அவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்காக, இன்னும் பல மடங்குகளாகப் பதிவு செய்கிறான். ஒரு தீமையைச் செய்ய நினைத்து, (அல்லாஹ்வின் அச்சமேற்பட்டு) அதைச் செய்யாதவருக்கு அதை ஒரு முழு நன்மையாகப் பதிவு செய்கிறான். நினைத்தவாறு அவர் செய்து முடித்தால் ஒரு தீமையாக (மட்டுமே) பதிவு செய்கிறான்” என்று மிக்குயர்ந்தோனும் வளங்களுக்கு உரியவனுமான தம் இறைவனைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸின் வேறொரு வழி அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அப்துல் வாரிஸ் என்பவர், “விரிந்து-பரந்து கிடக்கும் அல்லாஹ்வின் அருளை அள்ளிக் கொள்ளாமல் அலட்சியப் படுத்தியவன் அழிந்து விடுவான்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 186

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَعَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ وَإِنْ عَمِلَهَا كُتِبَتْ ‏

“ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து விட்டவருக்கு, அதைச் செய்யாவிட்டாலும் ஒரு நன்மையாக அது பதிவு செய்யப்பட்டுவிடும். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்தும் முடித்துவிட்டவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக அது பதிவு செய்யப்படும். ஒரு தீமையைச் செய்ய நினைத்து, அதைச் செய்யாதவருக்கு அ(வரது தீய எண்ணமான)து (தீமையாகப்) பதியப்படுவதில்லை. நினைத்தவாறு அவர் செய்து முடித்தால் (மட்டுமே) பதிவு செய்யப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 185

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏
‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا ‏ ‏تَحَدَّثَ ‏ ‏عَبْدِي بِأَنْ يَعْمَلَ حَسَنَةً فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا وَإِذَا ‏ ‏تَحَدَّثَ ‏ ‏بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً فَأَنَا أَغْفِرُهَا لَهُ مَا لَمْ يَعْمَلْهَا فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا لَهُ بِمِثْلِهَا وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ الْمَلَائِكَةُ رَبِّ ذَاكَ عَبْدُكَ يُرِيدُ أَنْ يَعْمَلَ سَيِّئَةً وَهُوَ أَبْصَرُ بِهِ فَقَالَ ارْقُبُوهُ فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً إِنَّمَا تَرَكَهَا مِنْ جَرَّايَ وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلَامَهُ فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِمِثْلِهَا حَتَّى يَلْقَى اللَّهَ ‏

“என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய நினைத்தால், அவன் அதைச் செய்து முடிக்காவிட்டாலும் ஒரு நன்மையாகப் பதிவு செய்வேன். அதை அவன் செய்து முடித்து விட்டால், அதைப் போன்ற பத்து நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்யாவிட்டால் அவனை மன்னித்து விடுவேன். அவன் (செய்ய நினைத்த) அந்தத் தீமையைச் செய்து விட்டால் செய்ததற்கொப்ப ஒரு தீமையாகப் பதிவு செய்வேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கூறினான்”.

“தன் (ஒவ்வொரு) அடியானை(யும்) பார்த்து (அவனது எண்ணவோட்டங்களை) அல்லாஹ் அறிந்து கொண்டிருக்கும் நிலையில், ‘இறைவா! உன்னுடைய இன்ன அடியான் ஒரு தீமையைச் செய்ய விரும்புகிறானே?’ என்று வானவர்கள் கேட்டதற்கு, ‘அவனைக் கண்காணித்து வாருங்கள்! அந்தத் தீமையை அவன் செய்து முடித்து விட்டால் செய்ததற்கொப்ப ஒரு தீமையாக அதைப் பதிவு செய்யுங்கள். அந்தத் தீமையைச் செய்வதை அவன் கைவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். ஏனெனில், என் (மீதிருந்த அச்சத்தி)னால் தான் அதை அவன் கைவிட்டான்’ என்று அல்லாஹ் கூறினான்”.

“உங்களுள் இஸ்லாத்தைத் தம் செயல்பாடுகளால் அழகுபடுத்தும் ஒருவருக்கு, அவர் (மரணித்து) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் அதைப் போன்று பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை (நன்மை) பதிவு செய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அதற்கொப்ப ஒரு தீமையே பதிவு செய்யப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி).

குறிப்பு:

“இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்தப் பல ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முநப்பிஹ் (ரஹ்) கூறும் குறிப்பொன்று இதில் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 184

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ وَلَمْ يَعْمَلْهَا كَتَبْتُهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كَتَبْتُهَا عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَإِذَا هَمَّ بِسَيِّئَةٍ وَلَمْ يَعْمَلْهَا لَمْ أَكْتُبْهَا عَلَيْهِ فَإِنْ عَمِلَهَا كَتَبْتُهَا سَيِّئَةً وَاحِدَةً ‏

“என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்து விட்டாலும் அதை ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். அவன் (எண்ணியவாறு) அந்த நன்மையை செயல்படுத்தி விட்டால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மையாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு தீமையாகப் பதிவு செய்வதில்லை. அவன் (எண்ணியவாறு) அந்தத் தீமையை செய்து விட்டால் அதை ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்வேன் என்று மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கூறினான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 183

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا سَيِّئَةً وَإِذَا هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا حَسَنَةً فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا عَشْرًا ‏

“என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணமிட்டால் (மட்டும்) அதை நீங்கள் பதிவு செய்துவிட வேண்டாம். அவன் அதைச் செயல்படுத்தி விட்டால் ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்து விட்டாலும் அதை ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அதை அவன் செய்து விட்டால் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (தன் வானவர்களுக்குக்) கட்டளையிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி).