அத்தியாயம்: 1, பாடம்: 79, ஹதீஸ் எண்: 264

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏
‏قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِأَرْبَعٍ ‏ ‏إِنَّ اللَّهَ لَا يَنَامُ وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَرْفَعُ ‏ ‏الْقِسْطَ ‏ ‏وَيَخْفِضُهُ وَيُرْفَعُ إِلَيْهِ عَمَلُ النَّهَارِ بِاللَّيْلِ وَعَمَلُ اللَّيْلِ بِالنَّهَارِ

“அல்லாஹ் உறங்கமாட்டான்; உறங்குவது என்பது அவனுக்குத் தகாதது.

அவன் (மனித வாழ்வின்) துலாக்கோலைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

(மனிதர்கள்) இரவில் புரிந்த செயல்கள், (அவர்களது) பகல் செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறன.

(மனிதர்கள்) பகலில் புரிந்த செயல்கள், (அவர்களது) இரவுச் செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறன” என்ற நான்கு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்றவர்களாக எங்களுக்குச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி).