அத்தியாயம்: 1, பாடம்: 80, ஹதீஸ் எண்: 265

حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏وَأَبُو غَسَّانَ الْمَسْمَعِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الصَّمَدِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي غَسَّانَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءُ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ

“பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியாலான இரு சொர்க்கங்கள் (அல்லாஹ்விடம்) உள்ளன. பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னாலான (வேறு) இரு சொர்க்கங்களும் உள்ளன. ‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்குத் தடையேதும் இருக்காது – அவன் மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment