அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 367

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَسُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَى الْمَقْبُرَةَ فَقَالَ ‏ ‏السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا قَالُوا أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ فَقَالُوا كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا لَهُ خَيْلٌ غُرٌّ ‏ ‏مُحَجَّلَةٌ ‏ ‏بَيْنَ ظَهْرَيْ خَيْلٍ ‏ ‏دُهْمٍ ‏ ‏بُهْمٍ ‏ ‏أَلَا يَعْرِفُ خَيْلَهُ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّهُمْ يَأْتُونَ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ الْوُضُوءِ وَأَنَا ‏ ‏فَرَطُهُمْ ‏ ‏عَلَى الْحَوْضِ أَلَا ‏ ‏لَيُذَادَنَّ ‏ ‏رِجَالٌ عَنْ حَوْضِي كَمَا ‏ ‏يُذَادُ ‏ ‏الْبَعِيرُ الضَّالُّ ‏ ‏أُنَادِيهِمْ أَلَا ‏ ‏هَلُمَّ ‏ ‏فَيُقَالُ إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ فَأَقُولُ ‏ ‏سُحْقًا ‏ ‏سُحْقًا ‏
‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ إِلَى الْمَقْبُرَةِ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏غَيْرَ أَنَّ حَدِيثَ ‏ ‏مَالِكٍ ‏ ‏فَلَيُذَادَنَّ ‏ ‏رِجَالٌ عَنْ حَوْضِي ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்’ (மண்ணறையிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடும்போது நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறிவிட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகில்) காண விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் காண விரும்பியது) இதுவரை (பூமியில் பிறந்து) வந்திராத நம் சகோதரர்களை” என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்து, அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ளமாட்டாரா? கூறுங்கள்” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (உளூவின்) உறுப்புகள் ஒளிர்பவர்களாக (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்-கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து) விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் ‘வாருங்கள்’ என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றி விட்டார்கள்’ என்று சொல்லப்படும். அப்போது நான் “(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக; அப்புறப்படுத்துவானாக!” என்று கூறுவேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், இஸ்ஹாக் பின் மூஸா அல்-அன்ஸாரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து) விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள்” என்றில்லாமல், “நிச்சயமாக சிலர் எனது தடாகத்திலிருது துரத்தப் படுவார்கள்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 366

و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِىِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ حَوْضِي لَأَبْعَدُ مِنْ ‏ ‏أَيْلَةَ ‏ ‏مِنْ ‏ ‏عَدَنٍ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي ‏ ‏لَأَذُودُ ‏ ‏عَنْهُ الرِّجَالَ كَمَا ‏ ‏يَذُودُ ‏ ‏الرَّجُلُ الْإِبِلَ الْغَرِيبَةَ عَنْ حَوْضِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَتَعْرِفُنَا قَالَ نَعَمْ تَرِدُونَ عَلَيَّ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ آثَارِ الْوُضُوءِ لَيْسَتْ لِأَحَدٍ غَيْرِكُمْ ‏

“எனது (சுவனத்) தடாக(மான அல்-கவ்ஸரின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென்திசையின்) ஏடன் நகரத்திலிருந்து (வடதிசையின்) ஐலாவைவிட அதிகத் தொலைவுடையதாகும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டு மற்றவர்களின் ஒட்டகத்தை விரட்டுவதைப் போன்று, அந்தத் தடாகத்திலிருந்து சிலரை நான் விரட்டி விடுவேன்” என்று கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; நீங்கள் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக (உளூவின்) உறுப்புகள் ஒளிர்பவர்களாய் என்னிடம் வருவீர்கள். அந்த அடையாளம் உங்களையன்றி வேறெவருக்கும் இருக்காது.” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 365

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِوَاصِلٍ ‏ ‏قَالَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَرِدُ عَلَيَّ أُمَّتِي الْحَوْضَ وَأَنَا ‏ ‏أَذُودُ ‏ ‏النَّاسَ عَنْهُ كَمَا ‏ ‏يَذُودُ ‏ ‏الرَّجُلُ إِبِلَ الرَّجُلِ عَنْ إِبِلِهِ قَالُوا يَا نَبِيَّ اللَّهِ أَتَعْرِفُنَا قَالَ نَعَمْ لَكُمْ ‏ ‏سِيمَا ‏ ‏لَيْسَتْ لِأَحَدٍ غَيْرِكُمْ تَرِدُونَ عَلَيَّ غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ آثَارِ الْوُضُوءِ وَلَيُصَدَّنَّ عَنِّي طَائِفَةٌ مِنْكُمْ فَلَا يَصِلُونَ فَأَقُولُ يَا رَبِّ هَؤُلَاءِ مِنْ أَصْحَابِي فَيُجِيبُنِي مَلَكٌ فَيَقُولُ وَهَلْ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது சமுதாயத்தார் (மறுமை நாளில்) எனது (அல்-கவ்ஸர் எனும்) தடாகத்திற்கு வருவார்கள். ஒருவர் தமது ஒட்டகத்தைத் தவிர்த்து, பிறரது ஒட்டகத்தை விரட்டி விடுவதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரை விரட்டுவேன்” என்று கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் நபியே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஆம்; வேறெவருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக (உளூவின்) உறுப்புகள் ஒளிர்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். உங்களில் ஒரு குழுவினர் என்னிடம் வரமுடியாதவாறு தடுக்கப்படுவர். அவர்களால் (என்னிடம்) வந்து சேரமுடியாது. அப்போது நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்” என்பேன். அப்போது வானவர் ஒருவர், ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (பொல்லாப் புதுமைகளாக உங்களது மார்க்கத்தில்) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று என்னிடம் கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 364

حَدَّثَنَا ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مَرْوَانَ الْفَزَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ حَوْضِي أَبْعَدُ مِنْ ‏ ‏أَيْلَةَ ‏ ‏مِنْ ‏ ‏عَدَنٍ ‏ ‏لَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنْ الثَّلْجِ وَأَحْلَى مِنْ الْعَسَلِ بِاللَّبَنِ وَلَآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ النُّجُومِ وَإِنِّي لَأَصُدُّ النَّاسَ عَنْهُ كَمَا يَصُدُّ الرَّجُلُ إِبِلَ النَّاسِ عَنْ حَوْضِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَتَعْرِفُنَا يَوْمَئِذٍ قَالَ نَعَمْ لَكُمْ سِيمَا لَيْسَتْ لِأَحَدٍ مِنْ الْأُمَمِ تَرِدُونَ عَلَيَّ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ أَثَرِ الْوُضُوءِ ‏

“எனது (சுவனத்) தடாக(மான அல்-கவ்ஸரின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென்திசையின்) ஏடன் நகரத்திலிருந்து (வடதிசையின்) ஐலாவைவிட அதிகத் தொலைவுடையதாகும். அதன் நீர், பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையும் பால் கலந்த தேனைவிட இனிமையுமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியில் (பிற)மக்களின் ஒட்டகங்கள் (நீரருந்துவதைத்) தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்த சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக உறுப்புகள் ஒளிர்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதன் மூலம் உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 363

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏
‏يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ حَتَّى كَادَ يَبْلُغُ الْمَنْكِبَيْنِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ حَتَّى رَفَعَ إِلَى السَّاقَيْنِ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ أَثَرِ الْوُضُوءِ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ ‏ ‏غُرَّتَهُ ‏ ‏فَلْيَفْعَلْ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவியதோடு, (கூடுதலாகக் கழுவுதலைத்) தோள்பட்டைவரை நீட்டினார்கள். பிறகு கால்களைக் கழுவியதோடு (கழுவுதலைக்) கணுக்கால்வரை உயர்த்தினார்கள். பிறகு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக (உளூவின்) உறுப்புகள் ஒளியுடையோராக வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவின் உறுப்புகளைக் கூடுதலாக நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக் கொள்ள முடியுமோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்).

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 362

حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَالْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ بْنِ دِينَارٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَارَةُ بْنُ غَزِيَّةَ الْأَنْصَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ ‏ ‏قَالَ رَأَيْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏
‏يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ ‏ ‏فَأَسْبَغَ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي الْعَضُدِ ثُمَّ يَدَهُ الْيُسْرَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي الْعَضُدِ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي السَّاقِ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُسْرَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي السَّاقِ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَوَضَّأُ وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْتُمْ ‏ ‏الْغُرُّ ‏ ‏الْمُحَجَّلُونَ ‏ ‏يَوْمَ الْقِيَامَةِ مِنْ ‏ ‏إِسْبَاغِ ‏ ‏الْوُضُوءِ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ فَلْيُطِلْ ‏ ‏غُرَّتَهُ ‏ ‏وَتَحْجِيلَهُ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தை முழுமையாகக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் புஜம் வரைக் கழுவினார்கள். பிறகு இடக் கரத்தை புஜம் வரை கழுவினார்கள். பிறகு (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். பிறகு வலக் காலின் கணுவரை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் (அவ்வாறே) கணுவரைக் கழுவினார்கள். பின்னர், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு, “நீங்கள் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தமையால் மறுமை நாளில் (உளூச் செய்த) உறுப்புகள் ஒளியுடையோராக இருப்பீர்கள். எனவே, உங்களில் யாருக்கு முடியுமோ அவர் (உளூவின் உறுப்புகளின்) எல்லைக்கு மேல் அதிகமாகக் கழுவிக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்).