அத்தியாயம்: 36, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3748

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، – وَاللَّفْظُ لاِبْنِ عَبَّادٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو صَفْوَانَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ قَالَ قَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُو هُرَيْرَةَ :‏

إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ ‏.‏ فَقَالَ لَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ ‏


وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ بِإِيلِيَاءَ ‏

நபி (ஸல்) ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் இரு கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. ஒன்றில் மதுவும் மற்றொன்றில் பாலும் இருந்தன. நபி (ஸல்) அவ்விரண்டையும் உற்றுப் பார்த்துவிட்டு, பால் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார்கள்.

அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை), “உங்களுக்கு இயற்கை வழியைக் காட்டிய இறைவனுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் தறிகெட்டுப் போயிருக்கும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மஅகில் வழி அறிவிப்பு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்களிடம் இரு கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன” என்று ஆரம்பமாகிறது. அதில் “ஜெரூசலத்திற்கு“ எனும் குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 36, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3747

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ الْهَمْدَانِيَّ، يَقُولُ سَمِعْتُ الْبَرَاءَ يَقُولُ :‏

لَمَّا أَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ فَأَتْبَعَهُ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ – قَالَ – فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَاخَتْ فَرَسُهُ فَقَالَ ادْعُ اللَّهَ لِي وَلاَ أَضُرُّكَ ‏.‏ قَالَ فَدَعَا اللَّهَ – قَالَ – فَعَطِشَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَمَرُّوا بِرَاعِي غَنَمٍ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ فَأَخَذْتُ قَدَحًا فَحَلَبْتُ فِيهِ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُثْبَةً مِنْ لَبَنٍ فَأَتَيْتُهُ بِهِ فَشَرِبَ حَتَّى رَضِيتُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது, அவர்களைப்  (பிடிப்பதற்காகப்) பின்தொடர்ந்து, ஸுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் என்பவர் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுராக்காவிற்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே அவரது குதிரை மணலில் அழுந்திவிட்டது.

ஸுராக்கா (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “உங்களுக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன், எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர்  ஆட்டு இடையன் ஒருவனை அவர்கள் கடந்துசென்றபோது அவர்கள் தாகித்திருந்தார்கள். (அடுத்து நடந்தவை பற்றி) அபூபக்ரு அஸ்ஸித்தீக் (ரலி) கூறுகிறார்கள்:

நான் ஒரு கிண்ணத்தை எடுத்து (ஓர் ஆட்டிலிருந்து) சிறிதளவு பாலைக் கறந்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்(து கொடுத்)தேன். நான் திருப்தியடையும் அளவுக்கு அதிலிருந்து அவர்கள் அருந்தினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3746

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ :‏

قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ لَمَّا خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ مَرَرْنَا بِرَاعٍ وَقَدْ عَطِشَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَحَلَبْتُ لَهُ كُثْبَةً مِنْ لَبَنٍ فَأَتَيْتُهُ بِهَا فَشَرِبَ حَتَّى رَضِيتُ ‏

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது, ஆட்டு இடையன் ஒருவனை நாங்கள் கடந்துசென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டிருந்தது. அப்போது நான் (அந்த இடையனின் ஆட்டிலிருந்து) சிறிதளவு பால் கறந்து, அதை நபியவர்களிடம் கொண்டுவ(ந்து கொடு)த்தேன். நான் திருப்தியடையும் அளவுக்கு அதை நபி (ஸல்) அருந்தினார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரு அஸ்ஸித்தீக் (ரலி) வழியாக பராஉ பின் ஆஸிப் (ரலி)