அத்தியாயம்: 4, பாடம்: 12, ஹதீஸ் எண்: 604

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏زُرَارَةَ بْنَ أَوْفَى ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الظُّهْرَ فَجَعَلَ رَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ ‏ ‏بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏أَيُّكُمْ قَرَأَ ‏ ‏أَوْ أَيُّكُمْ الْقَارِئُ ‏ ‏فَقَالَ رَجُلٌ أَنَا فَقَالَ قَدْ ظَنَنْتُ أَنَّ بَعْضَكُمْ ‏ ‏خَالَجَنِيهَا ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الظُّهْرَ وَقَالَ قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ ‏ ‏خَالَجَنِيهَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) லுஹர்த் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டிருந்த) ஒருவர் “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா” அத்தியாயத்தை (உரத்து) ஓதலானார். தொழுகையை முடித்துத் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் (எனக்குப் பின்னால் நின்று உரத்து) ஓதியவர்/ஓதிக்கொண்டிருந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒருவர், “நான்தான் (ஓதினேன்)” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் சிலர் (அவ்வாறு உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதாக எண்ணுகிறேன். (எனக்குப் பின்னால் நின்று தொழுபவர் எவரும் உரத்து ஓத வேண்டாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

குறிப்பு :

இபுனு அபீஉரூபா (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) லுஹர்த் தொழுவித்துவிட்டு, “உங்களில் சிலர் (உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதை அறிகிறேன்” எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 12, ஹதீஸ் எண்: 603

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏قَالَ ‏
‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الظُّهْرِ ‏ ‏أَوْ الْعَصْرِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّكُمْ قَرَأَ خَلْفِي ‏ ‏بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏فَقَالَ رَجُلٌ أَنَا وَلَمْ أُرِدْ بِهَا إِلَّا الْخَيْرَ قَالَ قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ ‏ ‏خَالَجَنِيهَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு லுஹர் அல்லது அஸ்ருத் தொழுகை தொழுவித்தார்கள். (தொழுது முடித்ததும்) அவர்கள், “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா அத்தியாயத்தை எனக்குப் பின்னால் (நின்று உரத்து) ஓதியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒருவர், “நன்மை (கிடைக்கும் என) நாடி அவ்வாறு ஓதியவன் நான்தான்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் சிலர் (உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதை அறிகிறேன். (எனக்குப் பின்னால் நின்று தொழுபவர் எவரும் உரத்து ஓத வேண்டாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)