அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1005

و حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو جَمْرَةَ الضُّبَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَلَّى ‏ ‏الْبَرْدَيْنِ ‏ ‏دَخَلَ الْجَنَّةَ ‏

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ السَّرِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ خِرَاشٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَاصِمٍ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَنَسَبَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَقَالَا ‏ ‏ابْنُ أَبِي مُوسَى

“பகலின் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ரு, அஸ்ரு ஆகிய) இரு குளிர்நேரத் தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) வழியாக அவரின் மகன் அபூபக்ரு பின் அபீமூஸா (ரஹ்)

குறிப்பு :

“இதில் இடம்பெறும் அபூபக்ரு (ரஹ்) என்பார் நபித்தோழர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களின் மகனாவார்” என உறுதிப்படுத்தும் வேறுவழி அறிவிப்புகளும் உள்ளன.

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1004

و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏يَلِجُ ‏ ‏النَّارَ مَنْ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏

وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ أَشْهَدُ بِهِ عَلَيْهِ قَالَ وَأَنَا أَشْهَدُ لَقَدْ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُهُ بِالْمَكَانِ الَّذِي سَمِعْتَهُ مِنْهُ

“சூரியன் உதிப்பதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் (ஃபஜ்ரையும் அஸ்ரையும் வேளை தவறாது) தொழுபவர் நரக நெருப்பில் நுழையமாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அறிவித்தார்கள். அப்போது உமாரா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த பஸ்ராவாசிகளில் ஒருவர், “இதை நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?'”என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி), “ஆம், நபி (ஸல்) அவ்வாறு கூறினார்கள் என நான் உறுதி அளிக்கிறேன்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த பஸ்ராவாசி, “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியேற்ற அதே இடத்தில் நானும் செவியுற்றிருக்கிறேன் என நானும் உறுதி அளிக்கிறேன்” என்றார்.

அறிவிப்பாளர் : உமாரா பின் ருஐபா (ரலி) வழியாக அவரின் மகன் அபூபக்ரிப்னு உமாரா (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1003

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي خَالِدٍ ‏ ‏وَمِسْعَرٍ ‏ ‏وَالْبَخْتَرِيِّ بْنِ الْمُخْتَارِ ‏ ‏سَمِعُوهُ مِنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَنْ ‏ ‏يَلِجَ ‏ ‏النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏ ‏يَعْنِي الْفَجْرَ وَالْعَصْرَ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ قَالَ الرَّجُلُ وَأَنَا أَشْهَدُ أَنِّي سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சூரியன் உதிப்பதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் -அதாவது ஃபஜ்ரையும் அஸ்ரையும் (உரிய வேளையில்) தொழுதவர் – எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்” என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?”என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் “ஆம்” என்றார்கள். “நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு செவிகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக்கொண்டது” என்று அவர் கூறினார்.

அறிவிப்பாளர் : உமாரா பின் ருஐபா (ரலி) வழியாக அவரின் மகன் அபூபக்ரிப்னு உமாரா (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1002

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏وَهُوَ ‏ ‏يَقُولُا ‏

كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ ‏ ‏أَمَا إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لَا ‏ ‏تُضَامُّونَ ‏ ‏فِي رُؤْيَتِهِ فَإِنْ اسْتَطَعْتُمْ أَنْ لَا تُغْلَبُوا عَلَى صَلَاةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏ ‏يَعْنِي الْعَصْرَ وَالْفَجْرَ ‏ ‏ثُمَّ قَرَأَ ‏ ‏جَرِيرٌ ‏ ‏وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏أَمَا إِنَّكُمْ سَتُعْرَضُونَ عَلَى رَبِّكُمْ فَتَرَوْنَهُ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ وَقَالَ ثُمَّ قَرَأَ وَلَمْ يَقُلْ ‏ ‏جَرِيرٌ

நாங்கள் (முழு நிலவுள்ள ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தவாறு, “நீங்கள் எவ்வித இடருமின்றி இந்த முழுநிலவைக் காண்பதைப் போன்றே உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும் சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் -அதாவது அஸ்ரிலும் ஃபஜ்ரிலும்- (உறக்கம் அசதி போன்ற எதுவும்) உங்களை மிகைப்பதற்கு இடம்கொடுக்காமல் இருக்க உங்களால் இயலுமானால் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸை அறிவித்த பிறகு ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), “சூரியன் உதயமாகும் முன்னரும் மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” எனும் (20:130ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள் என்று இதன் அறிவிப்பாளரான கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) கூறினார்கள்.

அபூபக்ரிப்னு அபீஷைபா (ரஹ்), அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்), அபூஉஸாமா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், “நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவீர்கள். அப்போது நீங்கள் அவனை இந்த முழுநிலவைக் காண்பதைப் போன்று காண்பீர்கள்”என்று கூறிவிட்டு, (20:130ஆவது) வசனத்தை நபி (ஸல்) ஓதிக் காட்டினார்கள் என இடம்பெற்றுள்ளதேயன்றி,. ஜரீர் (ரலி) ஓதிக்காட்டியதாக இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1001

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَتَعَاقَبُونَ ‏ ‏فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ ثُمَّ ‏ ‏يَعْرُجُ ‏ ‏الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ ‏ ‏كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ ‏

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَالْمَلَائِكَةُ ‏ ‏يَتَعَاقَبُونَ ‏ ‏فِيكُمْ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي الزِّنَادِ

“இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் அடுத்தடுத்து உங்களிடம் வருகின்றனர். அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையிலும் அஸ்ருத் தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றனர். பிறகு உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றனர். அப்போது இறைவன் தன் அடியார்களைப் பற்றி அறிந்திருத்தும் அ(வ்வான) வர்களிடம், ‘(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?’ என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், ‘அவர்கள் (உன்னைத்) தொழுதவர்களாக விட்டுவந்தோம்; (உன்னைத்) தொழுதவர்களான நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்’ என்று பதிலளிப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1000

و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ هِشَامٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو غَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏

أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏يَوْمَ ‏ ‏الْخَنْدَقِ ‏ ‏جَعَلَ يَسُبُّ كُفَّارَ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏وَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ الْعَصْرَ حَتَّى كَادَتْ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوَاللَّهِ إِنْ صَلَّيْتُهَا فَنَزَلْنَا إِلَى ‏ ‏بُطْحَانَ ‏ ‏فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَوَضَّأْنَا فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتْ الشَّمْسُ ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ

அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபியவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ருத் தொழுகை தொழ முடியாமல் போய்விட்டது” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதை(இதுவரை)த் தொழவில்லை” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிலுள்ள) புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உளூச் செய்தார்கள். நாங்களும் உளூச் செய்தோம். (அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு அஸ்ருத் தொழுதார்கள். அதன் பிறகு மஃக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)