அத்தியாயம்: 1, பாடம்: 40, ஹதீஸ் எண்: 138

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏حُسَيْنٌ الْمُعَلِّمُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُرَيْدَةَ ‏ ‏أَنَّ ‏ ‏يَحْيَى بْنَ يَعْمَرَ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا الْأَسْوَدِ الدِّيلِيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏
‏أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ نَائِمٌ عَلَيْهِ ثَوْبٌ أَبْيَضُ ثُمَّ أَتَيْتُهُ فَإِذَا هُوَ نَائِمٌ ثُمَّ أَتَيْتُهُ وَقَدْ اسْتَيْقَظَ فَجَلَسْتُ إِلَيْهِ فَقَالَ ‏ ‏مَا مِنْ عَبْدٍ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الْجَنَّةَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ ثَلَاثًا ثُمَّ قَالَ فِي الرَّابِعَةِ عَلَى ‏ ‏رَغْمِ ‏ ‏أَنْفِ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ فَخَرَجَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏وَهُوَ يَقُولُ وَإِنْ ‏ ‏رَغِمَ ‏ ‏أَنْفُ ‏ ‏أَبِي ذَرٍّ ‏

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை சென்றபோது அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் விழித்திருந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்று அமர்ந்தேன்.

அப்போது, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று உறுதி கூறி, அதே நம்பிக்கையில் இறந்துவிடும் எந்த அடியாரும் சொர்க்கம் புகாமல் இருக்க மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், “அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்! விபச்சாரம் புரிந்திருந்தாலும் திருடியிருந்தாலுங்கூட” என்று சொன்னார்கள். நான், (மீண்டும்) “அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “விபச்சாரம் புரிந்திருந்தாலும் திருடியிருந்தாலுங்கூட” என்று சொன்னார்கள். மூன்றாவது முறையும் (நான் கேட்க) முன் சொன்னவாறே பதில் கூறினார்கள்.

நான்காவது முறை, “அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (நீர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர்(ரலி)


குறிப்பு : “அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்” என்று அபுல் அஸ்வத் அத்தீலீ (ரஹ்) என்ற அறிப்பாளர் கூடுதலாக அறிவிக்கின்றார்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.20, ஹதீஸ் எண்: 71

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ النَّضْرِ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَبْدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلَّا كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ ‏ ‏حَوَارِيُّونَ ‏ ‏وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ ثُمَّ إِنَّهَا ‏ ‏تَخْلُفُ ‏ ‏مِنْ بَعْدِهِمْ ‏ ‏خُلُوفٌ ‏ ‏يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنْ الْإِيمَانِ حَبَّةُ ‏ ‏خَرْدَلٍ ‏
‏قَالَ ‏ ‏أَبُو رَافِعٍ ‏ ‏فَحَدَّثْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏فَأَنْكَرَهُ عَلَيَّ فَقَدِمَ ‏ ‏ابْنُ مَسْعُودٍ ‏ ‏فَنَزَلَ ‏ ‏بِقَنَاةَ ‏ ‏فَاسْتَتْبَعَنِي إِلَيْهِ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏يَعُودُهُ فَانْطَلَقْتُ مَعَهُ فَلَمَّا جَلَسْنَا سَأَلْتُ ‏ ‏ابْنَ مَسْعُودٍ ‏ ‏عَنْ هَذَا الْحَدِيثِ فَحَدَّثَنِيهِ كَمَا حَدَّثْتُهُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏صَالِحٌ ‏ ‏وَقَدْ تُحُدِّثَ بِنَحْوِ ذَلِكَ عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ بْنِ مُحَمَّدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي مَرْيَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْحَارِثُ بْنُ الْفُضَيْلِ الْخَطْمِيُّ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏مَوْلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا كَانَ مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ كَانَ لَهُ حَوَارِيُّونَ يَهْتَدُونَ بِهَدْيِهِ وَيَسْتَنُّونَ بِسُنَّتِهِ مِثْلَ حَدِيثِ ‏ ‏صَالِحٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ قُدُومَ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏وَاجْتِمَاعِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏مَعَهُ

“எனக்கு முந்தைய சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்புத் தொண்டர்களும் தோழர்களும் இல்லாமலில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைபிடிப்பார்கள். அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.

அவர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள். தமக்கு கட்டளை இடப்படாதவற்றைச் செய்வார்கள். அ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுபவர் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது நாவால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கு அப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூட கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

(இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அதை அவர்கள் மறுத்தார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (மதீனாவின் பள்ளத்தாக்குகளில் ஒன்றான) ‘கனாத்’ எனும் இடத்திற்கு (ஒரு முறை) வந்தபோது அவர்களை நலம் விசாரிக்கச் சென்ற இபுனு உமர் (ரலி) அவர்கள் தம்முடன் என்னையும் வருமாறு அழைத்தார். நானும் அவரோடு சென்றேன். நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தபோது நான் இந்த ஹதீஸ் குறித்து அவரிம் வினவினேன். அப்போது அவர்கள் நான் இபுனு உமர் (ரலி) அவர்களுக்கு அறிவித்ததைப்போன்றே எனக்கு அறிவித்தார்.

மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னுல் முஸவ்வர் என்ற மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் ” ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சிறப்புத் தொண்டர்கள் இல்லாமலில்லை. அவர்கள் இறைத்தூதர்கள் வழியில் நடந்தார்கள். அவருடைய வழிமுறையைப் பின்பற்றினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. ஆனால் அதில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ‘கனாத்’ எனும் பள்ளத்தாக்கிற்கு வந்ததையும் அவர்களை இபுனு உமர் (ரலி) சந்தித்ததையும் தவிர்த்து, மற்ற விபரங்கள் மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 1, பாடம்: 1.20, ஹதீஸ் எண்: 70

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏وَهَذَا حَدِيثُ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏
‏أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلَاةِ ‏ ‏مَرْوَانُ ‏ ‏فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلَاةُ قَبْلَ الْخُطْبَةِ فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ فَقَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ رَجَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏وَعَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏فِي قِصَّةِ ‏ ‏مَرْوَانَ ‏ ‏وَحَدِيثِ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏وَسُفْيَانَ

முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார். அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று. “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்” என்று சுட்டிக் காட்டினார்.

அதற்கு மர்வான், “முன்பு நடைமுறையில் இருந்தது கைவிடப் பட்டுவிட்டது” என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள், “இவர், தமது கடமையை நிறைவேற்றிவிட்டார்.

“உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்); அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் என்று என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்” என்றார்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.15, ஹதீஸ் எண்: 61

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ ‏ ‏طَعْمَ ‏ ‏الْإِيمَانِ مَنْ كَانَ يُحِبُّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَمَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَمَنْ كَانَ أَنْ ‏ ‏يُلْقَى فِي النَّارِ أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ فِي الْكُفْرِ بَعْدَ أَنْ أَنْقَذَهُ اللَّهُ مِنْهُ ‏
‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَنْبَأَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏أَنْبَأَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ غَيْرَ أَنَّهُ قَالَ مِنْ أَنْ يَرْجِعَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا

“ஒருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிக்கின்ற, எல்லாரையும்-எல்லாவற்றையும்விட அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பேரன்புக்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்ட, இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின்னர் அதன்பால் மீள்வதைத் தாம் தீயில் வீசப் படுவதைப் போன்று வெறுக்கின்ற மூன்று தன்மைகளைத் தம்மிடம் கொண்டவர் இறைநம்பிக்கையின் சுவையை அடைந்து கொண்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

ஹம்மாது (ரலி) அவர்களது அறிவிப்பு வரிசையில் “இறைமறுப்பின்பால் மீள்வதை …” என்பதற்குப் பகரமாக, “யூதனாகவோ கிருத்துவனாகவோ மீள்வதை …” என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.

அத்தியாயம்: 1, பாடம்: 1.13, ஹதீஸ் எண்: 55

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏
‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏غَيْرَكَ ‏ ‏قَالَ ‏ ‏قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِم

“அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு (அ) தங்களைத் தவிர எவரிடம் கேட்கத் தேவையில்லாதவாறு இஸ்லாத்தைக் குறித்து எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் என்று கூறி, அந்த நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.12, ஹதீஸ் எண்: 52

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلًا يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ ‏ ‏الْحَيَاءُ مِنْ الْإِيمَانِ ‏
‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ مَرَّ بِرَجُلٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏يَعِظُ أَخَاهُ

நாணம் கொள்வது குறித்து ஒருவர் தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்ததைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “நாணம் என்பது இறை நம்பிக்கையைச் சார்ந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸாலிம் (ரஹ்) தம் தந்தை இபுனு உமர் (ரலி) வழியாக…


குறிப்பு :

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள்வழி அறிவிப்பில், அந்தச் சகோதரர்கள் அன்ஸாரீகள் ஆவர் என்ற குறிப்புடன் ஹதீஸ் தொடங்குகிறது.