حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ وَأَبُو بَكْرِ بْنُ النَّضْرِ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ وَاللَّفْظُ لِعَبْدٍ قَالُوا حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ الْحَارِثِ عَنْ جَعْفَرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ عَنْ أَبِي رَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلَّا كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنْ الْإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ
قَالَ أَبُو رَافِعٍ فَحَدَّثْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَأَنْكَرَهُ عَلَيَّ فَقَدِمَ ابْنُ مَسْعُودٍ فَنَزَلَ بِقَنَاةَ فَاسْتَتْبَعَنِي إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَعُودُهُ فَانْطَلَقْتُ مَعَهُ فَلَمَّا جَلَسْنَا سَأَلْتُ ابْنَ مَسْعُودٍ عَنْ هَذَا الْحَدِيثِ فَحَدَّثَنِيهِ كَمَا حَدَّثْتُهُ ابْنَ عُمَرَ قَالَ صَالِحٌ وَقَدْ تُحُدِّثَ بِنَحْوِ ذَلِكَ عَنْ أَبِي رَافِعٍ و حَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ بْنِ مُحَمَّدٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ قَالَ أَخْبَرَنِي الْحَارِثُ بْنُ الْفُضَيْلِ الْخَطْمِيُّ عَنْ جَعْفَرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ عَنْ أَبِي رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا كَانَ مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ كَانَ لَهُ حَوَارِيُّونَ يَهْتَدُونَ بِهَدْيِهِ وَيَسْتَنُّونَ بِسُنَّتِهِ مِثْلَ حَدِيثِ صَالِحٍ وَلَمْ يَذْكُرْ قُدُومَ ابْنِ مَسْعُودٍ وَاجْتِمَاعِ ابْنِ عُمَرَ مَعَهُ
“எனக்கு முந்தைய சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்புத் தொண்டர்களும் தோழர்களும் இல்லாமலில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைபிடிப்பார்கள். அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.
அவர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்கள், தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள். தமக்கு கட்டளை இடப்படாதவற்றைச் செய்வார்கள். அ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுபவர் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது நாவால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கு அப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூட கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
குறிப்பு :
”இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அதை அவர்கள் மறுத்தார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) (மதீனாவின் பள்ளத்தாக்குகளில் ஒன்றான) ‘கனாத்’ எனும் இடத்திற்கு (ஒரு முறை) வந்தபோது அவர்களை நலம் விசாரிக்கச் சென்ற இபுனு உமர் (ரலி) தம்முடன் என்னையும் வருமாறு அழைத்தார். நானும் அவரோடு சென்றேன். நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தபோது, நான் இந்த ஹதீஸ் குறித்து அவரிம் வினவினேன். அப்போது அவர்கள் நான் இபுனு உமர் (ரலி) அவர்களுக்கு அறிவித்ததைப்போன்றே எனக்கு அறிவித்தார்” என்று அபூராஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.
அப்துர் ரஹ்மான் இப்னுல் முஸவ்வர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சிறப்புத் தொண்டர்கள் இல்லாமலில்லை. அவர்கள் இறைத்தூதர்கள் வழியில் நடந்தார்கள். அவருடைய வழிமுறையைப் பின்பற்றினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
ஆனால் அதில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ‘கனாத்’ எனும் பள்ளத்தாக்கிற்கு வந்ததையும் அவர்களை இபுனு உமர் (ரலி) சந்தித்ததையும் தவிர்த்து, மற்ற விபரங்கள் மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.