حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ عَنْ شُعَيْبٍ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ
قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ جَاءَ أَهْلُ الْيَمَنِ هُمْ أَرَقُّ أَفْئِدَةً وَأَضْعَفُ قُلُوبًا الْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ السَّكِينَةُ فِي أَهْلِ الْيَمَنِ وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ قِبَلَ مَطْلِعِ الشَّمْسِ
“யமன் நாட்டவர் (உங்களிடம்) வந்திருக்கின்றார்கள். அவர்கள் மென்மையான தன்மை உடையவர்கள்; இளகிய மனம் படைத்தவர்கள். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். அமைதி(யும் பணிவும்) யமன் நாட்டவருக்குரியதாகும். தற்பெருமையும் ஆணவமும் சூரியன் உதிக்கும் கீழ்த்திசையின் ஒட்டக உரிமையாளர்களான நாடோடிகளிடையே காணப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).