அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 80

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غِلَظُ الْقُلُوبِ وَالْجَفَاءُ فِي الْمَشْرِقِ وَالْإِيمَانُ فِي أَهْلِ ‏ ‏الْحِجَازِ

“கல்மனமும் கடின சிந்தையும் கிழக்குத் திசையில் (தீவணங்கிகளின் பாரசீகத்தில்) காணப்படும். இறைநம்பிக்கையை ஹிஜாஸ் வாசிகளிடையே காணலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 79

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَاكُمْ أَهْلُ ‏ ‏الْيَمَنِ ‏ ‏هُمْ أَلْيَنُ قُلُوبًا وَأَرَقُّ أَفْئِدَةً الْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ رَأْسُ الْكُفْرِ قِبَلَ الْمَشْرِقِ ‏


و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ رَأْسُ الْكُفْرِ قِبَلَ الْمَشْرِقِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏بِشْرُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ مِثْلَ حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏وَزَادَ وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي أَصْحَابِ الْإِبِلِ وَالسَّكِينَةُ وَالْوَقَارُ فِي أَصْحَابِ الشَّاءِ

“யமன் நாட்டவர் உங்களிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான தன்மை உடையவர்கள். இறைநம்பிக்கை, யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். இறை மறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (தீவணங்கிகளின் பாரசீகத்தில்) உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அஃமஷ் (ரஹ்) இடம்பெறும் மேற்காணும் ஹதீஸ், ஜரீர் (ரஹ்) வழியாக அறிவிக்கப் படும்போது “இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் இருக்கிறது” என்ற சொற்கள் இடம்பெறவில்லை. ஷுஃபா (ரஹ்) வழி அறிவிப்பில், “தற்பெருமையும் ஆணவமும் ஒட்டக உரிமையாளர்களிடையே காணப்படும். அமைதியும் கம்பீரமும் ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படும்” என்ற சொற்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன.

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 78

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْيَمَانِ ‏ ‏عَنْ ‏ ‏شُعَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏
‏قَالَ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏جَاءَ أَهْلُ ‏ ‏الْيَمَنِ ‏ ‏هُمْ أَرَقُّ أَفْئِدَةً وَأَضْعَفُ قُلُوبًا الْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ السَّكِينَةُ فِي أَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ قِبَلَ مَطْلِعِ الشَّمْسِ

“யமன் நாட்டவர் (உங்களிடம்) வந்திருக்கின்றார்கள். அவர்கள் மென்மையான தன்மை உடையவர்கள்; இளகிய மனம் படைத்தவர்கள். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். அமைதி(யும் பணிவும்) யமன் நாட்டவருக்குரியதாகும். தற்பெருமையும் ஆணவமும் சூரியன் உதிக்கும் கீழ்த்திசையின் ஒட்டக உரிமையாளர்களான நாடோடிகளிடையே காணப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 77

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏الْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ ‏


و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْيَمَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ وَزَادَ الْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ

“தற்பெருமையும் ஆணவமும் ஒட்டகங்களின் நாடோடி உரிமையாளர்களிடையே காணப்படும். அமைதி(யும் பணிவும்) ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பை,  “இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்; விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்” என்று ஸுஹ்ரீ(ரஹ்) கூடுதல் சொற்களுடன் அறிவித்துள்ளார்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 76

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْإِيمَانُ يَمَانٍ وَالْكُفْرُ قِبَلَ الْمَشْرِقِ وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ وَالْفَخْرُ وَالرِّيَاءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْخَيْلِ وَالْوَبَرِ

“இறைநம்பிக்கை, யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். இறைமறுப்பு, கிழக்குத் திசையில் (தீவணங்கிகளின் பாரசீகத்தில்) உள்ளது. அமைதி என்பது ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படுகின்றது. தற்பெருமையும் புறப்புகழ்ச்சியும் குதிரைகளின் உரிமையாளர்களிடமும் ஒட்டகங்களின் நாடோடி உரிமையாளர்களிடமும் காணப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 75

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏رَأْسُ الْكُفْرِ نَحْوَ الْمَشْرِقِ وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي أَهْلِ الْخَيْلِ وَالْإِبِلِ الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ

“இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (தீவணங்கிகளின் பாரசீகத்தில்) உள்ளது. ஆணவமும் தற்பெருமையும் குதிரைகளின் உரிமையாளர்களிடமும் ஒட்டகங்களின் நாடோடி உரிமையாளர்களிடமும் காணப்படுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களிடம் அமைதி(யும் பணிவும்) காணப்படுகின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 74

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَاكُمْ أَهْلُ ‏ ‏الْيَمَنِ ‏ ‏هُمْ أَضْعَفُ قُلُوبًا وَأَرَقُّ أَفْئِدَةً الْفِقْهُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ

“யமன் நாட்டவர் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான தன்மை உடையவர்கள்; ஞானம் என்பது யமனைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமனைச் சேர்ந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 73

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏أَنْبَأَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَاءَ أَهْلُ ‏ ‏الْيَمَنِ ‏ ‏هُمْ أَرَقُّ أَفْئِدَةً الْإِيمَانُ يَمَانٍ وَالْفِقْهُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

(யமனிருந்து சிலர் மதீனாவுக்கு வந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யமன் நாட்டவர் (உங்களிடம்) வந்திருக்கிறார்கள். அவர்கள் இளகிய மனத்தவர். இறைநம்பிக்கை, யமனில் குடி கொண்டது. ஞானமும் விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்தவையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 72

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَيْسًا ‏ ‏يَرْوِي عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ ‏ ‏قَالَ :‏

‏أَشَارَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ نَحْوَ ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَلَا إِنَّ الْإِيمَانَ هَهُنَا وَإِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ عِنْدَ أُصُولِ أَذْنَابِ الْإِبِلِ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي ‏ ‏رَبِيعَةَ ‏ ‏وَمُضَرَ

நபி(ஸல்) தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையைச் சுட்டிக் காட்டி, “அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கை (ஈமான்) அங்கிருக்கிறது. ஒட்டகங்களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை உரத்த குரல் கொடுத்து ஓட்டிச் செல்லும் நாடோடிகளிடம் கல்மனமும் கடின சித்தமும் குடி கொண்டிருக்கும். அங்கிருந்துதான் ரபீஆ, முளர் ஆகிய இரு குலத்தாரிடையே ஷைத்தானது இரு கொம்புகளாய் குழப்பங்கள் வெளியாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ரு (ரலி).