அத்தியாயம்: 1, பாடம்: 25, ஹதீஸ் எண்: 88

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ ‏ ‏خَلَّةٌ ‏ ‏مِنْهُنَّ كَانَتْ فِيهِ ‏ ‏خَلَّةٌ ‏ ‏مِنْ نِفَاقٍ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا خَاصَمَ ‏ ‏فَجَرَ ‏
‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏ ‏وَإِنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ النِّفَاقِ

“நான்கு பழக்கங்கள் குடிகொண்டுள்ளவன் அப்பட்டமான நயவஞ்சகனாவான். அவற்றில் ஒன்று குடிகொண்டிருந்தாலும் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சக(த்தின் ஒரு குண)ம் அவனுள் குடியிருக்கும்:

பேசினால் பொய்யுரைப்பதும் உடன்படிக்கை செய்தால் (நம்பிக்கை) துரோகம் செய்வதும், வாக்களித்தால் மாறு செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தாம் அவை (நான்கும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி).

குறிப்பு :

சுஃப்யான் பின் உயைனா(ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “இவற்றில் ஏதேனும் ஒரு பழக்கம் அவனிடம் இருந்தாலும் நயவஞ்சக(த்தின் ஒரு குண)ம் அவனிடம் இருந்து கொண்டேயிருக்கும்.” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment