அத்தியாயம்: 1, பாடம்: 44, ஹதீஸ் எண்: 149

حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى الْقَنْطَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ ‏ ‏أَنَّ ‏ ‏الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ ‏ ‏حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏ ‏وَجِعَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏وَجَعًا ‏
‏فَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِهِ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّا بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَرِئَ مِنْ ‏ ‏الصَّالِقَةِ ‏ ‏وَالْحَالِقَةِ ‏ ‏وَالشَّاقَّةِ ‏

(என் தந்தை) அபூமூஸா (ரலி) அவர்கள் (தமது) கடுமையான (மரண) வேதனையில் மயக்கமடைந்து விட்டார்கள். அவர்களது தலை அவர்களுடைய மனைவி ஒருவரின் மடியில் கிடந்தது. அப்போது அவர்களுடைய மனைவியருள் ஒருவர் ஓலமிட்டு அழுதார். அபூ மூஸா (ரலி) அவர்களால் அப்பெண்ணுக்கு அப்போது ஏதும் சொல்ல இயலவில்லை. பிறகு சற்றே மயக்கம் தெளிந்தபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பொறுப்பை விலக்கி கொண்டவர்களை விட்டு நானும் என் பொறுப்பை விலக்கிக் கொள்பவனாவேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், (துக்கம் ஏற்பட்டால்) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக் கொள்ளும் பெண், ஆடையைக் கிழித்துக் கொள்ளும் பெண் ஆகியோரிடமிருந்து தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) அவர்களின் மகனார் அபூபுர்தா (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment