حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَا أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ قَالَ سَمِعْتُ أَبَا صَخْرَةَ يَذْكُرُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ وَأَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى قَالَا أُغْمِيَ عَلَى أَبِي مُوسَى :
وَأَقْبَلَتْ امْرَأَتُهُ أُمُّ عَبْدِ اللَّهِ تَصِيحُ بِرَنَّةٍ قَالَا ثُمَّ أَفَاقَ قَالَ أَلَمْ تَعْلَمِي وَكَانَ يُحَدِّثُهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّنْ حَلَقَ وَسَلَقَ وَخَرَقَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُطِيعٍ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ عِيَاضٍ الْأَشْعَرِيِّ عَنْ امْرَأَةِ أَبِي مُوسَى عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ح و حَدَّثَنِيهِ حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ حَدَّثَنِي أَبِي حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي ابْنَ أَبِي هِنْدٍ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ح و حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ عِيَاضٍ الْأَشْعَرِيِّ قَالَ لَيْسَ مِنَّا وَلَمْ يَقُلْ بَرِيءٌ
அபூமூஸா (ரலி) (மரணப் படுக்கையில் இருந்தபோது) மயக்கமடைந்து விட்டார்கள். அப்போது அவர்களின் மனைவியான உம்மு அப்தில்லாஹ் சப்தமிட்டு (ஒப்பாரி வைத்து) அழுது கொண்டே (அங்கு) வந்தார். அபூமூஸா (ரலி) மயக்கம் தெளிந்த போது, “தலையை மழித்துக் கொண்டவர், ஓலமிட்டு அழுதவர், ஆடையைக் கிழித்துக் கொண்டவர் ஆகியோரிடமிருந்து நான் எனது பொறுப்பை விலக்கிக் கொண்டேன் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) வழியாக அன்னாரின் மகனார் அபூபுர்தா (ரஹ்)
குறிப்பு:
இயாள் அல்-அஷ்அரீ(ரஹ்) வழி அறிவிப்பில், “(அவர்களுக்கான) எனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டேன்” என்பதற்குப் பதிலாக “(அவர்கள்) நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.