அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 163

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ ‏ ‏حَيٌّ مِنْ ‏ ‏الْعَرَبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى عَسْكَرِهِ وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ وَفِي ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلٌ ‏ ‏لَا يَدَعُ لَهُمْ ‏ ‏شَاذَّةً ‏ ‏إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ فَقَالُوا مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ ‏ ‏فُلَانٌ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَقَالَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ الْقَوْمِ أَنَا صَاحِبُهُ أَبَدًا قَالَ فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ قَالَ فَجُرِحَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بِالْأَرْضِ ‏ ‏وَذُبَابَهُ ‏ ‏بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ فَقَتَلَ نَفْسَهُ فَخَرَجَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ قَالَ وَمَا ذَاكَ قَالَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ فَقُلْتُ أَنَا لَكُمْ بِهِ فَخَرَجْتُ فِي طَلَبِهِ حَتَّى جُرِحَ جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ ‏ ‏نَصْلَ ‏ ‏سَيْفِهِ بِالْأَرْضِ ‏ ‏وَذُبَابَهُ ‏ ‏بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ ذَلِكَ ‏ ‏إِنَّ الرَّجُلَ لِيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لِيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபரில்) சந்தித்துப் போரிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எதிரணியினரும் (அன்றைய போரின் இறுதியில்) தத்தம் படையினரிடமும் திரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (‘குஸ்மான்’ என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். அவர் (அன்றைய போரில் எதிரிகள்) எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடந்துச் சென்று தமது வாளால் வெட்டி வீழ்த்தினார். “இன்று இவர் பெற்ற நற்கூலியைப் போன்று நம்மில் எவரும் பெறவில்லை” என்று சக வீரர்கள் பேசிக்கொண்டனர். ஆனால், அவரைப் பற்றி, “அவர் நரகவாசி” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். எனவே, வீரர்களுள் ஒருவர், “நான் எப்போதும் (போரில்) அவருடன் கூடவே இருக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு அவருடன் இணைந்தார்.

அந்த வீரர் நின்றால் அவருடன் இவரும் நின்றார்; அவர் விரைந்து நடந்தால் அவருடன் இவரும் விரைந்து நடந்தார். (இறுதியாக, போரில் ஏற்பட்ட) கடுமையான காயங்களால் அவ்வீரர் (வேதனை தாளாமல்) உடனே இறந்து போக விரும்பி தனது வாளின் கைப்பிடியை பூமியில் (நட்டு)வைத்து வாள்முனையைத் தன் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திச் சாய்த்துத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.

(அவ்வீரரைப் பின்தொடர்ந்து) சென்றவர் திரும்பி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒருவரைப் பற்றித் தாங்கள் கூறினீர்களல்லவா? அதை (ஏற்றுக் கொள்ளாமல்) மக்கள் பெரிதாகப் பேசிக் கொண்டனர். எனவே நான், ‘அவரைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு உங்களிடம் வந்து சொல்வதற்கு நான் பொறுப்பு’ என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடித் தொடர்ந்தேன். அவர் (ஒரு கட்டத்தில் எதிரிகளால்) மிகக் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். எனவே, (வலி தாள முடியாத) அவர் உடனே இறந்து போக விரும்பி, தனது வாளின் கைப்பிடியை பூமியில் (நட்டு)வைத்து வாள்முனையைத் தன் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திச் சாய்த்துத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வரும் ஒருவர் (உண்மையில்) நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். அவ்வாறே மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்யும் ஒருவர் (உண்மையில்) சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி).

Share this Hadith:

Leave a Comment