அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 162

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُنَيْنًا ‏ ‏فَقَالَ ‏ ‏لِرَجُلٍ ‏ ‏مِمَّنْ يُدْعَى بِالْإِسْلَامِ ‏ ‏هَذَا مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا حَضَرْنَا الْقِتَالَ قَاتَلَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏قِتَالًا شَدِيدًا فَأَصَابَتْهُ جِرَاحَةٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏الرَّجُلُ ‏ ‏الَّذِي قُلْتَ لَهُ آنِفًا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَإِنَّهُ قَاتَلَ الْيَوْمَ قِتَالًا شَدِيدًا وَقَدْ مَاتَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى النَّارِ فَكَادَ بَعْضُ الْمُسْلِمِينَ أَنْ ‏ ‏يَرْتَابَ ‏ ‏فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ قِيلَ إِنَّهُ لَمْ يَمُتْ وَلَكِنَّ بِهِ جِرَاحًا شَدِيدًا فَلَمَّا كَانَ مِنْ اللَّيْلِ لَمْ يَصْبِرْ عَلَى الْجِرَاحِ فَقَتَلَ نَفْسَهُ فَأُخْبِرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَلِكَ فَقَالَ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ثُمَّ أَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏فَنَادَى فِي النَّاسِ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَأَنَّ اللَّهَ يُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹுனைன் போரில் கலந்து கொண்டபோது, முஸ்லிம் என்று கருதப்பட்ட ஒரு வீரரைப் பற்றி, “அவர் நரகவாசிகளுள் ஒருவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். நாங்களனைவரும் போரில் ஈடுபட்டபோது (எதிரிகளை எதிர்த்து) அவர் உக்கிரமாகப் போரிட்டுப் படுகாயமடைந்தார். எனவே, (அவர் இறந்து விட்டார் என்று தவறாகக் கருதிக் கொண்டு) “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நரகவாசி என்று குறிப்பிட்டவர் இன்று மிகக் கடுமையாகப் போரிட்டு இறந்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்களிடம் (முதலில் தவறான தகவல்) கூறப் பட்டது.

அதற்கு நபி (ஸல்), “அவர் நரகத்திற்கே (செல்வார்)” என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொள்வதில் முஸ்லிகளுள் சிலர் கருத்து வேறுபாடு கொண்டனர். சற்றுக் கழிந்த பின்னர், “அவர் படுகாயமடைந்தது உண்மைதான்; ஆனால் இறந்துவிடவில்லை” என்ற சரியான தகவல் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது.

அன்று இரவு அவர் வலிதாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப் பட்டபோது, “அல்லாஹ் மிகப்பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதனும் ஆவேன் என உறுதி கூறுகிறேன்” என்றார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம், “முஸ்லிம் ஆத்மாவைத் தவிர வேறு யாரும் சொர்க்கம் புகமுடியாது. பாவியின் (செயல்களைப் பாடமாக்குவதன்) மூலமாக இந்த மார்க்கத்துக்கு அல்லாஹ் மேலும் வலுவூட்டுகிறான் என்று மக்களுக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே பிலால் (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment