அத்தியாயம்: 1, பாடம்: 1.06, ஹதீஸ் எண்: 26

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكَّارٍ الْبَصْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو قَزَعَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏وَحَسَنًا ‏ ‏أَخْبَرَهُمَا ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏أَخْبَرَهُ ‏:‏

‏أَنَّ ‏ ‏وَفْدَ عَبْدِ الْقَيْسِ ‏ ‏لَمَّا أَتَوْا نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنَا اللَّهُ فِدَاءَكَ مَاذَا يَصْلُحُ لَنَا مِنْ الْأَشْرِبَةِ فَقَالَ ‏ ‏لَا تَشْرَبُوا فِي ‏ ‏النَّقِيرِ ‏ ‏قَالُوا يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنَا اللَّهُ فِدَاءَكَ ‏ ‏أَوَ ‏ ‏تَدْرِي مَا ‏ ‏النَّقِيرُ ‏ ‏قَالَ نَعَمْ ‏ ‏الْجِذْعُ يُنْقَرُ وَسَطُهُ وَلَا فِي ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَلَا فِي ‏ ‏الْحَنْتَمَةِ ‏ ‏وَعَلَيْكُمْ ‏ ‏بِالْمُوكَى ‏

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் நபியே!, அல்லாஹ் எங்களை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். (கூறுங்கள்!) எந்தெந்தக் குடிபானங்கள் எங்களுக்குத் தகும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்), “(அந்நகீர் எனும்) மரத் தொட்டியிலிருந்து அருந்தாதீர்கள்” என்று கூறினார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! அந்நகீர் என்பது என்னவென்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்), “ஆம், பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தின் நடுவே துளையிடப்படுவது தான்” என்று கூறிவிட்டு, “சுரைக் குடுவையிலிருந்தும் மண் குடுவையிலிருந்தும் நீங்கள் அருந்தாதீர்கள்; சுருக்குக் கயிறால் வாய்ப்பகுதி கட்டப்படும் தோல் பைகளையே பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

Share this Hadith:

Leave a Comment