حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ قَالَ حَدَّثَنَا مَنْ لَقِيَ الْوَفْدَ الَّذِينَ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَبْدِ الْقَيْسِ قَالَ سَعِيدٌ وَذَكَرَ قَتَادَةُ أَبَا نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فِي حَدِيثِهِ هَذَا :
أَنَّ أُنَاسًا مِنْ عَبْدِ الْقَيْسِ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ إِنَّا حَيٌّ مِنْ رَبِيعَةَ وَبَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ وَلَا نَقْدِرُ عَلَيْكَ إِلَّا فِي أَشْهُرِ الْحُرُمِ فَمُرْنَا بِأَمْرٍ نَأْمُرُ بِهِ مَنْ وَرَاءَنَا وَنَدْخُلُ بِهِ الْجَنَّةَ إِذَا نَحْنُ أَخَذْنَا بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ اعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَصُومُوا رَمَضَانَ وَأَعْطُوا الْخُمُسَ مِنْ الْغَنَائِمِ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ عَنْ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ قَالُوا يَا نَبِيَّ اللَّهِ مَا عِلْمُكَ بِالنَّقِيرِ قَالَ بَلَى جِذْعٌ تَنْقُرُونَهُ فَتَقْذِفُونَ فِيهِ مِنْ الْقُطَيْعَاءِ قَالَ سَعِيدٌ أَوْ قَالَ مِنْ التَّمْرِ ثُمَّ تَصُبُّونَ فِيهِ مِنْ الْمَاءِ حَتَّى إِذَا سَكَنَ غَلَيَانُهُ شَرِبْتُمُوهُ حَتَّى إِنَّ أَحَدَكُمْ أَوْ إِنَّ أَحَدَهُمْ لَيَضْرِبُ ابْنَ عَمِّهِ بِالسَّيْفِ قَالَ وَفِي الْقَوْمِ رَجُلٌ أَصَابَتْهُ جِرَاحَةٌ كَذَلِكَ قَالَ وَكُنْتُ أَخْبَؤُهَا حَيَاءً مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ فَفِيمَ نَشْرَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ فِي أَسْقِيَةِ الْأَدَمِ الَّتِي يُلَاثُ عَلَى أَفْوَاهِهَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَرْضَنَا كَثِيرَةُ الْجِرْذَانِ وَلَا تَبْقَى بِهَا أَسْقِيَةُ الْأَدَمِ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ أَكَلَتْهَا الْجِرْذَانُ وَإِنْ أَكَلَتْهَا الْجِرْذَانُ وَإِنْ أَكَلَتْهَا الْجِرْذَانُ قَالَ وَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ إِنَّ فِيكَ لَخَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ قَالَ حَدَّثَنِي غَيْرُ وَاحِدٍ لَقِيَ ذَاكَ الْوَفْدَ وَذَكَرَ أَبَا نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ لَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ غَيْرَ أَنَّ فِيهِ وَتَذِيفُونَ فِيهِ مِنْ الْقُطَيْعَاءِ أَوْ التَّمْرِ وَالْمَاءِ وَلَمْ يَقُلْ قَالَ سَعِيدٌ أَوْ قَالَ مِنْ التَّمْرِ
அப்துல்கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ‘ரபீஆ’ குலக் குடும்பத்தைச் சேர்ந்தோராவோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் உள்ளனர். இதனால், (போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்குக் கட்டளை இடுவதற்கும் நாங்கள் செயல்படுத்திச் சுவனம் செல்வதற்குமான கட்டளைகளை எங்களுக்கு இடுங்கள்” என்று வேண்டினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான்கு செயல்களை உங்களுக்கு நான் கட்டளை இடுகின்றேன்; நான்கு பொருள்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்.
(கட்டளைகளாவன:) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்; தொழுகையைக் கடைப்பிடிங்கள்; ஜகாத் செலுத்துங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை(அரசுப் பொது நிதிக்கு)ச் செலுத்துங்கள்.
(மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) சுரைக் குடுவை; (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) மண் குடுவை; தார் பூசப்பட்ட பாத்திரம்; அந்நகீர் ஆகிய நான்கு பொருட்களை நான் உங்களுக்குத் தடை செய்கின்றேன்” எனக் கூறினார்கள்.
அப்போது மக்கள், “அல்லாஹ்வின் நபியே! அந்நகீர் என்பது என்னவெனத் தாங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம் (அறிவேன்). பேரீச்சமரத்தின் அடிமரத்தைத் துளையிட்டு அதில் சிற்றீச்சம்பழங்களை அல்லது பேரீச்சம்பழங்களை நீங்கள் போட்டு அதில் தண்ணீரை ஊற்றி ஊற வைப்பீர்கள். அதன் கொதிநிலை அடங்கியதும், அதை நீங்கள் அருந்துவீர்கள். (அதன் போதையில்) உங்களில் ஒருவர் அல்லது அவர்களுள் ஒருவர் தம்முடைய தந்தையின் சகோதரர் மகனையேகூட வாளால் வெட்டி விடுவார்” என்று கூறினார்கள்.
அந்தத் தூதுக்குழுவினரிடையே இவ்வாறு காயம் ஏற்பட்ட ஒருவர் இருந்தார். அவர், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வெட்கப்பட்டுக் கொண்டு அ(ந்தக் காயத்)தை மறைத்துக் கொண்டிருந்தேன்” என்று கூறினார். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (வேறு) எந்தப் பாத்திரத்திலிருந்து அருந்துவது?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும் தோல் பைகள்” என்று கூறினார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் ஊரில் ஏராளமாகப் பெருச்சாளிகள் உள்ளன. அங்குத் தோல் பைகள் சரிப்பட்டு வரா” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்), “அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே!” என்று கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அப்துல் கைஸ் குலத்தாரின் தலைவர் அஷ்ஷஜ் (ரலி) அவர்களிடம், “உங்களிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய அறிவாற்றல், நிதானம் ஆகிய இரு குணங்கள் உள்ளன” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).
குறிப்பு:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த அப்துல்கைஸ் தூதுக் குழுவினரைச் சந்தித்த ஒருவர் (இந்த ஹதீஸை) நமக்கு அறிவித்தார்” என இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான கத்தாதா (ரஹ்) கூறுகின்றார்.
“அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது பற்றி மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அறிவித்தார்கள் ஆனால் அதில், மரத் தொட்டி (அந்நகீர்) பற்றி விளக்கமளிக்கையில் நபி (ஸல்), பேரீச்சமரத்தின் அடிமரத்தைக் குடைந்து அதனுள் சிற்றீச்சம்பழத்தோடு அல்லது பேரீச்சம்பழத்தோடு தண்ணீரையும் கலந்து விடுவீர்கள் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது” என்று அபூநஸ்ரா முன்திர் பின் மாலிக் அல்அவகீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “சிற்றீச்சம்பழங்களை அல்லது பேரீச்சம்பழங்களை” என்ற ஐயப்பாடுடைய சொற்கள் இடம் பெறவில்லை.
“அந்தத் தூதுக்குழுவினரைச் சந்தித்த பலர் எனக்கு அவ்வாறு அறிவித்தனர்” என்று கத்தாதா (ரஹ்) குறிப்பிடுவதை (அவர்களில் ஒருவரான) அபூநள்ரா சுட்டிக் காட்டுகின்றார்.