حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ يُونُسَ عَنْ الْحَسَنِ قَالَ :
دَخَلَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ عَلَى مَعْقَلِ بْنِ يَسَارٍ وَهُوَ وَجِعٌ فَسَأَلَهُ فَقَالَ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا لَمْ أَكُنْ حَدَّثْتُكَهُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَسْتَرْعِي اللَّهُ عَبْدًا رَعِيَّةً يَمُوتُ حِينَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهَا إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ
قَالَ أَلَّا كُنْتَ حَدَّثْتَنِي هَذَا قَبْلَ الْيَوْمِ قَالَ مَا حَدَّثْتُكَ أَوْ لَمْ أَكُنْ لَأُحَدِّثَكَ و حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ حَدَّثَنَا حُسَيْنٌ يَعْنِي الْجُعْفِيَّ عَنْ زَائِدَةَ عَنْ هِشَامٍ قَالَ قَالَ الْحَسَنُ كُنَّا عِنْدَ مَعْقِلِ بْنِ يَسَارٍ نَعُودُهُ فَجَاءَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي سَأُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِهِمَا
மஅகில் பின் யஸார் (ரலி) நோயுற்றிருந்தபோது (உடல் நலம் விசாரிப்பதற்காக) அவர்களிடம் (பஸராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) சென்றிருந்தார்.
அப்போது உபைதுல்லாஹ்விடம் மஅகில் (ரலி), “முன்பு நான் உங்களிடம் அறிவித்திராத செய்தி ஒன்றை அறிவிக்கின்றேன்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, தம் பொறுப்பிலிருந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து விட்டாரெனில், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்.
அப்போது உபைதுல்லாஹ் (ரஹ்), “இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்க வில்லையே?” என்று கேட்டார். மஅகில் (ரலி), “நான் உங்களுக்கு(க் காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை” அல்லது “உங்களிடம் நான் (காரணத்தோடுதான்) அறிவிக்காமல் இருந்தேன்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) வழியாக ஹஸன் அல் பஸரீ (ரஹ்)
குறிப்பு:
ஹிஷம் (ரஹ்) வழி அறிவிப்பில் “நாங்கள் மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அப்போது (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) வந்தார். அவரிடம் மஅகில் (ரலி), நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கப் போகின்றேன்… என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸின் பொருள்பட அறிவித்தார்கள்” என்று ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.