அத்தியாயம்: 1, பாடம்: 71, ஹதீஸ் எண்: 225

حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ شُجَاعٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجٌ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ ‏:‏

سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ‏ ‏ظَاهِرِينَ ‏ ‏إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ فَيَنْزِلُ ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ ‏ ‏تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الْأُمَّةَ ‏

“என் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமைநாள் வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கி நிற்பார்கள். பிறகு மர்யமின் மகன் ஈஸா (அலை) (பூமிக்கு) இறங்கி வருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், ‘வாருங்கள், எங்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்துங்கள்!’ என்று (ஈஸாவிடம்) கூறுவார். அதற்கு ஈஸா (அலை), ‘இல்லை; உங்களைச் சேர்ந்தவர்கள்தாம் உங்களுக்குத் தலைவர்களாக இருக்க வேண்டும். இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள கண்ணியமாகும்’ என்று கூறி விடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment