அத்தியாயம்: 1, பாடம்: 72, ஹதீஸ் எண்: 228

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ التَّيْمِيِّ ‏ ‏سَمِعَهُ ‏ ‏فِيمَا أَعْلَمُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ يَوْمًا ‏ ‏أَتَدْرُونَ أَيْنَ تَذْهَبُ هَذِهِ الشَّمْسُ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ إِنَّ هَذِهِ ‏ ‏تَجْرِي حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا تَحْتَ الْعَرْشِ فَتَخِرُّ سَاجِدَةً فَلَا تَزَالُ كَذَلِكَ حَتَّى يُقَالَ لَهَا ارْتَفِعِي ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَرْجِعُ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَطْلِعِهَا ثُمَّ ‏ ‏تَجْرِي حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا تَحْتَ الْعَرْشِ فَتَخِرُّ سَاجِدَةً وَلَا تَزَالُ كَذَلِكَ حَتَّى يُقَالَ لَهَا ارْتَفِعِي ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَرْجِعُ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَطْلِعِهَا ثُمَّ ‏ ‏تَجْرِي لَا يَسْتَنْكِرُ النَّاسَ مِنْهَا شَيْئًا حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا ذَاكَ تَحْتَ الْعَرْشِ فَيُقَالُ لَهَا ارْتَفِعِي أَصْبِحِي طَالِعَةً مِنْ مَغْرِبِكِ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَغْرِبِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَدْرُونَ مَتَى ‏ ‏ذَاكُمْ ذَاكَ حِينَ [لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا]


‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ يَوْمًا ‏ ‏أَتَدْرُونَ أَيْنَ تَذْهَبُ هَذِهِ الشَّمْسُ بِمِثْلِ مَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏

ஒரு நாள் நபி (ஸல்) (எங்களிடம்), “இந்தச் சூரியன் எங்குச் செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்), “அது இறை அரியாசனத்துக்கு(அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது முடிவான நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் செல்கிறது. அதனிடம், ‘எழுந்து, நீ வந்த இடத்திற்குத் திரும்பிச் செல்’ என்று கூறப்படும்வரை அது அவ்வாறே இருந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது உதித்த இடத்திற்குச் சென்று மீண்டும் உதிக்கிறது. பிறகு (மீண்டும்) இறை அரியாசனத்துக்கு(அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது முடிவான நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் செல்கிறது. அதனிடம், ‘எழுந்து, நீ வந்த இடத்திற்குத் திரும்பிச் செல்’ என்று கூறப்படும்வரை அது அவ்வாறே இருந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது உதித்த இடத்திற்குச் சென்று மீண்டும் உதிக்கிறது. பிறகு மக்களுக்கு (மாற்றம்) தெரியாத விதத்தில் இறை அரியாசனத்துக்கு(அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது முடிவான நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் செல்கிறது. அப்போது அதனிடம், ‘நீ எழுந்து மேற்கிலிருந்து உதயமாகு!’ என்று கூறப்படும். அப்போது அது (வழக்கத்திற்கு மாறாக) மேற்கிலிருந்து உதயமாகும்” என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்), “அது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவரை இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தும் நன்மைகளைச் சம்பாதித்துக் கொள்ளாத எவருக்கும் அந்த நாளில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத (இறுதி)நாளாகும்” (6:158) என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் அல்-கிஃபாரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment