அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 236

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ الْبُنَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَاهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ ‏ ‏فَصَرَعَهُ ‏ ‏فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ ‏ ‏عَلَقَةً ‏ ‏فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ ‏ ‏لَأَمَهُ ‏ ‏ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ ‏ ‏يَعْنِي ‏ ‏ظِئْرَهُ ‏ ‏فَقَالُوا إِنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ ‏ ‏مُنْتَقِعُ ‏ ‏اللَّوْنِ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏وَقَدْ كُنْتُ أَرْئِي أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ ‏
‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ وَهُوَ ابْنُ بِلَالٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يُحَدِّثُنَا عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏مَسْجِدِ الْكَعْبَةِ ‏ ‏أَنَّهُ جَاءَهُ ثَلَاثَةُ نَفَرٍ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يُوحَى إِلَيْهِ ‏ ‏وَهُوَ نَائِمٌ فِي ‏ ‏الْمَسْجِدِ الْحَرَامِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ نَحْوَ حَدِيثِ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏وَقَدَّمَ فِيهِ شَيْئًا وَأَخَّرَ وَزَادَ وَنَقَصَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்க வைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியிலெடுத்து, அதிலிருந்து ஒரு துண்டை(வெட்டி)ப் பிரித்து எடுத்து, “இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு” என்று கூறினார். பிறகு அதை ஒரு பொன்னாலான தாம்பாளத்தில் வைத்து ஸம்ஸம் நீரால் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிய) சிறுவர்கள், நபியவர்களின் செவிலித்தாயிடம் ஓடிச் சென்று, “முஹம்மது கொல்லப்பட்டு விட்டார்” என்று கூறினர். செவிலித்தாய் நபியவர்களிடம் வந்தபோது (அச்சத்தால்) அவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

குறிப்பு:

“நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்ட அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்” என்று ஹதீஸின் இறுதியில் அனஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்.

ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களுக்கு (தடைப்பட்ட பின்னர் மீண்டும்) வஹீ வருவதற்குமுன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் (வானவர்) மூவர் வந்தனர் …” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விண்ணேற்றப் பயணம் குறித்து அனஸ் (ரலி) இடமிருந்து செவியுற்றதாகக் குறிப்பிடப் படும் செய்தி, சற்றுக் கூடுதல்-குறைவுடன் காணப் படுகிறது.

Share this Hadith:

Leave a Comment