அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 248

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏رَجُلًا ‏ ‏آدَمَ ‏ ‏سَبِطَ ‏ ‏الرَّأْسِ وَاضِعًا يَدَيْهِ عَلَى رَجُلَيْنِ ‏ ‏يَسْكُبُ ‏ ‏رَأْسُهُ أَوْ يَقْطُرُ رَأْسُهُ فَسَأَلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏أَوْ ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏لَا نَدْرِي أَيَّ ذَلِكَ قَالَ ‏ ‏وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا أَحْمَرَ ‏ ‏جَعْدَ ‏ ‏الرَّأْسِ أَعْوَرَ الْعَيْنِ الْيُمْنَى أَشْبَهُ مَنْ رَأَيْتُ بِهِ ‏ ‏ابْنُ قَطَنٍ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

“இறையில்லம் கஅபாவின் அருகில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடியுடைய ஒருவரைக் (கனவில்) கண்டேன். அவர், இருவர் (தோள்கள்) மீது தம் இரு கைகளை வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் வழிந்து – அல்லது – சொட்டிக் கொண்டிருந்தது. நான், இவர் யார் என்று கேட்டேன். அதற்கு, மர்யமின் மைந்தர் ஈஸா – அல்லது – மர்யமின் மைந்தர் மஸீஹ் என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் சிவப்பு நிறமுடைய, பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனை நான் பார்த்தேன். நான் பார்த்தவர்களுள் இப்னு கத்தனின் சாயலை அவன் ஒத்திருந்தான். இவன் யார்? என்று கேட்டேன். இவன் தஜ்ஜால் மஸீஹ் என்று பதிலளித்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி).

குறிப்பு:

மர்யமின் மைந்தர் ஈஸா – அல்லது – மர்யமின் மைந்தர் மஸீஹ் ஆகிய இரண்டும் ஈஸா (அலை) அவர்களையே குறிக்கும் என்றாலும் அவ்விரண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்கள் என்பதில் அறிவிப்பாளருக்கு ஐயம் இருந்துள்ளது.

Share this Hadith:

Leave a Comment