அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 251

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ وَهُوَ ابْنُ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَدْ رَأَيْتُنِي فِي ‏ ‏الْحِجْرِ ‏ ‏وَقُرَيْشٌ ‏ ‏تَسْأَلُنِي عَنْ ‏ ‏مَسْرَايَ ‏ ‏فَسَأَلَتْنِي عَنْ أَشْيَاءَ مِنْ ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏لَمْ ‏ ‏أُثْبِتْهَا ‏ ‏فَكُرِبْتُ ‏ ‏كُرْبَةً ‏ ‏مَا كُرِبْتُ مِثْلَهُ قَطُّ قَالَ فَرَفَعَهُ اللَّهُ لِي أَنْظُرُ إِلَيْهِ مَا يَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا أَنْبَأْتُهُمْ بِهِ وَقَدْ رَأَيْتُنِي فِي جَمَاعَةٍ مِنْ الْأَنْبِيَاءِ فَإِذَا ‏ ‏مُوسَى ‏ ‏قَائِمٌ ‏ ‏يُصَلِّي فَإِذَا رَجُلٌ ضَرْبٌ ‏ ‏جَعْدٌ ‏ ‏كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَإِذَا ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قَائِمٌ ‏ ‏يُصَلِّي أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ‏ ‏عُرْوَةُ بْنُ مَسْعُودٍ الثَّقَفِيُّ ‏ ‏وَإِذَا ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قَائِمٌ ‏ ‏يُصَلِّي أَشْبَهُ النَّاسِ بِهِ صَاحِبُكُمْ ‏ ‏يَعْنِي نَفْسَهُ فَحَانَتْ الصَّلَاةُ فَأَمَمْتُهُمْ فَلَمَّا فَرَغْتُ مِنْ الصَّلَاةِ قَالَ قَائِلٌ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏هَذَا ‏ ‏مَالِكٌ ‏ ‏صَاحِبُ النَّارِ فَسَلِّمْ عَلَيْهِ فَالْتَفَتُّ إِلَيْهِ فَبَدَأَنِي بِالسَّلَامِ

“ஹிஜ்ரு எனும் (கஅபாவின் வளைந்த) பகுதியில் வைத்து (எனது இரவுப் பயணத்தைப் பற்றிக்) குறைஷிகள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு நினைவில் இல்லாத, பைத்தில் மக்திஸ் பள்ளி சார்ந்த (அடையாளங்கள்) சிலவற்றை என்னிடம் அவர்கள் கேட்டபோது முன்னெப்போதும் நான் வருந்தியிராத அளவுக்கு எனக்கு வருத்தம் மேலிட்டது. அப்போது பைத்துல் மக்திஸை (என் மனத்திரையில்) அல்லாஹ் எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் விபரம் தெரிவித்தேன்”.

“(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன். அங்கு மூஸா (அலை) நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மகன் ஈஸா(அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்”.

“அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம் சொல்லி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 250

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي أَطُوفُ ‏ ‏بِالْكَعْبَةِ ‏ ‏فَإِذَا رَجُلٌ ‏ ‏آدَمُ ‏ ‏سَبِطُ ‏ ‏الشَّعْرِ بَيْنَ رَجُلَيْنِ ‏ ‏يَنْطِفُ ‏ ‏رَأْسُهُ مَاءً ‏ ‏أَوْ ‏ ‏يُهَرَاقُ رَأْسُهُ مَاءً ‏ ‏قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏ثُمَّ ذَهَبْتُ أَلْتَفِتُ فَإِذَا رَجُلٌ أَحْمَرُ جَسِيمٌ ‏ ‏جَعْدُ ‏ ‏الرَّأْسِ أَعْوَرُ الْعَيْنِ كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ ‏ ‏طَافِيَةٌ ‏ ‏قُلْتُ مَنْ هَذَا قَالُوا ‏ ‏الدَّجَّالُ ‏ ‏أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ‏ ‏ابْنُ قَطَنٍ

“நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி நான் (தவாஃப்) வந்து கொண்டிருப்பதாகக் கண்டேன். அங்கு இருவருக்கிடையில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட ஒருவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது – அல்லது – அவருடைய தலையிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. இவர் யார்? என்று கேட்டேன். இவர்தாம் மர்யமின் மகன் என்று பதிலளித்தார்கள்.

நான் (அவரைக் கடந்து) சென்றபோது சிவப்பான, உடல்பருத்த, பரட்டைமுடி கொண்ட, (ஒரு) கண் குருடான ஒருவன் அங்கிருந்தான். அவனது கண், (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருந்தது. இவன் யார்? என்று கேட்டேன். தஜ்ஜால் என்று பதிலளித்தார்கள். மனிதர்களுள் அவனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவர் இப்னு கத்தன் என்பவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 249

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا كَذَّبَتْنِي ‏ ‏قُرَيْشٌ ‏ ‏قُمْتُ فِي ‏ ‏الْحِجْرِ ‏ ‏فَجَلَا اللَّهُ لِي ‏ ‏بَيْتَ الْمَقْدِسِ ‏ ‏فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ

“குறைஷியர் (எனது இரவுப் பயணம் குறித்து) என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவில்) ‘ஹிஜ்ரு’ எனும் (வளைந்த) பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களைக் குறைஷியருக்கு விவரிக்கலானேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 248

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏رَجُلًا ‏ ‏آدَمَ ‏ ‏سَبِطَ ‏ ‏الرَّأْسِ وَاضِعًا يَدَيْهِ عَلَى رَجُلَيْنِ ‏ ‏يَسْكُبُ ‏ ‏رَأْسُهُ أَوْ يَقْطُرُ رَأْسُهُ فَسَأَلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏أَوْ ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏لَا نَدْرِي أَيَّ ذَلِكَ قَالَ ‏ ‏وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا أَحْمَرَ ‏ ‏جَعْدَ ‏ ‏الرَّأْسِ أَعْوَرَ الْعَيْنِ الْيُمْنَى أَشْبَهُ مَنْ رَأَيْتُ بِهِ ‏ ‏ابْنُ قَطَنٍ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

“இறையில்லம் கஅபாவின் அருகில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடியுடைய ஒருவரைக் (கனவில்) கண்டேன். அவர், இருவர் (தோள்கள்) மீது தம் இரு கைகளை வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் வழிந்து – அல்லது – சொட்டிக் கொண்டிருந்தது. நான், இவர் யார் என்று கேட்டேன். அதற்கு, மர்யமின் மகன் ஈஸா – அல்லது – மர்யமின் மகன் மஸீஹ் என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் சிவப்பு நிறமுடைய, பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனை நான் பார்த்தேன். நான் பார்த்தவர்களுள் இப்னு கத்தனின் சாயலை அவன் ஒத்திருந்தான். இவன் யார்? என்று கேட்டேன். இவன் மஸீஹ் தஜ்ஜால் என்று பதிலளித்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

மர்யமின் மகன் ஈஸா – அல்லது – மர்யமின் மகன் மஸீஹ் ஆகிய இரண்டும் ஈஸா (அலை) அவர்களையே குறிக்கும் என்றாலும் அவ்விரண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்கள் என்பதில் அறிவிப்பாளருக்கு ஐயம் இருந்துள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 247

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى وَهُوَ ابْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ :‏ ‏

ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمًا بَيْنَ ظَهْرَانَيْ النَّاسِ ‏ ‏الْمَسِيحَ الدَّجَّالَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَيْسَ بِأَعْوَرَ أَلَا إِنَّ ‏ ‏الْمَسِيحَ الدَّجَّالَ ‏ ‏أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ ‏ ‏طَافِيَةٌ ‏ ‏قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَانِي اللَّيْلَةَ فِي الْمَنَامِ عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَإِذَا رَجُلٌ آدَمُ كَأَحْسَنِ مَا ‏ ‏تَرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ رَجِلُ الشَّعْرِ يَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ بَيْنَهُمَا يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا جَعْدًا قَطَطًا أَعْوَرَ عَيْنِ الْيُمْنَى كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ مِنْ النَّاسِ ‏ ‏بِابْنِ قَطَنٍ ‏ ‏وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருநாள் மக்களிடையே மஸீஹு தஜ்ஜாலை  நினனவுகூர்ந்தபோது, “அல்லாஹ், ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், தஜ்ஜால் மஸீஹ் வலக்கண் குருடன். அவனுடைய கண், (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

“இரவின் கனவில் கஅபாவின் அருகே என்னை நான் கண்டேன். நீ கண்ட மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவருடைய தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது. இருவரது தோள்கள் மீது, அவர் தம் இரு கைகளையும் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். இவர் யார்? என்று நான் கேட்டேன். மர்யமின் மகன் மஸீஹ் (ஈஸா) என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனைக் கண்டேன். நான் பார்த்த மனிதர்களிலேயே இப்னு கத்தனின் சாயலை அவன் ஒத்திருந்தான். அவனும் இருவரது தோள்கள் மீது தன் கரங்களை வைத்துக் கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தான். இவன் யார்? என்று நான் கேட்டேன். இவன் மஸீஹு தஜ்ஜால் என்று பதிலளித்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 246


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَرَانِي لَيْلَةً عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَرَأَيْتُ رَجُلًا ‏ ‏آدَمَ ‏ ‏كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ أُدْمِ الرِّجَالِ لَهُ ‏ ‏لِمَّةٌ ‏ ‏كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ اللِّمَمِ قَدْ ‏ ‏رَجَّلَهَا ‏ ‏فَهِيَ تَقْطُرُ مَاءً مُتَّكِئًا عَلَى رَجُلَيْنِ أَوْ عَلَى ‏ ‏عَوَاتِقِ ‏ ‏رَجُلَيْنِ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ هَذَا ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏ثُمَّ إِذَا أَنَا بِرَجُلٍ ‏ ‏جَعْدٍ ‏ ‏قَطَطٍ ‏ ‏أَعْوَرِ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّهَا عِنَبَةٌ ‏ ‏طَافِيَةٌ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ هَذَا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

“ஓர் இரவில் நான் (இறையில்லம்) கஅபாவின் அருகே (இருப்பதைப் போல் கனவில்) என்னைக் கண்டேன். அப்போது மாநிறம் கொண்ட மனிதர்களுள் நீ பார்த்தவர்களிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்ட தலைமுடிகளில் நீ பார்த்தவற்றுள் மிக அழகான தலைமுடி அவருக்கு இருந்தது. அதை அவர் வாரிவிட்டிருந்தார். அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவர் இரு மனிதர்களின் மீது சாய்ந்தபடி – அல்லது – இரு மனிதர்களின் தோள்கள் மீது சாய்ந்தபடி இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். இவர்தாம் மர்யமின் மகன் மஸீஹ் (ஈஸா) என்று பதிலளிக்கப்பட்டது. அங்குப் பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனுமிருந்தான். அவனுக்கிருந்த கண் (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. இவன் யார்? என்று கேட்டேன். இவன்தான் மஸீஹுத் தஜ்ஜால் என்று பதிலளிக்கப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)