و حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَ أَحْمَدُ حَدَّثَنَا و قَالَ الْآخَرَانِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர் அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)