அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 34

و حَدَّثَنَا ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ يَعْنِيَانِ الْفَزَارِيَّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَفَرَ بِمَا يُعْبَدُ مِنْ دُونِ اللَّهِ حَرُمَ مَالُهُ وَدَمُهُ وَحِسَابُهُ عَلَى اللَّهِ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏ح ‏ ‏وَحَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ مَنْ وَحَّدَ اللَّهَ ثُمَّ ‏ ‏ذَكَرَ بِمِثْلِهِ

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று (உறுதிமொழி) கூறி, அல்லாஹ்வையன்றி வழிபடப்படுகின்ற அனைத்தையும் மறுதலித்து விடுகின்றவரது உதிரமும் உடைமையும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : தாரிக் பின் அஷ்யம் அஷ்ஜயீ (ரலி)


குறிப்பு :

யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) வழி அறிவிப்பு, “யார் ஓரிறைக் கொள்கையை ஏற்று…” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 33

حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِىُّ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏وَاقِدِ بْنِ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ فَإِذَا فَعَلُوا ‏ ‏عَصَمُوا ‏ ‏مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மது ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையை(முறையாக)க் கடைப்பிடித்து, ஜகாத்தும் செலுத்தும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால், (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாக அவர்களது உதிரத்தையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்கள். அவர்களது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 32

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏وَعَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَإِذَا قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ ثُمَّ قَرَأ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِر

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர் அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். பிறகு, “(நபியே!) நிச்சயமாக நீர் நினைவூட்டுபவர்தாம். அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவரல்லர்” எனும் (அல்குர்ஆன் 088:021-022) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 31

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيُؤْمِنُوا بِي وَبِمَا جِئْتُ بِهِ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّه

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதிமொழி கூறி, என்னையும் எனக்குக் கிடைத்துள்ள(மார்க்கத்)தையும் நம்புகின்றவரைக்கும் இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். இதை அவர்கள் செயல்படுத்தினால் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாக அவர்களது உதிரத்தையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்கள். அவர்களது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 30

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَ ‏ ‏أَحْمَدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ‏ ‏عَصَمَ ‏ ‏مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர் அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 29

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاسْتُخْلِفَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏بَعْدَهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ ‏ ‏الْعَرَبِ ‏ ‏قَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَدْ ‏ ‏عَصَمَ ‏ ‏مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي ‏ ‏عِقَالًا ‏ ‏كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ ‏


فَقَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ شَرَحَ صَدْرَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தபின் அபூபக்ரு (ரலி) ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஜகாத் செலுத்த) மறுத்து நின்றனர்.

(அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ரு (ரலி) ஆயத்தமானபோது) உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அபூபக்ரு (ரலி) அவர்களிடம், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர், அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ரு (ரலி), “அல்லாஹ்வின் மீது ஆணை! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஏனெனில் ஜகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக!, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஜகாத்தாகச்) செலுத்திய ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் செலுத்த மறுத்தால்கூட, அதை மறுத்தவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள்.

இது குறித்து உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரு (ரலி) அவர்களின் இதயத்தை, (ஜகாத்தை மறுத்தவர்களுக்கு எதிராகப்) போர் தொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ரு (ரலி) கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

முஸ்லிம்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள் போக மீந்துள்ள சொத்துகளுக்கு 2.5 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை ஜகாத் என்னும் வளவரி செலுத்த வேண்டும். இது முஸ்லிமான ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் பொதுவான கடைமையாகும். இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் முஸ்லிம்கள் தங்கள் ஜகாத்தை அரசிடம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் முஸ்லிமல்லாதோருக்கு ஜிஸ்யா எனும் கப்பம் கட்டுதல் கடமையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஓராண்டுக்கான ஜிஸ்யா ஒரு தீனாராகவும் உமையாக்களின் ஆட்சியின்போது நான்கு தீனார்களாகவும் இருந்தது. முஸ்லிமல்லாத சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் ஆண்களில் மூத்த குடிமக்கள் மீதும் ஜிஸ்யா கடமையில்லை. போர் செய்ய வலுவுள்ள முஸ்லிமல்லாத ஆண்கள் மீது மட்டுமே ஜிஸ்யா கடமையாகும்.

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்” என்ற அல்லாஹ்வின் தூதரது கூற்றில் உள்ள “இந்த மக்களுடன்” என்ற குறிப்பாகு சுட்டுப் பெயர், இஸ்லாமிய அரசின்கீழ் மதீனாவில் வாழ்ந்த, ஜிஸ்யாவை மறுத்த முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிப்பாகச் சுட்டுவதாகும்.

மேற்காணும் 29ஆவது ஹதீஸில் ஜகாத்தை மறுத்த முஸ்லிம்கள் ஜிஸ்யாவை மறுத்த முஸ்லிமல்லாதோருடன் ஒப்பு நோக்கப் பட்டிருப்பதும் “இஸ்லாமிய மார்க்கத்தில் (இணைவதில்) வற்புறுத்தல் ஏதுமில்லை … (002:256) என்ற அனைத்தையும் மிகைத்த அல்லாஹ்வின் கூற்றும் இங்குப் பொருந்திப் பார்க்கத் தக்கன.