حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مَيْسَرَةَ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ :
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ
لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ
“சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர், “உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று அல்லாஹ் அவர்களிடம் கேட்பான். அதற்கு அவர்கள், ” (இறைவா! எங்களுக்குப் பேரருள் புரிந்து) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்தாயே! (எங்களுக்கு வேறென்ன வேண்டும்?)” என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி(அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்கத் தம் இறைவனைக் காண்பதைவிட அவர்களுக்கு வேறேதும் அதிவிருப்பமாக இருக்காது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸுஹைப் (ரலி)
குறிப்பு:
ஹம்மாதிபுனு ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பில், “நன்மை செய்தோருக்கு (உரிய கூலியான) நன்மையும் மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும் …” என்ற (10:26) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.